(Reading time: 18 - 35 minutes)

'ங்க காரா???'

'ஆமாம் கொஞ்ச நாள் யூஸ் பண்ணிட்டு தரேன்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் வாங்கிண்டு போனான்..'

'அவன் பத்தின டீடைல்ஸ் குடு..'

சரவணனை பற்றிய விவரங்களை கொடுத்துவிட்டு சொன்னான் கோகுல்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз...!

படிக்க தவறாதீர்கள்...

'அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட்டா. அவன் தப்பு பண்ணி இருப்பான்னு என்னாலே நம்ப முடியலை....' அந்த நேரத்திலும் ஒரு நல்ல நண்பனாகவே இருந்தான் கோகுல்.

'ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட். நான் பார்த்து டீல் பண்றேன்.. கவலை படாதே....'  சீக்கிரம் கூப்பிடறேன் ...' துண்டித்தான் அழைப்பை.

கோவில்னுள்ளே வந்தான் கோகுல். அவளிடம் இப்போது எதுவும் சொல்லிக்கொள்ள வேண்டாம் என்று தோன்றியது அவனுக்கு.

'சரிடா.. நான் இப்போ ஆத்துக்கு போகணும் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ தைரியமா இரு. கார்த்தாலே பார்க்கலாம்...' நோக்கு என் நம்பர் தெரியுமா???

'தெரியும்...'

'எதுவா இருந்தாலும் போன் பண்ணு. ஆத்திலே அத்தை எல்லாம் வந்தாச்சா.'

'ம்..'

'குட்... நான் கிளம்பறேன் ..சரியா..' அவளிடம் அவசரம் அவசரமாக விடை பெற்று கிளம்பினான் கோகுல். சரவணனை அவன் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சியும் தோல்வி.

'சரவணனா??? அவனால் தவறு செய்ய முடியுமா??? இந்த ஒரு கார் விஷயத்தை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா? இல்லை என் காரை அவன் வேறே யாரிடமாவது கொடுத்திருக்கிறானா?? 'யோசித்தபடியே நேராக அவன் சென்றது முரளியின் வீட்டுக்கு. எல்லா விவரங்களையும் அவனிடம் சொல்லி முடித்தான் கோகுல்.

'சரவணன் எந்த ஊர்டா??? கேட்டான் முரளி.

'தூத்துகுடி பக்கத்திலே ஒரு கிராமம்...' சொன்னான் கோகுல்.

இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தனர். சரவணனின்  பெற்றவர்களை கூட தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக நேரம் இரவு பன்னிரெண்டை தொட்டிருக்க அவனுக்கும் சரவணனுக்கும் பொதுவான ஒரு நண்பனை தொலைப்பேசியில் பிடித்திருந்தான் கோகுல்

இந்த விவரங்கள் எதுவும் சொல்லாமல் பொதுவான பேச்சுக்கு பிறகு கேட்டான் கோகுல்

'நம்ம சரவணன் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமாடா??? ரெண்டு நாளா அவன் கூட பேசணும்ன்னு பார்க்கிறேன் லைன் கிடைக்கலை...'

'சரவணனா???' என்றான் அந்த நண்பன்.. 'அவனை எதுக்குடா இப்போ தேடறே... அவனுக்கு நாளைக்கு கல்யாணம்!!!

'கல்யாணமா.??? யாருடா பொண்ணு??? எந்த ஊரிலே கல்யாணம்???'

'அதெல்லாம் தெரியாதுடா. திடீர் கல்யாணம்ன்னு கேள்விப்பட்டேன்.'  அதற்கு மேல் வேறெந்த விவரமும் தெரியவில்லை அவனுக்கு.

அப்படி என்றால் வேதாவுக்கும். சரவணனுக்கும் திருமணமா??? வேதா சொன்னபடி பார்த்தால் இன்று திருமணம் நடந்திருக்க வேண்டுமே??? இன்னமும் குழப்பமே நீடித்தது.

எப்படியோ இரவு கடந்து அதிகாலை பொழுது வந்திருந்தது. வாசல் தெளித்து, கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் கோதை. உள்ளம் யோசனையில் அவள் மூழ்கி இருக்க.......

'கோதை..' என்ற அன்பான குரல் கேட்க ... திடுக்கிட்டு கலைந்து விருட்டென நிமிர்ந்தாள் அவள்..

நிறைய பைகளை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு முகம் முழுவதும் பயண களைப்பும், அதனோடு நிறையவே வாஞ்சையும் மகள்களுக்கு திருமணம் என்ற சந்தோஷமும்... சேர்ந்திருக்க புன்னகையுடன் நின்றிருந்தார் அவள் அப்பா.

'அப்பா... வாங்கோ...' கையிலிருந்து பைகளை வாங்கிக்கொண்டாள் கோதை. ஆனால் அதற்கு மேல் பேச நா எழவில்லை அவளுக்கு. அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் சக்தி அற்றுப்போயிருந்தது.

அவள் கொடுத்த காபியை பருகிக்கொண்டே அவர் வாங்கி வந்த இரண்டு பட்டு புடவைகளையும் காட்டினார் அப்பா.

'நோக்கு ஒண்ணு.. அக்காவுக்கு ஒண்ணு...... அப்பா முதல் முதலா உங்க ரெண்டு பேருக்கும் பட்டு புடவை வாங்கிண்டு வந்திருக்கேன். ரெண்டும் ஒரே மாதிரி. நன்னா இருக்கா மா???'

புடவையை கையில் எடுத்துக்கொண்டாள் கோதை. கண்கள் மின்ன அதை பார்த்தாள் அவள். அப்பா வாங்கிக்கொடுத்த முதல் பட்டு புடவை!!! அவளுக்கு அது ஒரு பொக்கிஷம்!!! மனம் நிறைய சந்தோஷம்!!!. ஆனால் அதை கொண்டாட விடாமல் தடுத்தது அவளது மனம். தான்  ஏதோ ஒரு பெரிய தவறு செய்து விட்டதை போன்றதொரு ஒரு எண்ணம்.

'வேதா எங்கே மா போயிருக்கா??? அப்படி என்னமா அவசர வேலை???

'டெல்லி.. டெல்லி தான்பா போயிருக்கா...' தயங்கி தயங்கி  சொன்னவளின் கரம் அக்காவின் புடவையை மெல்ல வருடியது 'அக்கா எங்கே இருக்கே???. இங்கே வந்திடேன் ப்ளீஸ் '

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.