(Reading time: 18 - 35 minutes)

தே நேரத்தில் முரளியின் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்தான் கோகுல். இரவு முதல் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த எந்த கேள்விக்கும் இன்னமும் பதில் கிடைத்தபாடில்லை

கோகுலின் ஒன்று விட்ட சித்தி, மாமா, அத்தை என ஒவ்வொருவராக எதிர்பட எல்லாருடைய வாழ்த்துகளையும் வாங்கிக்கொண்டு, நேரம் காலம் தெரியாமல் அவர்கள் அடித்த ஜோக்குக்கெல்லாம் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு, ஒரு வழியாக தப்பித்து

'மா... காபி மா..' என்றபடி சமையலறையில் நுழைந்தான் கோகுல்

'இன்னைக்கு நோக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கோ???'

'நன்னா...  அதுக்குதான் ஆத்துக்கு வந்தேன்...' கண்சிமிட்டினான் அவன். ஆனால் அந்த கண்சிமிட்டலில் வழக்கமான உற்சாகம் இல்லை என்றுதான் பட்டது அம்மாவுக்கு.

'ஏன்டா... ராத்திரி சரியா தூங்கலையா???'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

'நன்னாதான் மா தூங்கினேன். நான் போய் குளிச்சிட்டு, சந்தியாவந்தனம் பண்ணிட்டு வரேன்..' அம்மா அடுத்த கேள்வியை தொடுப்பதற்குள் அவசரமாக காபியை முடித்துவிட்டு அவர் முகம் பார்க்காமல் அவன் நகர போக..

'டேய்... உன் போனை கொஞ்சம் குடுடா... பெரிம்மாக்கு  ஒரு போன் பண்ணனும்... என் போன் இப்போதான் சார்ஜ் போட்டிருக்கேன்....' அம்மா கேட்க... யோசிக்காமல் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து கொடுத்துவிட்டு...

'பேசிட்டு என் போனையும் சார்ஜ் போட்டுடு ....' சொல்லிவிட்டு தனது அறைக்கு நகர்ந்தான் மகன்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருந்த நிலையில் அங்கே டைனிங் டேபிள் அருகே சார்ஜரில் இணைந்திருந்த கோகுலின் கைப்பேசி ஒலித்தது. மாயக்கண்ணன் என்று ஒளிர்ந்தது திரை. அதை பார்த்தார் அம்மா.

அவருக்கு மாயக்கண்ணனை தெரியும். ஓரிரு முறை அவனை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான் கோகுல். ஒரு வேளை அவனை நிச்சியத்திற்கு அழைத்து இருப்பானாக இருக்கும் என்ற எண்ணத்துடனே அழைப்பை ஏற்றார் தேவகி.

'சொல்லுப்பா... நான் தேவகி பேசறேன்...'

'அம்மா... எப்படி இருக்கீங்க?'

'நன்னா இருக்கேன்பா... கோகுல் குளிச்சிண்டிருக்கான்... அவனண்ட ஏதானும் சொல்லணுமா..'

'அப்படியா சரிமா நான் அப்புறமா கூப்பிடறேன்..'

'ஏதானும் முக்கியமா சொல்லணும்னா சொல்லுப்பா நான் சொல்லிடறேன்..' அம்மா இயல்பாக கேட்க..

'இல்லமா... அவன் வேதான்னு ஒரு பொண்ணை ரெண்டு நாளா காணோம்னு தேட சொல்லி இருந்தான். அதை பத்தி சில விஷயங்கள் கன்ஃபார்ம் பண்ணிக்கணும் அதுக்குத்தான் கூப்பிட்டேன்...' என்றான் இயல்பாக.

வேதா யாரென்று இவனிடம் சொல்லி இருக்கவில்லையே கோகுல்!!! கோகுலின் வீட்டு நிலவரம் தெரிந்திருந்தால் நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டான்தான் அவன். வேதா கோகுலின் தோழியாக இருக்க வேண்டும் என்றே நினைத்திருந்தான் மாயக்கண்ணன்.

ஒரு நொடி சுவாசம் நின்றே போனது தேவகிக்கு. 'என்ன சொல்லிக்கொண்டிருக்கிறான் இவன்???' சிரமப்பட்டு மூச்சை மீட்டெடுத்துக்கொண்டு மெல்லகேட்டார் அவர்

'பொண்ணு பேரு என்னப்பா சொன்னே???'

'வேதாமா.... உங்ககிட்டே ஒண்ணும் சொல்லைலையா அவன். சரி விடுங்க நான் அப்புறமா அவன்கிட்டேயே பேசிக்கறேன்..' வைத்துவிட்டான் மாயக்கண்ணன்.

இதயம் தடதடத்தது தேவகிக்கு. 'வேதா என்றால் நம் வேதாதானா??? அவளை காணவில்லையா??? அப்படி என்றால் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் போலீசில் ஏன் சொல்ல வேண்டும் கோகுல்.??? போனை மறுபடியும் சார்ஜரில் இணைத்து விட்டு டைனிங் டேபிள் நாற்காலியிலேயே அமர்ந்தார் தேவகி. முகத்தில் வேர்வை பூக்க ஆரம்பித்திருந்தது.

அப்போது வீட்டினுள் நுழைந்தார் நம் யசோதா. முரளியின் அம்மா.

'என்னடி இது நல்ல நாளும் அதுவுமா இப்படி பேயறஞ்ச மாதிரி உட்கார்ந்துண்டு இருக்கே??? முகமெல்லாம் இப்படி வேர்த்து போயிருக்கு...'  யசோதா கேட்க... அவர் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் தேவகி.

தனக்கு தெரிய வந்ததை யசோதாவிடம் கொட்டிவிட்டு கேட்டார் தேவகி 'முரளி உங்களண்ட ஏதானும் சொன்னானா மன்னி.???'

யோசனையுடனே இடம் வலமாக தலை அசைத்தார் யசோதா 'முரளி என்னண்ட எதுவும் சொல்லலை. ஆனா ரெண்டு நாளா முரளி, கோகுல் ரெண்டுமே நமக்கு தெரியாம என்னமோ ஒரு திருட்டுத்தனம் பண்றதுகள். அது மட்டும் நேக்கு நன்னா புரிஞ்சது'

'வேதான்னா நம்ம வேதாவா தான் இருக்குமா??? ஒரு வேளை  வேறே யாரானும் அவனுக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்க போறது... ' இது தேவகி.

'இல்ல தேவகி.... முதலேர்ந்தே நேக்கு சந்தேகம்தான். அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்லையோன்னு நேக்கு தோணிண்டே இருக்கு..'

'சரி... இந்த கல்யாணம் பிடிக்கலைங்கறதுனாலே???'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.