'இல்லை வேலை விஷயமா...'
'அப்படி என்ன வேலை? அவ என்ன பெரிய ப்ரைம் மினிஸ்டரா???'
'தப்புதான்.. பெரிய தப்புதான்... இப்போ என்ன பண்றதுன்னு பெரியவா நீங்களே சொல்லுங்கோ...
ஒரு நொடி யோசித்தவர் 'இப்போ ஒண்ணும் பண்றா மாதிரி இல்லை. உங்க பெரிய பொண்ணும் வந்துடட்டும் அதுக்கு அப்புறமா நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாம் வெச்சுப்போம்...' துண்டித்தார் அழைப்பை. சரேலென நிமிர்ந்தான் கோகுல்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா.வி'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
சுற்றி நின்ற எல்லரிடமுமே கனத்த மௌனம். எல்லார் பார்வையும் இப்போது ஏனோ கோகுலின் பக்கமே திரும்பியது. அவன் தனது அப்பாவை இதுவரை எதிர்த்து பேசியது இல்லை தான். ஆனால் இப்போது???
கண்களை இறுக மூடிக்கொண்டு நின்றான் அவன். மூடிய கண்களுக்குள் வந்து சிரித்தாள் கோதைப்பெண்!!!
தெரியும் அவனுக்கு.!!! மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தாலும் அவன் மீது இருக்கும் நம்பிக்கையில் அவள் தயாராகி காத்திருப்பாள் என்று தெரியும் அவனுக்கு.
'நேற்று மாலை வரை நம்பிக்கை கொடுத்தேனே அவளுக்கு.??? எப்படி உடைந்திருப்பாள் என் கோதைப்பெண்!!! ஒரு ஆழமான மூச்செடுத்துக்கொண்டு கண் திறந்தான் அவன். அப்பாவின் முன்னால் சென்று நின்றான் அவன்.
'அப்பா... நேக்கு இன்னைக்கு கல்யாணம் நடக்கணும்..' என்றான் உறுதியான குரலில்.
'டேய்... புரிஞ்சுதான் பேசறியா??? அந்த பொண்ணு வேதா... அவ சரியில்லைடா...'
'நான் கல்யாணம் பண்ணிக்க போறது கோதைய. அவ எந்த தப்பும் பண்ணலை....'
'கோகுல்... நடந்தா ரெண்டு கல்யாணமும் ஒண்ணா நடக்கணும்.... புரியறதா...' அப்பாவின் குரலில் வெப்பம் ஏற, அவன் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள்...
'கோகுல்...' சற்றே உயர்ந்து வந்தது தேவகியின் குரல்.. 'நீ கொஞ்ச நாழி உன் ரூமிலே போய் இரு. மத்ததை அப்புறமா யோசனை பண்ணுவோம்...'
அதற்குள் 'அம்மா ..' என்றபடி தனதருகில் நின்றிருந்த யசோதையின் கையை பற்றிக்கொண்டான் முரளி.
'நீ பேசுமா... அவன் ஆசை படறான். இந்த கல்யாணம் நடக்கட்டும். நீ சொன்னா அப்பா சித்தப்பா, சித்தி எல்லாரும் கேட்டுப்பா.. ப்ளீஸ் மா...' என்றான் மெலிதான குரலில்.
'அப்போ.. உன் கல்யாணம்.???" அம்மாவின் கண்ணின் ஓரத்தில் நீர் கோடுகள் 'உண்மையை சொல்லு வேதா எங்கேடா.???'
'அவ டெல்லிதான் போயிருக்கா.... நீ முதல்லே பேசு...'...
அசைவில்லை யசோதையினிடத்தில்.. மகன் பொய் சொல்கிறான் என புரியாமல் இல்லை அந்த அன்னைக்கு.
'மா... அவனும் நீ சாதம் ஊட்டி வளர்ந்த பையன் தானே மா.... . பாவம் மா'
................................................................
'ப்ளீஸ்... மா.. என் செல்லம் தானே நீ... நான் சொன்னா கேட்பியோன்னோ ப்ளீஸ் மா .' முரளியின் குரல் கொஞ்சம் கரைய, கோகுலின் மீது அவருக்கு இருந்த பாசமும் அவரை செலுத்த.... ஒரு பெருமூச்சுடன் வாசுதேவனை நோக்கி நடந்தார் யசோதா.
சந்தோஷ சிரிப்புடன் அவரையே பார்த்திருந்தான் முரளி.. 'அம்மாவின் பேச்சுக்கு அங்கே மரியாதை இருக்குமென தெரியும் அவனுக்கு,
கன்னங்களில் ஈரம் படர்ந்திருக்க ஒற்றை வார்த்தை கூட பேசாமல் அசையா சிலையாக அமர்ந்திருந்தாள் கோதை.
'நம்ம அந்தஸ்துக்கு ஏத்த இடமா பார்க்கணும்டா..ஸ்ரீதரா.... .' இது அத்தை..
'நோக்கு அவசரம்... எங்களண்ட கூட ஒரு வார்த்தை கேட்காம நிச்சியதார்த்ததுக்கு ஏற்பாடு பண்ணிட்டே.... வேதா கிட்டேயானும் ஒரு வார்த்தை கேட்டியா??? அவ டெல்லிலே போய் உட்கார்ந்திண்டு இருக்கறதை பார்த்தா நேக்கு என்னமோ சந்தேகமா தான் இருக்கு. என்ன இருந்தாலும் அவா பணக்காராடா....இனிமே வேதா வந்தாலும் அவா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பா.... இதெல்லாம் சரியா வரும்னு நேக்கு தோணலை... சரி விடுமா கோதை... நோக்கு அந்த கோகுல் இல்லை....' அத்தை சொல்லி முடிக்க
'அது எப்படி அப்படி சொல்வேள்??? திடீரென அங்கே ஒலித்தது கோகுலின் குரல். 'நேக்கு எப்பவும் கோதைதான்'. நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும். என்னடா கோதைப்பொண்ணு???.'
அங்கே இருந்த அத்தனை பேரும் ஒரு சேர நிமிர... அங்கே புன்னகையுடன் கோகுல் நின்றிருக்க ... சட்டென எழுந்து நின்றார் ஸ்ரீதரன். அவர் முகத்தில் நிறையவே வியப்பு.
'வாங்கோ மாப்பிள்ளை...' அவர் கோகுலை வரவேற்றார்.
அதே நேரத்தில்... பத்திரமாக இருந்தது அது!!! அவர் அணிந்திருந்த அந்த சட்டையின் பையில் வேதா எழுதிய அந்த கடிதம் பத்திரமாக அமர்ந்திருந்தது!!!!. அதை அவர் பார்க்கும் நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது.
கீதம் தொடரும்.....
{kunena_discuss:890}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.