(Reading time: 18 - 35 minutes)

காற்றினிலே வரும் கீதம்... - 12 - வத்ஸலா

'Katrinile varum geetham

ன்னதியில் இருந்த கண்ணனை ஒரு முறை திரும்பி பார்த்து கைகூப்பி விட்டு விக்கியுடன் நடந்தாள் வேதா!!! தைரியமாக!!!

சில மணி நேரங்கள் கடக்க.... நேரம் மதியம் ஒன்றை தாண்டிக்கொண்டிருந்தது. நிறையவே படபடப்புடன் தனது கைப்பேசியிலிருந்து கோதையின் அப்பா ஸ்ரீதரின் எண்ணை அழைத்தார் ராஜகோபாலன்!!! அந்த கோவில் அர்ச்சகர்!!!

ஸ்ரீதரன் தனது கைப்பேசியை தொலைத்ததை இவர் அறிந்திருக்கவில்லையே!!! திரும்ப திரும்ப முயல அது அணைக்கப்பட்டே இருந்தது.

'எப்படியாவது ஸ்ரீதரனை தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டுமே??? என்ன செய்வது இப்போது???' தலை சுற்றியது அவருக்கு. கண்கள் இருட்டிக்கொண்டே வர....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

'கண்ணா ... ஏதாவது பண்ணுப்பா...' வாய்விட்டு சொல்லிவிட்டு அப்படியே மயங்கி விழுந்தார் ராஜகோபாலன். அங்கே கும்பகோணம் கோவிலில் ஸ்ரத்தையாக ஹோமம் செய்துக்கொண்டிருந்தார் ஸ்ரீதரன்.

நேரம் மாலை ஏழை தாண்டிக்கொண்டிருக்க இரண்டு வீட்டிலுமே விருந்தினர்கள் வர ஆரம்பித்திருந்தனர்.

கோதை வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரிடமிருந்தும் வேதாவை பற்றிய கேள்விகளே. எல்லாரையும், எல்லாவற்றையும் சமாளித்து சமாளித்து ஓய்ந்துதான் போயிருந்தாள் கோதை. இதுவரை யாரிடமும் இப்படி பொய் பேசி பழக்கமே இல்லை அவளுக்கு. மனதோடு சேர்ந்து தலையும் கனத்தது....

கோகுலுடன் பேச வேண்டும் போல் இருந்தது. அவன் வாங்கிக்கொடுத்த அந்த கைப்பேசியை தேடி களைத்திருந்தாள் அவள். எங்கே வைத்தாளென்று அவளுக்கே நினைவில்லை. ஆனால் அந்த கைப்பேசி இருந்தது!!! இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக இருந்தது.

அப்பாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவருடன் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்போது அவரை எப்படி தொடர்பு கொள்வதாம்???

தளர்ந்து போயிருந்த கால்கள் அருகிலிருந்த கோவிலை நோக்கி நடந்தன. கோவிலை அடைந்து அவள் பிரகாரத்தை சுற்றி வந்து அமர்ந்த நேரத்தில்....

'கோதை மாமி என்ன பண்றேள்???' என்ற குரல் கேட்டு திடுக்கென திரும்பினாள் அவள். தலைசாய்த்து புன்னகைதான் கோகுல்.

எழுந்தே விட்டாள் கோதை 'நீங்க எப்போ வந்தேள்.???' நினைத்தவுடன் எப்படி என் கண் முன்னே வந்து நிற்கிறான்??? மகிழ்ச்சி புன்னகை அவளிடம் மலர்ந்தது நிஜம். 'நேக்கே உங்ககிட்டே பேசணும் போலே இருந்தது...'

அழகாக புன்னகைத்தான் கோகுல். ''நான் ரொம்ப நாழியா இங்கே தான் இருக்கேன். நீ எப்படியும் இங்கே வருவேன்னு தெரியும். அதான் வெயிட் பண்ணிண்டு இருக்கேன்...'.

'பாரு. எவ்வளவு டல்லா ஆயிட்டா பாரு கோதை பொண்ணு. தெரியும் நேக்கு. அதான் பார்க்க வந்தேன். இப்படி உட்காரு' என்றபடியே அவள் அருகில் அமர்ந்தான் கோகுல்  'ஆமாம் உன் போனை எங்கே போட்டே???'

'தெரியலை. எங்கே வெச்சென்னு நேக்கு ஞாபகமே இல்லை..'

'ஒரே சமயத்திலே உங்காத்திலே எல்லா போனும் அவுட்... என்ன பண்றது???' என்றபடியே படித்தான் அவள் முகத்தை. முகம் நிறைய கவலை கோடுகள்.

'நேக்கு ரொம்ப பயமா இருக்கு. அக்கா பத்தி ஏதானும் தெரிஞ்சதா கோகுல். என்னாலே பொய் சொல்ல முடியலை. திடீர்ன்னு அக்கா நம்ம கண் முன்னாடி வந்து நின்னுட்டா நன்னா இருக்கும்ன்னு தோண்றது..'

'வருவா. சீக்கிரம் வருவா. நானும் அவ எங்கே இருக்கான்னு கண்டு பிடிக்க ட்ரை பண்ணிண்டுதான் இருக்கேன்... முரளி சொன்னா மாதிரி ப்ராப்ளம்ஸ் வரத்தான் போறது. சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்... நாளைக்கு வரைக்கும் கொஞ்சம் பொறுமையா தைரியமா இருக்கணும் சரியா???'

'ச... சரி...' என்று அரை குறையாக அசைந்தது அவளது தலை. 'நாளைக்கு எல்லாம் சரியா நடக்குமோன்னோ???'

'கண்டிப்பாடா... எது நடந்தாலும் நான் உன்னை விட்டுட மாட்டேன்..... கவலை படாதே சரியா ' கோகுல் சொல்லிக்கொண்டிருந்த போதே ஒலித்தது அவன் கைப்பேசி. மாயக்கண்ணன் என்று ஒளிர்ந்தது திரை.

'போன் வந்திருக்கு இதோ வந்திடறேன்மா....' கோதையிடம்  சொல்லிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்து அழைப்பை ஏற்றான் கோகுல்.

'சொல்லுடா...'

'ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு.டா... வேதா சென்னையிலிருந்து போன கார் நம்பர் எங்களுக்கு கிடைச்சிருக்கு. ஆக்சுவலி அவளோட முகம் சென்னை - பெங்களுர் ஹை வே டோல் கேட்லே இருக்கிற ஒரு சி.சி கேமராலே பதிவு ஆகி இருக்குடா. அந்த கார் நம்பர்...' என்று மாயக்கண்ணன் சொல்ல அவன் நெஞ்சுக்குள்ளே பூகம்பம்.

மனம் மடமடவென கணக்கு போட அவன் உதடுகள் மெலிதாக உச்சரித்தன  'ச...ர.. வ..ண...ன்..' நம்பவே முடியவில்லை கோகுலால். சரவணனா??? அவன் இப்படி எல்லாம் செய்திருப்பானா???

'கண்ணா...' என்றான் கோகுல் 'அது எங்காத்து கார்டா..'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.