(Reading time: 29 - 57 minutes)

வங்கல்லாம் நான் செட் பண்ண ஆளுங்கன்னு உனக்கு தோணலையா குட்டிப்பொண்ணு ?” கிண்டல் செய்தான் அவன்.

“ப்ச்…போங்கப்பா….. பொதுவா அந்த ஊர் டெவலப்மென்ட்டுக்கு நீங்க நிறைய செய்து கொடுத்றுகீங்கன்னு கவனிச்சேன்…... அதவிட அந்த சுபா மேரேஜ நீங்க நடத்தி வச்சது….. அந்த தீபா இஷ்யூவ சால்வ் பண்ணி கொடுத்தது அதுதான் என்னை ரொம்பவுமே உங்களை புரிஞ்சுக்க வச்சுது…..”

இப்பொழுது நெற்றி சுருக்கி ஒருவிதமாக பார்த்தான் அவன்.

“என்னாச்சுபா?”

“ இல்ல…..நீ என்னபத்தி ரொம்ப ஓவர் எக்‌ஸ்பெக்டேஷனுக்கு போறியோன்னு இருக்கு…..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவன் தொடங்க முகம் சுண்டினாள் வினி.

“ நீ சொல்ற இது எல்லாமே ஜஸ்ட் ஒரு ஸ்பான்டேஸியஸ் ஆக்ட்…. கண்டிப்பா சோஸியல் சர்வீஸ் செய்யனும்னு செய்தது கிடையாது…..

அந்த சுபா இன்சிடென்ட் சொல்றியே அதுல அந்த பொண்ண மேரேஜ் செய்துறுக்க ப்ரபாகர் முன்னமே தெரிஞ்சவன் எனக்கு…. அவன்தான் இப்டி நான் லவ் பண்ற பொண்ண ஒருத்தன் ரேப் பண்ணிட்டு போலீஸ்ல போய் அவளை நானே மேரேஜ் செய்துகிறேன்னு சொல்றான்……ஸ்டேஷன்லயுமே அதுக்கு சப்போர்ட்டா பேசுறாங்க……நீங்க பேசுனா போலீஸ்ட்ட எஃபெக்ட் இருக்கும்….. பேசி எங்க மேரேஜ செய்து வைங்கன்னு  கேட்டான்…. போய் பேசினேன் அவ்ளவுதான்…..

 அந்த தீபா நம்ம ஃபார்ம்ல வொர்க் செய்ற மணியோட வைஃப்….. ஒரு நாள் வீட்ல இருந்து அவன் வைஃப் சூசைட் அட்டெம்ட்னு அவனுக்கு கால் வந்துச்சு…..அப்ப என்னனு விசாரிப்போமில்லையா….அப்டி கேட்டப்பதான் அவங்களுக்கு ரெண்டும் பெண் குழந்தையா இருக்குது அதனால மூனாவது குழந்தை பையனாதான் பிறக்கனும்னு வீட்டுக்குள்ள சண்டை போய்ட்டு இருக்குதுன்னு தெரிஞ்சுது…. கடைசி காலத்துல பையன்தான் பார்பான்னு பிடிவாதமா இருந்தான் இந்த மணி…. ரெண்டு ஓல்ட் ஏஜ் ஹோம் கூட்டி போய் பையனோட பேரண்ட்ஸுக்கு கூட இந்த நிலம வர முடியும்னு காமிச்சுட்டு….. தன் மகளோட இருக்ற என் ரிலேடிவ் ஒருத்தங்களையும்  பார்த்துட்டு வர சொன்னேன்..... அப்றம் கொஞ்சம் பேசினோம்….அதோட மணிய இப்டி ஏத்திவிடுறது அவன் வீட்டு ஆள்கள்னு தெரிஞ்சுது…. அவர் வைஃபை அவங்க வேற படுத்துனாங்க போல…. தனி குடித்தனம் போனாதான் சரியா இருக்கும்னு பட்டுது….அதனால இருகரை சைடை கவனிச்சுகோங்கன்னு மாத்தி விட்டேன்…. இது மாதிரி விஷயம்லாம் நாம என்னதான் செய்தாலும் அவங்களா உணர்ந்துகிட்டாதான் உண்டு…..எப்டியோ இந்த விஷயத்துல சால்வ் ஆகிட்டு அவ்ளவுதான்….. இதுல நான் செஞ்சேன்னு அந்த ட்ரான்ஸ்ஃபர தாவிர என்ன இருக்கு…?  அது எல்லோருமே செய்றதுதான்….”

கவனம் குறுக்கி கேட்டுக் கொண்டிருந்தவள் இப்போது மூக்கு சுருக்கி…..பழிப்பம் காட்டி….. “போடா சீன் பார்ட்டி….தேவையில்லாம பயம்காட்டிட்ட….” என குற்றம் சாட்டி அவன் வார்த்தையை தட்டிக் கழித்து  

“அந்த ஸ்பான்டேனியஸ் ஆக்ட்தான் நம்ப சொல்லுது….. பெருசா சர்வீஸ்னு கதை சொல்லிருந்தீங்களோ கடுப்பாகிருப்பேன்…” என அவள் பார்வையை சொன்னாள்.

“ பொண்ணுங்க விஷயத்துல ட்ரெடிஷனலா யோசிக்காம…. அவங்க கஷ்டத்தை புரிஞ்சு நடந்துப்பீங்கன்னு மட்டும் தான் அதுல யோசிச்சேன்…. ” என முடித்தாள். அதுலதான் நான் கவுந்துட்டேன் என்றது தொனி.….

ரசனையாய் பார்த்தான் அவன்…..

“அம்மா அப்பாக்காக அண்ணா இருக்றப்ப கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட உங்களைப் போய் வில்லன் ரேஞ்சுக்கு நினச்சு ரொம்ப படுத்திறுக்கேன்னு அப்பதான் புரிஞ்சுது…..மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…. உங்களை நான் லவ் பண்றேன்னு வேற அதுக்கு கொஞ்சம் முன்னால தான ரியலைஸ் செய்திருந்தேனா…. அதுக்கு  முந்தின நாள் அந்த பாடு படுத்திட்டு இன்னைக்கு  நான் உங்களை விரும்புறேன்னு சொன்னா நீங்க எப்டி எடுத்துப்பீங்களோன்னு யோசிச்சுட்டேதான் கீழ வந்தேன்….. அப்பதான் நீங்க……நீ விளையாடின மாதிரி எனக்கும் விளையாட தோணிச்சுன்னு மலைல வச்சு விளையாடினதுக்கு ரீசன் சொன்னீங்க……நான் செய்த எல்லாத்தையும் விளையாட்டுன்னு சொல்லி ரொம்ப ஈசியா எடுத்துகிட்டீங்கன்னதும்….. ரொம்பவும்….. அப்பவே உங்கட்ட மனசு விட்டு பேச தோணிட்டு.”

தன்னிலை சொல்லியவள் அப்போதுதான் சூழ்நிலையை கவனித்தாள்…. மொத்தமாய் இருட்டி இருந்தது…..

காரின் ஹெட் லைட்டை அவன் எரியவிட்டு வந்ததின் காரணம் புரிந்தது இப்போது…. அந்த மொத்த சூழலில் இருந்த ஒரே வெளிச்சம் அதுதான்…. அதுவும் மர வீட்டிலிருந்து எட்டி கீழே பார்த்தால் மட்டுமே பார்வைக்கு படும்….

இப்ப கூட பயம் வரலைனா அதெப்டி வினி….  “கொஞ்சம் பயமா இருக்கு யவி” என்றபடி அவனை நெருங்கி உட்கார்ந்து, தன்னவன் தோளோடு பற்றினாள்.

“இங்க பயப்பட எதுவும் இல்ல வினு….. யாரும் வரமாட்டாங்க……எனக்கு இங்க பிடிச்சதே இந்த நைட் தான்…. இப்ப பாரு” வானத்தைக் காண்பித்தான் அவன்.

வானம் எங்கும் கொத்து கொத்தாய் கொட்டி கிடந்தன  நட்சத்திரங்கள்….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.