(Reading time: 12 - 23 minutes)

ங்க வீக்னஸ் என்னன்னு நினைக்கிறீங்க பரணி?”

“அது... கம்யூனிகேஷன் ஸ்கில்!”, என்றான் அவன்.. அதை சொல்லி தான் பலரும் அவனை நிராகரித்தனர்!

அவன் சொன்னதைக் கேட்டதும், “ம்ம்... எக்ஸாக்ட்லி!!!”, என்று  ஆமோதிப்பதாக தலையசைத்த ஆர்யமனைக் கண்டு,

‘இவரும் இதை சொல்லி நம்மை தட்டி கழிக்கப் போகிறாரா!’, என்று அஞ்சி,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“அது நான் முழுக்க முழுக்க தமிழ் மீடியம்.. அதான்”, என்று பரணிதரன் காரணம் சொல்ல...

“பேசுற மொழியில் உள்ள பிரச்சனை, பேசப் பேச சரியாகிடும்.. ஆனா, உங்களோட பெரிய பிரச்சனை பேசுற விதம் தான்!”,

என்று அவன் சொன்னதும்... அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல் அவன் முகத்தைப் பார்த்த படியே பரணிதரன் இருக்க...

“இன்னைக்கு நடந்ததை வைச்சு நான் அப்சர்வ் பண்ணதை சொல்றேன்..”,

“நம்பர் ஒன் - உங்க பயம்! அழுத பிள்ளைக்கு தான் பால்.. உங்களுக்காக உங்க ஃப்ரண்ட்டை அழ சொல்றீங்க? உங்களுக்கு வேலை வேணும்னா.. நீங்க தானே  பேசணும்?”

“நம்பர் டூ - உங்க தன்னம்பிக்கை! - எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு ஏன் கெஞ்சணும்? உங்க திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுங்க ன்னு உறுதியா பேசினா தானே.. அந்த நம்பிக்கை எனக்கும் வரும்?”

“உங்க திறமை நூறு சதவிகிதம்ன்னா.. அது வெளிக்காட்ட இருநூறு சதவீகிதம் முயற்சி செய்யணும்!”

“நம்பர் த்ரீ - உங்க எண்ணங்கள் - உங்களுக்கு கீழே உள்ளவங்க அதையே தான் உள்வாங்குவாங்க! தப்பான எடுத்துக்காட்டா இருந்திட கூடாது!”

என்று பட்டியலிட்டவனின் முகம் கடுமையாக மாறியது.....

“வெளியில் பார்த்த பொண்ணு நம்ம டீம் தான்! தெரியுமா?”, என்று கேட்டான் கோபத்தை கண்களில் தேக்கி..

அதுவரை அவன் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த பரணிதரன், அதைக் கேட்டதும் திகைத்தான். அதற்காக அவன் மனது அவள் மீது வைத்திருந்த அனுமானத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அவன் பயம், ‘அய்யோ.. இவர் நம்மை தப்பாக நினைத்து... வேலை கொடுக்காமல் போய் விடுவாரோ’, என்றளவே இருந்தது..

ஆர்யமன் தொடர்ந்தான்...

“ஒருத்தவங்களை பார்த்த பார்வையில் எடை போடாம இருக்காது நம்ம மூளை! ஆனா, அதுக்காக அதை நம்ம எண்ணங்களோட கலக்க விட்டு... இவங்க இப்படி தான்னு ஜட்ஜ் செய்றது பெரிய தப்பு!”

அத்தனை கண்டிப்புடன்.. கண்கள் இடுங்க அவன் சொன்னதும்... சரி சரியென வேகமாக பரணி தலையசைக்க....

“இப்போ வேலை கிடைச்சா போதும்ன்னு தலையாட்டுறீங்களா?”, என்று அதற்கும் அவன் மடக்க.. திரு திருவென்று விழித்த பரணி...

“இல்லை!!! நீங்க சொல்றது புரியுது”, என்றான் சமாளிப்பாய்..

‘இப்போ கூட அப்படி செய்ய மாட்டேன்னு ஒரு வார்த்தைக்காவது வாயைத் திறந்து சொல்றானா பார்!’, என்ற எரிச்சல் ஆர்யமனுக்கு!

அவனை வேலைக்கு எடுக்கவா வேண்டாமா என்ற மனப் போராட்டத்தில்.. அவன் ஏழ்மையே முன் வந்து நிற்க..

“உங்களை மூணு மாசம் காண்டிராக்ட்ல தான் அப்பாயின்ட் பண்ணுவேன்! அதுக்குள்ளே உங்க அட்டிட்யூட்டை மாத்துங்க இல்லை.... வேற வேலை தேடுங்க!”

என்ற நிபந்தனையுடன் அவன் வேலையை உறுதி செய்ய.. அதைக் கேட்ட பரணிதரன் ‘அப்பாடா’ என்று மூச்சு விடுவதற்குள்...

“பட், அதுக்கு முன்னாலே எங்க டீம் ஆர்க்கிடெக்ட்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்! வாங்க”, என்று மீண்டும் கலங்கடித்தான் ஆர்யமன்.

ராகவ் சென்ற பின், எப்பொழுதும் போல தனது ட்ரையினிங் ரூம்  வந்த அஞ்சனாவிற்கு..

கடைசியாக அவள் பாதியில் விட்டுச் சென்ற கொலாஜ் வொர்க் நினைவிற்கு வந்து... அது வைக்கபட்டிருந்த அறைக்கு சென்று அதைத் தேட... அங்கோ அது இருந்த சுவடு கூட இல்லை!

“என்னடா இது?? கண்ணுலே காணோமே  அந்த தேங்க்ஸ் கார்ட்??!!!!!!”, என்று அவள் முழிக்கும் பொழுது... சசி அவளை அலைபேசியில் அழைக்க அந்த அழைப்பை எடுத்ததும்,

“அஞ்சு!!!! ட்ரையினிங் ரூம்லே இருப்பேன்னு பார்த்தா, எங்க போயிட்டே? சீக்கிரம் வா.. என்னோட பிளேஸ்க்கு”, என்று சசி அவசரமாக சொல்ல...

“ஏன்?? என்ன விஷயம்? எதுக்கு தேடுறே!”, என்று அஞ்சனா கேட்க...

“ஹே... என்ன விஷயமாவா????!!!!!’, என்று நீட்டி முழக்கிய சசி...

“அப்போ நீ ஈமெயில்லே பார்க்கலையா???”, என்று சசி வியப்புடன் கேட்க...

துணுக்குற்றாள் அஞ்சனா! ஈமெயிலா.. என்று ஒரு நொடி யோசித்தவள் பின்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.