(Reading time: 29 - 57 minutes)

னதிலிருந்த இதம் அவன் முகத்தில் பரவுகிறது புன்னகையாக….

“புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் வினு…. அதிக்கு முன்ன மேரேஜ் செய்ய மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டு இருந்தவன்…..அம்மா ஹெல்த் ரொம்பவும் கிரிடிகலாகி ஹாஸ்பிட்டல்ல இருந்த டைம்ல மேரேஜ்க்கு சரின்னு சொன்னேன்….. அதுவும் உன்னை பார்க்கலாம்னு சொன்னதே நான்…..

அந்த சிச்சுவேஷன்லதான் உன்னை பார்க்க வந்தோம், அங்க வந்து இந்த மேரேஜ் வேண்டாம்னு நானே எங்க வீட்ல எப்டி சொல்ல…? சொன்னா எப்டி இருக்கும்னு பாரு…..… ஏதோ அந்த ஹாஸ்பிட்டல் சூழலை தாண்டுற வரைக்கும் நான் அம்மாவ ஏமாத்துன மாதிரி இருக்கும்……. அம்மாவால அதை ஈசியா எடுத்துக்க முடியாது….. அந்த நேரத்து ஹெல்த்துக்கு அவங்களுக்கு அது டூ மச்…..இதே இது உனக்கு என்னை பிடிக்கலைனாலும் அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்தான்….ஸ்டில் சரி வேற இடம் பார்ப்போம்னு கொஞ்சம் ஈசியா எடுத்துட்டு போயிருப்பாங்க….. ”

“சாரி யவிப்பா….”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

“அரேஞ்ச்ட் மேரேஜ்னா அப்டித்தான்… பேசி புரிஞ்சுக்கிற சிச்சுவேஷன்லாம் மேரேஜ் ஃபிக்‌ஸான  பிறகுதான் இதுல சாத்தியம்…..ரெண்டு பேருமே அவங்க அவங்க லெவல்ல எதயாவது குழப்பி இருப்போம்…சோ அத விடு…..” என அந்த பேச்சுக்கு புள்ளி வைத்தவன்

“நான் இங்க என் வினுப்பொண்ண கூட்டிட்டு வந்தது சந்தோஷமா பேசிட்டு இருக்க….சோ ஜாலியான எதாவது மட்டும்தான் பேசலாமாம்….” என்றவன் சுற்றுபுறம் பார்த்துவிட்டு….

“இதுக்கு மேல இங்க நிக்க வேண்டாம் வினு….வா  “ என கை பிடித்து நடத்திப் போனது அவர்கள் காரை தாண்டி சற்று தொலைவில் இருந்த மரத்திற்கு…

மிகவுமே பெரிய மரம்……. அதில் ஒரு ஏணி பொருந்தி இருந்தது….. “மேல ஏறு…” அவன் சொல்ல… ஒரு கணம் மரத்தை நிமிர்ந்து பார்த்த வினி அந்த ஏணியின் வழியாய் ஏறி மேலே போன போது அங்கு கிளைகளுக்கு மத்தியில் மறைந்து தெரிந்தது ஒரு ஒற்றை அறை மரவீடு….

அதற்குள்ளும் செல்லாமல் அதன் மேல் பரப்பிற்கு அதாவது மொட்டை மாடிக்கு அவளை அழைத்துச் சென்றான் யவ்வன்.

“இங்க நைட் வைல்ட் போர்லாம் வந்து பயிரை அழிச்சுடும்….அதுக்காக காவல்க்கு வருவாங்க….அப்ப தங்குறதுக்கான வீடு இது….. நாங்க மூனு பேரும் ஸ்கூல் லீவு விட்டா கண்டிப்பா இங்க வருவோம்….இப்ப வரைக்குமே டைம் கிடைக்கிறப்ப இங்க வர எனக்கு பிடிக்கும்”

தலை நிமிர்த்தி பார்க்கும் உச்சியில் வானத்தையும், பக்கவாட்டில் எங்கும் வெவ்வேறு உயரத்தில் கிளைகளுமாய், அந்த வீடும் அதன் சூழலும் அவளுக்கும் பிடித்திருப்பதாகதான் தோன்றியது அப்போது….

ஒரு ஓரமாக அவளை அமர்த்தி அடுத்து தானுமாக அமர்ந்து கொண்ட யவியோ

“அன்னைக்கு ஐ லவ் யூ சொன்னியே அதுக்கு ரீசன் சொல்லு…… எனக்கு அது தெரியனும் இப்ப…. ” ஆசையும் உரிமையுமாய் அவன்…

“அதுவா சொன்னா கோப படக் கூடாது….பைக்ல பின்னால இருந்துட்டு மொபைல்ல மெயில் பார்த்தேன்…...” நிலவினி விளக்க, முறைத்தான் அவன்….

“இதுக்கு மட்டும்  பயம் வராது என்ன?” அவன் தான்.

அப்பாவி குழந்தையாய் தன் முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தவள்…. அவன் அதில் இளகாததைக் கண்டு

 “இந்த ஒரு டைம் யவி….” என பிள்ளை கெஞ்சலாய் ஆரம்பித்து அவன் முகத்தில் ‘இட்ஸ் ஓகே இன்னொரு டைம் செய்யாத’ என்ற மெசேஜ் மென் புன்னகையாய் பரவ தொடங்கவும்

“நெக்‌ஸ்ட் டைம்ல இருந்து இப்டி செய்றப்ப உங்கட்ட சொல்ல மாட்டேன் என்ன” என முடித்தாள்.

“வாலு….” பின்னாலிருந்த அவளது ஒற்றை சடை பற்றி இழுத்தான் அவன்…

“வெவ் வெவ் வே”

இருள் கவிய  தொடங்கிய அந்த நேரத்தில் கூட இவளது இழுபட்ட இதழ்கள் மீது அமர்ந்த அவன் பார்வையில் பட்டும் படாமல் தெரித்த அந்த தடுமாற்றத்தை உணர்ந்தவள் பேச்சை விஷயத்திற்கு கொண்டு வந்தாள்….. ‘வாய கொடுத்து ஏன் வாங்கி கட்டனும்….’ என்ற ஞானோதயம் காரணம்….

 “ஃபோட்டோஸ் பத்தியும் தெளிவாயிட்டா……  அடுத்து  அந்த மலைல ஃபங்க்ஷனுக்கு போனோம்….. அத்தைட்டயோ இல்ல அம்மாட்டயோ யார்ட்டனாலும் இப்டி ஃபங்க்ஷனுக்கு போறோம்னு சொல்லி இருந்தீங்கன்னா….நம்ம ஊர் வழக்கம்னு சொல்லி ஜ்வெல் இல்லாம கண்டிப்பா கிளம்ப விட்றுக்க மாட்டாங்க…. அப்றம் அதை நான் எப்டி என் அம்மா வீட்ல வச்சுட்டு வர…. அதுக்காகதான் வீட்ல கூட எங்க போறோம்னு சொல்லாம வந்தீங்கன்னு தெரிஞ்சுதா….. நான் என்ன யோசிக்கிறேன்னு  புரிஞ்சு அதுக்கு என் பேரண்ட்ஸ் உங்க பேரண்ட்ஸ்னு எல்லாரையும் ஓவர் ரைட் பண்ணி இவ்ளவு யோசிச்சு சப்போர்ட் செய்றீங்கன்னு புரிஞ்சுது…..   அப்பதான் அங்க இருகரைல என்ட்ட பேசிட்டு இருந்தவங்க உங்கள பத்தி சொன்னாங்க…..” விளையாட்டு தனம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு விளக்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.