(Reading time: 13 - 25 minutes)

க்தியுடன்  பேசியதும் தெளிவான மனநிலையில் இருந்தாள் முகில்மதி ...அவர்களின் காதலுக்கு அவன் நேரடியாய் சம்மதம் சொல்லவில்லைத்தான் ..! எனினும் அவளின் சில குழப்பங்களை தீர்த்து வைத்திருந்தான் அவன் .. மித்ரா ஷக்தி இருவரும் எடுத்து கூறியும் என்றே ஊருக்கு கிளம்புகிறேன் என்று விட்டாள்  அவள் ..

" சரி அட்லீஸ்ட்  எழில் கூட போயேன் மதி .. பஸ் ல நான் உன்னை தனியா அனுப்ப மாட்டேன் "என்றாள்  மித்ரா. ஷக்திக்குமே அதுதான் சரியென்று தோன்றியது ..

" ஆமா மதி ,நீ வரும்போது அன்புகூடத்தானே வந்த ? இப்போ தனியா போனால் நல்லா இருக்காது "என்றான் ..

"ஐயோ அவனுடன் தனியாய் போனால்தான் அவளுக்கு பிரச்சனையே "என்பதை எப்படி விளக்குவாள் முகில்மதி ? ஏனோ , இந்த முறை எழிலை சமாதானம் செய்துவிட முடியும் என்று அவளுக்கு தோன்றவே இல்லை .. அவனிடம் தனியாய் மாட்டிக் கொண்டு அவனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ, என்ற பயத்தில் தான் பஸ்ஸில் போகிறேன் என்றாள்  மதி..மேலும் காலையில் அவள் அவனுக்கு அனுப்பிய மேசெஜிற்கு எந்த பதில் வரவில்லை .. போனையும் அவன் எடுக்கவில்லை .. அவள் முகத்தில் தயக்கம் தெரியவும் ஷக்தி, மித்ரா இருவருமே என்னவென்று வினவினார்கள் ..

" உன் மனசுல என்ன கவலை .. சொல்லு மதி "

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

குருராஜாஜனின் "உனக்காக மண்ணில் வந்தேன்" - Romantic fantasy love story 

படிக்க தவறாதீர்கள்...

" இல்ல அண்ணி , எழில்.."

"சொல்லு அவனுக்கென்ன ?"

" அவர் வர மாட்டாரு .. "

".."

"நேற்று இருந்து என்கிட்ட பேசல .. இப்பவும் தான் .. ! நான் பஸ்ஸிலே போறேனே "என்று திக்கி திணறி பேசினாள்  முகில்மதி ..

" நீ இரு நான் கால் பண்ணுறேன் அவனுக்கு ... லூசு சும்மா நடிப்பான் "என்று மித்ரா போனை எடுக்கவும்

" ஆமா லூசுடைய ப்ரண்டு  லூசாக தானே இருப்பான் " என்று ஷக்தி முனக

" உன் தங்கச்சி வீட்டுக்கு போகட்டும் , அப்பறமா உன்னை கவனிக்கிறேன் " என்று மிரட்டிவிட்டு சென்றாள்  மித்ரா .

"ஹேலோ "

" டேய் அன்பு "

"சொல்லுங்க மிசர்ஸ் ஷக்தி "

" என்னடா இன்னும் கோபமாய் தான் இருக்கியா ?"

"ச்ச்ச ச்ச்ச நீங்க இவ்வளவு பெரிய ஆளு !உங்க கிட்ட எல்லாம் கோபப்பட முடியுமா ?"

" சரி நான் போனை வைக்கிறேன் "

" ஹும்கும் ... இவ மட்டும் பக்கம் பக்கமாய் என்னை திட்டலாம்.. ஆனா நான் கொஞ்சம் கோவம் வந்த மாதிரி பேசினா உடனே மூக்கு உறிஞ்ச  வேண்டியது " என்று இயல்பாய் பேசினான் அன்பெழிலன் ..

" அதெல்லாம் அப்படித்தான் ..உன்னவிட நான் சின்ன பொண்ணு ...சோ நீதான் விட்டுகொடுத்து போகணும் " என்று மித்ரா சலுகையுடன் செல்லம் கொஞ்சவும்

" எல்லாம் என் நேரம் " என்று அலுத்து கொண்டான் எழில் ...

"சொல்லு டீ என்ன விஷயம் ?"

" முகில் வீட்டுக்கு கிளம்பரா "

"ஓஹோ சரி "

" டேய் , அவ வீட்டுக்கு போகணும்னு சொல்லுறேன் "

" அய்யே,இப்போ என்னடி டிரைவர் வேலை பார்க்கணும் அவ்வளவுதானே ? வந்து தொலையுறேன் " என்றான்  அன்பெழிலன் ..

" டேய் அவ சின்னபொண்ணு ஏதோ  தப்பாக " என்று மித்ரா சமாதானமாய் பேச முயலவும் இடைப்புகுந்தான்  எழில் ..

" மித்ரா , இந்த விஷயத்துல நீ  குறுக்க வராதே ! நான் பார்த்துக்குறேன் ..அவளை ரெடியா இருக்க சொல்லு ..நான் வரேன் " என்று போனை வைத்தான் ..

"என்னாச்சு ஹிட்லர் ?" வெட்டிகொண்டிருந்த  கேரட்டில் ஒரு துண்டை அவனுக்கு ஊட்டியபடி கேட்டாள்  காவியா ..

" நான் கெளம்பறேன் டீ ..மகாராணி அவங்க வீட்டுக்கு போகணுமாம் ..நான் சேவகம் பண்ணிட்டு வரேன் "

" ஹா ஹா "

" எனக்கு கடுப்பா இருக்கு ..உனக்கு சிரிப்பாய் இருக்கா ?"

"டேய் உன்னைய எனக்கு தெரியாதா ? என்னமோ பிடிக்காத வேலையை செய்யுற மாதிரி நடிக்கிறியே ! இஸ்டம் இல்லன்னா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.