(Reading time: 12 - 23 minutes)

17. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 17

Puthir podum nenjam

ரணிதரன் தன்னை அறிமுகப் படுத்தியதுமே..

“அந்த மிஸ்டர் பி பரணிதரன் பரணி நட்சத்திரம் மேஷ...”

என்று அஞ்சனா ஏக்கத்தோடு கேட்டதும்.... அடுத்த நாள் அழுது வீங்கிய அவள் முகமும்.. அடுத்தடுத்து தோன்றி மறைந்தது.. ஆர்யமனுக்குள்..

ஆம், அன்று தினேஷ் அவன் பெயரை உச்சரித்த பொழுது கூட இதே தான்... இதே உணர்வு தான்... அவனையுமறியாது நித்தியோடு தொடர்பு படுத்தி... ஏதோ தீங்கு வரப் போகிறதோ... என்ற உணர்வு அவனை ஆட்கொள்ள.... உடல் விரைக்க நின்றான் ஆர்யமன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

அவனின் அமைதியும்... இறுக்கமான தோற்றமே.. பரணிதரனுக்கு அச்சத்தை உண்டு செய்ய...

‘ஆர்யமன் முடிவு எடுத்தா மாத்துறது கஷ்டம்!! மேலும் கட்டாயப் படுத்தினா  சுத்தமா பிடிக்காது...’,

என்று தினேஷ் எச்சரித்ததை நினைவு கூர்ந்த பரணிதரன் தயக்கத்துடன்...

“நான் இன்டெக் சிஸ்டம்ஸ் சீனியர் ப்ரோகிராமர்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்....” என்று இழுக்கவும்...

தன் உள்ளுணர்வின் தாக்கத்தில் இருந்து மிகவும் கடினப்பட்டு வெளியே வந்த ஆர்யமன்... இவன் தினேஷ் சொல்லி தான் தன்னை பார்க்க வந்திருப்பான் என்று கணித்து விட்டான்.

‘தினேஷ்ஷூக்கு என்ன இவன் மேல அப்படி ஒரு கர்டசி!’, என்று அதைத் தொடர்ந்து தினேஷ் மீதும் கோபம் மூண்டது..

ஒரு செருமலுடன் தன்னை நிலைப்படுத்தி.. பரணிதரனை ஏறிட்டு...

“எதுவா இருந்தாலும்.. ஹச். ஆர்.கிட்டே பேசிக்கோங்க!”,

என்று சிறிதும் நிதானம் தவறாது... அதே சமயம் பேச்சில் மட்டும் அந்த அழுத்தத்தை காட்டி...  அங்கிருந்து கிளம்ப யத்தனிக்க, 

‘இப்படி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா பேசிட்டு போறாரே!!!’,

எப்படி அவனை அணுகவென்று கையைப் பிசைந்த படி பரணிதரன் தன் நண்பனைப் பார்க்க...

அதை உணர்ந்தவனாக.. அவன் நண்பன் இடையிட்டான் வேகமாக...

“சர்.. ப்ளீஸ்.. அப்பா இல்லாம.. அதிக சுமை இவனுக்கு! இவன் சம்பளத்தை நம்பி தான் தங்கச்சி படிப்பில் இருந்து வீட்டு லோன் வரைக்கும் இருக்கு! இப்ப தான் கை ஊன ஆரம்பிச்சி..”

என்று சொல்லிக் கொண்டிருந்தவன்.. ஆர்யமனின் முறைப்பில் அதை முடிக்காது அப்படியே விக்கித்துப் போய் நின்றான்.

‘வேலை கேட்பதற்கு கூட துணைக்கு ஆளை கூட்டி வந்து நிற்கிறானே..’ என்று ஆத்திரம் வர...

அதற்குள் பரணிதரன்... கடைசி முயற்சியாக...

“ப்ளீஸ்.. ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்களேன்! சம்பளம் கூட என் வேலையைப் பார்த்துட்டு முடிவு செய்யுங்க...”,

என்று இறைஞ்சுதலில் இறங்க..

இத்தனையும் ஆர்யமன் மூளை ஏற்காவிடிலும்.. மனசாட்சி அவனைக் கடிய ஆரம்பித்திருந்தது...

‘ஒரு நிமிஷம் அவன் முகத்தைப் பார்! இன்னைக்கு நீ நல்லாயிருக்கேங்கிறதுக்கு  மத்தவங்களை கீழே பார்ப்பியா? கோடிக்கணக்கில் செலவு செய்து எத்தனையோ பேரை படிக்க வைக்க நினைக்கிறே.. கண்ணு முன்னாலே ஒருத்தன் கஷ்டபடுறேன் கேட்கிறான்.. அப்படியே விட்டுடுவியா?’

என்று!!!

வெளியில் இறுக்கத்தை காட்டினாலும்..

“நமக்கு ஏதோ தோணுதுன்னு.. கஷ்டத்தில் இருக்கிறவனுக்கு ஒரு வாய்ப்பு கூடவா கொடுக்காம இருப்பே?”

என்ற மனசாட்சியின் கேள்விக்கு இளக ஆரம்பித்தான்.

கூடவே,

‘நல்ல எண்ணத்தில் செய்றது எதுவும் நல்லதில் தான் முடியும்ன்னு அவனை வளர்த்த அன்பு இல்லத்தின் சிவநேசன் சொன்னதை நினைவு கூர்ந்து தன்  உள்ளுணர்வின் எச்சரிக்கையைப் பின்னுக்கு தள்ளியவன்..

பரணிதரனை நோக்கி...

“நீங்க மட்டும் வாங்க!!!”, என்று அழைத்து விட்டு விறு விறுவென்று முன்னே நடக்க..

சிறு நம்பிக்கை துளிர் விட்டது பரணிதரனுக்கு...

‘கடவுளே எல்லாம் நல்ல படியா நடக்கணும்..’, என்று எண்ணிக் கொண்டே தன் நண்பனிடம் கண்களால் விடைபெற்று ஆர்யமனின் பின் சென்றான்.

அலுவலக வளாகதத்திற்குள் நடந்த வந்த இருவருக்கும் இடையே இருந்த  அமைதியை கலைப்பது போல வந்தது அந்த சிரிப்பொலி!

அவர்களின் கவனம் சத்தம் வந்த திசை நோக்கி செல்ல...

சற்று தொலைவில்... தனது SUVவின் கதவில் சாய்ந்து மார்ப்புக்கு குறுக்காக கைகளைக் கட்டி ராகவ் நிற்க... அவன் முன்னே அஞ்சனா... இருவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.