"கரெக்ட் தானே தனு... அவ்வளவு தூரம் போன சஞ்சயே நிருக்கிட்ட பேசியிருக்கலாமே..."
"கரெக்டா தான்... ஆபிஸ் போனா தான் அதை அவன்கிட்ட கேக்கனும்..." என்றதும் இருவரும் சிரித்தனர்.
"போதும் தனு காமெடி... நான் ஏற்கனவே சொன்னது தான்... இவங்க ரெண்டுபேர்க்கு நடுவுல ஏதோ இருக்கு... அதான் இப்படியெல்லாம் நடந்துக்குறாங்க... இல்லன்னா 3 வருஷத்துக்கு பிறகு மீட் பண்ணாலும் ஏன் ரெண்டுப்பேரும் பேசாம இருக்கனும்...
அவங்க ரெண்டுப்பேரும் லவ் பண்ணியிருக்காங்க... ஏதோ சண்டை வந்திருக்கு... அதான் இப்படி பேசாம இருக்காங்க தனு..."
"அப்படி ஒன்னு இருந்தா... ரெண்டுப்பேரும் என்கிட்ட மறைக்க மாட்டாங்க... 8 வயசுல இருந்து நீரஜாவுக்கு எல்லாமே நான் தான்... அவ சஞ்சயை லவ் பண்ணியிருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
்சு அப்புறம் நமக்கு என்ன...?? இல்ல சஞ்சய்..."
"வைஷு... நான் இப்போ ஒரு முக்கியமான மீட்டிங்க அட்டண்ட் பண்ணனும்... நான் அதைப்பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்... ப்ளீஸ் கொஞ்சம் பேசாம வா..." என்று வைஷுவை அமைதிப்படுத்தினாலும்... சஞ்சயின் மனமோ நீரஜா, வெற்றி பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.