(Reading time: 13 - 25 minutes)

33. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Ithanai naalai engirunthai

சுட்டெறிக்கும் சூரியனை பொருட்படுத்தாமல், அய்யய்யோ இது பேச்சுப் போட்டி மேடை இல்லைங்க.. நம்ம ஷக்தி – மித்ராவின் ரூமில நடக்குறததான் சொல்ல வந்தேன்.. காலை கதிரவன் சுள்ளென முகத்தில் முத்தமிடுவதும் தெரியாமல் உறங்கிய மனைவியின் கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு விட்டு கள்வனாய் அன்றைய தினத்தை தொடங்கினான் ஷக்தி.

அவனிடம் மனம்விட்டு பேசியப்பின் தெளிவாய் இருந்தாள் முகில்மதி.. ஷக்தி அவனின் அறையில் இருந்து வெளிவரவும், முகில்மதி கண்விழிக்கவும் சரியாய் இருந்தது. “ குட் மார்னிங் மதி”

“குட் மார்னிங் அண்ணா..”

“ நல்லா தூங்குனியா?”

“ம்ம்ம் ஆமாண்ணா…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சுச்சியின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்... 

படிக்க தவறாதீர்கள்...

“அதான் இன்னும் நேரம் இருக்கே! நல்லா தூங்க வேண்டியது தானே?”.. அவனின் கேள்விக்கு பதில்சொல்லாமல் வீட்டில்பார்வையை சுழற்றிவிட்டு,

“அண்ணா தினமும் இந்த டைலாக்கை சொல்லித்தான் அண்ணியை கும்பகர்ணியாய் மாற்றி வெச்சு இருக்கீங்களா?” என்று சிரித்தாள். ஒருமுறை பீதியுடன் தங்களது அறையை பார்த்தான் ஷக்தி.. நல்லவேளை மித்ராவின் காதில் ஏதும் விழவில்லை..

“ஹேய் வாலு, உன் வாலுத்தனத்தை காட்டுறதுக்கு என் பொண்டாட்டி தான் கிடைச்சாளா?” என்று சத்தமாய் கூறியவன்,தங்கையின் அருகில் வந்து

“ கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் உங்கண்ணி கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருந்தாளா?” என்று கேட்டு வைத்தான் ஷக்தி.. ஷக்தியின் பயந்த பாவனையும் அதற்கு நேற்மாறாய் ஒலித்த குறும்பு பேச்சும் முகில்மதியை மலர்ந்து சிரிக்க வைத்தது..

மித்ராவினால் ஷக்தியிடம் ஏற்பட்ட மாற்றங்களை அவளால் கண்கூடாய் காண முடிந்தது.. இப்பொழுதும் அவசியம் இல்லாத இடங்களில் மௌனம் காப்பது, அளவுக்கு அதிகமான அன்பினை மனதிற்குள் தேக்கி வைப்பது, அவ்வப்போது ஒற்றை சொல்லில் பதில் கூறுவது என்று அவனுக்கென இருந்த அடையாளங்கள் மாறாமல் தான் இருந்தது.. அதே வேளை, அவனிடம் எப்போதும் கூடி இருக்கும் இறுக்கம் தளர்ந்தது போலத்தான் தெரிந்தது., மகிழ்ச்சியான வாழ்க்கை அவனின் வசீகரத்திலும் பிரதிபலித்தது. மொத்தத்தில் தனது அண்ணனின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாளோ அப்படியே இருந்தான் ஷக்தி..

அதே போல மித்ராவிடமும் ஷக்தியின் சாயல் இருந்தது.. இக்கட்டான சூழ்நிலையில் யோசித்து குறைவாய் பேசுவது, எதிராளியின் பேச்சினை பொறுமையாய் செவிமடுப்பது, அவள்வீட்டில் செல்லம் கொஞ்சியப்படி செய்யாமல் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை கூட,இங்கு மித்ரா தானாகவே எடுத்து செய்தாள்.. அவளின் , வேலைக்கென ஷக்தி ஒதுக்கி வைத்த அறை மிக நேர்த்தியாய் இருந்தது. “சித்ரா அத்தை இதை பார்த்தால் ரொம்பசந்தோஷப்படுவாங்க” என்று முகில்மதியே, மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

இவர்களின் குணங்களின் பறிமாற்றத்தை பார்க்கும்போது என்றோ படித்த கவிதை தான் நியாபகத்திற்கு வந்துது.

மிகவும் நுணுக்கமான உணர்விது !

உனக்கென்று தனித்துவம், அதில்

நீ காக்கும் மகத்துவம்,

இரண்டும் மாசுறாமல், அதேவேளையில்,

எனக்கான சின்னஞ்சிரு உலகத்தில்,

உன்னை இணைத்து பார்க்க நினைத்த நாள் எல்லாம்,

என் டைரியே, தன் மீது எழுதிக்கொள்ள அனுமதி கொடுத்ததை

எண்ணி பெருமைப்பட்ட நாட்கள்…!

அன்று தனக்கு விளங்காத கவிதையின் பொருள் இன்று விளங்கியது..! அன்று புரியாத காதலின் அர்த்தம் கூட இன்று புரிந்தது..

அண்ணனும் தங்கையுமாய் சேர்ந்து அரட்டை அடித்து சிரித்து கொண்டிருந்த சத்ததில் கண் விழித்தாள் சங்கமித்ரா.. “அடவிடிஞ்சிருச்சா !!” என்றப்படி கண்ணாடியை பார்க்க காலைமணி 10 என்று காட்டியது… “அச்சோ, இனியாவீட்டிற்கு போகலையே” என்று முணகியவள்,

“மாமா…டேய் மாமா…ஏன் என்னை எழுப்பல?” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கு முகில்மதி அதிர்ச்சியாய் பார்க்க, ஷக்தி அசடு வழிந்தான்.. அப்போதுதான் , மித்ரா திருமணதிற்கு பின் தனக்கு மிகவும் மரியாதை தருவதாய் பீலாவிட்டு கொண்டிருந்தான் ஷக்தி.. அவன் மொத்தமாய் சொல்லி முடிப்பதற்குள் மித்ரா “டேய் மாமா” என்றழைக்கவும் ஷக்தியின் முகத்திலசடு வழிந்தது.. மித்ராவுமே, முகில்மதி அங்கு இருக்கும்ந நினைவே இல்லாமல்தான் அப்படி பேசி இருந்தாள். இருப்பினும் ஷக்தியின் மனைவியாச்சே!சமாளிக்கசொல்லியா தரணும்? சட்டென முகபாவனையை மாற்றி கொண்டு

“மதி காஃபி குடிச்சியா ? இரு நான் போட்டு தரேன்..மாமா நீங்கப் நகறுங்கள்” என்று இருவரையும் விரட்டினாள். அதன்பின் வேலையில் மூழ்கியப்படியே, நேற்று நடந்ததை நினைவு கூர்ந்தாள் மித்ரா. நேற்று அவள் பயங்கர மனப்போராட்டத்தில் இருந்தது, நினைவில் வந்தது..ஷக்தியும் முகிமதியும் பேசட்டும் என்று தனிமையை கொடுத்தவளுக்கு சிறிது நேரத்திலேயே இருப்பு கொள்ளவில்லை.. ஷக்தி அதிகமாய் கோபபட்டு விட்டால், முகில்மதி எப்படி சமாளிப்பாள்? தான் அவளுடன் இருக்க வேண்டுமோ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.