(Reading time: 13 - 25 minutes)

னால் இப்போது எப்படி வெளியில் செல்வது? எதுவாகினாலும் ஷக்தி பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு சிறிது நேரத்தில் வந்துவிட, அயர்வாய் கட்டிலில் படுத்தாள் மித்ரா.. அவளுக்கும் ஷக்தியிடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தன.. முதல்  விஷயமாய் தனது நண்பனின் காதலைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதை உறுதியாய் கூற வேண்டும்.. !

ஷக்தி தன்னை தவறாய் நினைப்பவன் இல்லை என்பது அவளுக்கு நன்றாக தெரியும் .இருந்தாலும் அவனுக்குத் தெரியாமல் தான் இதில் இணைந்திருப்பதாய் அவன் நினைத்திட கூடாது என்ற தவிப்பு இருந்தது அவளுக்குள் .. சரி அவன் வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தபடி ஹெட்போனில் பாடல் கேட்டு கொண்டிருந்தவளை நித்திரா தேவி ஆரத் தழுவிக் கொள்ளவும் , ஷக்தி அங்கு வந்து அவளின் செல்போனை தூரம் வைத்துவிட்டு அவள் கூந்தல் கற்றை ஒதுக்கி நெற்றில் முத்தமிட்டுவிட்டு சில நிமிடம் அவளை இமைக்காமல் ரசித்து பார்த்தது எதுவுமே அவளுக்கு தெரியாமல் போயிருந்தது ..

ஷக்தியிடம்  எப்போது பேசலாம் என்று அவள் யோசித்து கொண்டிருக்க அடுப்பில் பால் பொங்கி வழிந்தது ..

"அய்யயோ அண்ணி ! இதுதான் நீங்க எங்களுக்காக நீங்க சமைக்கிற லட்சணமா ? " என்று சிரித்தபடி அடுப்பை அணைத்தாள் ..

" இல்ல மதி அது வந்து " என்று மித்ரா விழிக்க , வழக்கம் போல கைகளை ஸ்டைலாய் கட்டிகொட்டு அங்கு நின்றான் ஷக்தி ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்.... 

படிக்க தவறாதீர்கள்...

"அண்ணா, அண்ணிய நீங்க கிட்சன் பக்கம் விட்டதே இல்லை போல ! இப்படி முழிக்கிறாங்க " என்று அவள் வாரவும்

" அட ஏன் மா நீ வேற ? இப்போ நான் ஆமான்னு உண்மையை சொன்னா , அவ என்னை அடிச்சு துவைச்சிடுவா " என்று ஷக்தி பயப்பட "

"மாமா" என பற்களை கடித்தபடி அவனை துரத்தினாள்  சங்கமித்ரா.

"ஹே மிது வேணாம்"

"காலையிலேயே நோ வன்முறை "

" இன்னைக்கு உன் மண்டைய உடைக்காம விட மாட்டேன் மாமா "

" ஹே நான் பாவம் டீ "

" யாரு நீ பாவமா ? விட்டா ஊரையே வித்துடுவ .. உன் தங்கச்சி கூட ஆட்டம் போட்டு என்னை கலாய்கிறியா ?"

என்று கத்திகொண்டே அவள்  ஓட, இருவருக்குமே மூச்சு வாங்கிட கொஞ்ச நேரம் நின்றனர்..

" ஆமாடி அப்படித்தான் என்ன பண்ணுவ ?" என்று ஷக்தி மூச்சிரைக்க வசனம் பேச , "டேய் இருடா உன்னைய கொல்லுறேன் " என்றவாறு மீண்டும் துரத்தினாள்  மித்ரா..

"ராட்சசி விடு டீ "

"முடியாது"

"அடியே நான் உனக்கு ஒரே ஒரு புருஷன் டீ "

"மத்தவங்களுக்கு மட்டும் என்ன ஏழெட்டு புருஷனா இருக்கு ?" என்று கேட்டபடி மித்ரா அவனை சரமாரியாய் அடிக்க தொடங்கினாள்..

" ஆஅ ஷக்தி வேற வழியே இல்ல .. பேசாம ஒரு ரோமேண்டிக் லுக் விட்டு உன் உயிரை காபாற்றிக்கோ" என்று மூளை அறிவுறுத்தவும் , தனது அறைக்குள் ஓடி வந்தவளை இடையோடு பற்றி நிறுத்தி மந்தகாசமாய் சிரித்தான் ஷக்தி ..

"ஷக்தீ "

"ம்ம்ம்"

" என்ன ?"

"என்னடீ என்ன ?"

"ஒன்னும் இல்ல"

" பார்த்தா அப்படி தெரியலையே "

"டேய் கைய எடு "

"மாட்டேன் "

"ஷக்தி , முகில் என்னை தேடுவா "

" இவ்வளவு நேரம் தேடலையே "

"விடு விடு எனக்கு வேலை இருக்கு "

" சாரி சொல்லு "

"அய்யே நல்ல கதையா இருக்கே .. நான் ஏன்டா சாரி சொல்லணும் "

"அப்போ ஓகே இப்படியே என்கூட நில்லு "

" ஷக்தீ "

"லூசு , விட்டு ரொம்ப நேரம் ஆச்சு ..சீன் போடாம போ போ " என்றான் ஷக்தி .. உண்மைதான் .. அவளை விடுவித்து நின்றுத்தான் பேசி கொண்டிருந்தான் அவன் ..அதை கூட உணராமல் அவன் அருகாமையில் தன்னிலை மறந்திருந்தாள் மித்ரா.. வெட்கம் கவ்விய முகத்தை மறைத்தபடி அவள் அங்கிருந்து சென்றதும் உல்லாசமாய் சிரித்தான் ஷக்தி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.