(Reading time: 12 - 23 minutes)

ஸ்கின்னி ஜீன்ஸ்...... ‘போலோ’ டி-ஷர்ட்.. ஆறு இன்ச் பாயின்டட் ஹீல்ஸ்... நவநாகரீக மங்கையாக நின்றிருந்தவள், சிரிப்பினிடையே,

ராகவ்வின் குளிர் கண்ணாடியை தன் ஒற்றை விரலால் அவன் சிகை மீது நகர்த்தி விட்டு... மற்றொரு கையில் இருந்த திருநீற்றை அவன் நெற்றியில் வைத்து விட்டவள்.. அதை சரி செய்யும் பொழுது... தன் கையால் அவன் கண்களை மறித்து.. அவன் முகத்தருகே சென்று ஊதி விட்டாள்... 

அதை செய்யும் பொழுது குவியும் அவளது இதழ்கள்.. வழக்கம் போல ஆர்யமனை ஈர்க்க.... அதனை ரசனையுடன் பார்த்தவன் கண்கள் அருகே இருந்த ராகவ்வைக் கண்டதும்...

‘இவன் தான் பாவா வா????’, தன்னையுமறியாது சத்தமின்றி ஏக்க பெருமூச்சொன்று வந்தது அவனிடம்!

‘காலங்காத்தாலே கடலையை போட்டுக்கிட்டு நிக்கிறான்..  வேலை வெட்டி இல்லாம.......!!!!!!”

“பின்ன!!!! இந்த அரை லூசு கூட சேர்ந்தவன் எல்லாம் எப்படி இருப்பான்?”,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

இப்படி எல்லாம் எண்ணுவது அவன் இயல்பே அல்ல!!! வண்டி வண்டியாக பொருமினான்.

‘இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாதவங்களை திட்டுறே! முதல்ல அங்கிருந்து கண்ணை எடு!’, என்று சற்றே தெளிந்த உள்ளம் அவன் தவறை உரைக்க..

பார்வையை அகற்றியவனுக்கு.. ஏதோ பொறி தட்ட... திகைப்புடன் மீண்டும் அவளைப் பார்த்தான் - க்ராஃப் வெட்டியிருந்தாள்!!!!

‘நேத்தே இப்படி தான் இருந்தாளோ???...’, என்று ஒரு மனம் கேள்வி கேட்க...

‘ம்ம்க்கும்.. அதையெல்லாம் நீ எங்கேடா பார்த்தே!’, என்று மற்றொரு மனம் சொன்னதும்.. ‘அட..!!!’, என்று மானசீகமாக புறங்கையால் பிடரியைத் தட்டி மென்னகையுடன் பார்வையை விலக்கி..

பரணிதரனிடம் திரும்ப,

அவனும் அஞ்சனாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில்... அவன் வயதிற்கு உரிய... ரசனையோ... ஆர்வமோ இல்லாமல் அது ஒருவித அருவருப்பை சுமந்து நிற்க..

அதைக் கண்ட ஆர்யமனுக்கு அவனையும் அறியாமல் சுரீரென்று கோபம் வந்தது. ஆனால், இவன் அவளுக்கு தெரிந்தவனாக இருப்பானோ.. அவள் கூட கேட்டாளே! நெஞ்சோரம் ஒரு கேள்வி வர...

“வேண்டியவங்களா?”, மொட்டையாக கேட்டான்.. அவன் பார்வையைத் தொடர்ந்து..

அவனுக்கு கோவில் சம்பவம் மட்டுமே நினைவில் இருந்தது தவிர..  அவள் முகம் எல்லாம் நினைவில் இல்லை... அதுவும் இப்பொழுது க்ராஃப் வெட்டியிருப்பதால் சுத்தமாக அவனுக்கு அடையாளம் தெரியவில்லை...

ஆனாலும்.. ஒரு ஆணிடம் நெருங்கி நின்று அவள் பழகுவது....

‘பொது இடம்ன்னு கூட பார்க்காம ஒட்டி உறவாடி..’  என்ற கீழ்த்தரமான எண்ணம் அவனுக்குள் இருந்தது!

ஆர்யமன் தன்னைக் கேட்டதும்... வேகமாக அவனிடம் திரும்பிய பரணிக்கு வார்த்தை கூட வரவில்லை! தலை மட்டும் அசைந்தது மறுப்பாக...

அதுவரை அஞ்சனாவைப் பார்த்திருந்த ஆர்யமன்.. இப்பொழுது பரணிதரனை நேர் கொண்டு பார்த்து,

“அப்போ வேண்டாதவங்களா?”, கேட்க...

“இல்லைங்க!”, என்று பரணிதரன் சொல்லவும்.. அத்தனை சீற்றம் ஆர்யமனின் முகத்தில்...

“அப்புறம் ஏன்.....????”, என்று கண்டிக்கும் தொனியில் அவன் கேட்டதே..

‘ஏன் அவளை அப்படி இழிவாக பார்த்தாய்?’, என்கிறான் என்பது புரிந்தது பரணிதரனுக்கு... தன் எண்ணத்தை படித்து விட்டானே என்ற திகைப்பு.. தோன்றி மறையும் முன்.. ‘இப்போ என்ன செய்றது..’ என்ற பயம் வந்து சேர... என்ன சொல்வதென்று தயங்கி்..

“இ...இல்லை... சும்மா...”, என்று திணற..

அதற்கு மேல் ஆர்யமன் அவனைப் பார்க்கவும் இல்லை. அதைப் பற்றி பேசவும் இல்லை ! ஆனால், அவனிடமிருந்த பார்வையை எடுக்கும் முன் அந்த ஷணம்... அவன் பார்வையில் இருந்த மிரட்டல் நிச்சயம் பரணிதரனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது!

பரணிதரனை தனியறைக்கு அழைத்து வந்த ஆர்யமனுக்கு அவனிடம்  பெரிதாக கேட்க ஒன்றுமில்லை. ஏற்கனவே, அனுமானித்து விட்டது தான்!

“உங்களை வேலைக்கு எடுத்தா, எவ்வளோ சீக்கிரம் ஜாயின் பண்ண முடியும்?”, என்று கேட்டான் பொதுவாக..

“ஒரு இரண்டு மூணு வாரமாவது டைம் வேணும்! இப்போ செய்துகிட்டு இருக்கிற  ப்ராஜெக்ட்டை அப்படியே விட முடியாது... ”

என்று பரணிதரன் சொல்ல...

அவனது இந்த பதில் பிடித்தது ஆர்யமனுக்கு - அதிலும் ஆட்குறைப்பு நடந்து கொண்டிருந்தாலும், அவனுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிப்பதில் விசுவாசமாக உள்ளான்!

‘பொறுப்பு இருக்கிறது! ஆனாலும், இன்னும் நிறைய மாறணும் இவன்!’, என்று எண்ணிக் கொண்டவனாக..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.