(Reading time: 10 - 19 minutes)

24. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

Vidiyalukkillai thooram

ல்லூரியில் மதியம் தன் தோழிகளுடன் ரூபா உணவு உண்டு கொண்டிருக்கும்போது அவளின் கைப்பேசி அழைத்தது.   இந்த நேரத்தில் யார் என்ற யோசனையுடன் அவள் எடுக்க அதில் ஸ்ரீதரின் எண் தெரிய, மதியிடமிருந்து முக்கியத் தகவலாக இருக்குமோ என்று தன் தோழிகளிடமிருந்து நகர்ந்து சென்று அவசர அவசரமாக எடுத்தாள்.

“ஹலோ ரூபா, இப்போ லஞ்ச் டைம்தானே, கிளாஸ் இல்லையே, தொந்தரவு பண்ணிட்டனா”

“இல்லை இப்போ லஞ்ச் டைம்தான்.  வெளிலதான் இருக்கேன், சொல்லுங்க”

“ACP சார் சில விஷயம் உன்கிட்ட சொல்ல சொன்னார்.  எனக்கு உன்னை நேருல பார்த்து பேசணும். எப்போ வந்தா உனக்கு ஓகே சொல்லு”

“எனக்கு கடைசி ஹவர் ஃப்ரீதான், நீங்க ஒரு மூணு மணிக்கு இங்க பக்கத்துல இருக்கற காஃபி ஷாப் வந்துருங்க.  அங்க பார்க்கலாம்”

“ஓகே ரூபா, ஈவினிங் பார்க்கலாம்”, என்று கூறி ஸ்ரீதர் வைக்க, ரூபா ACP என்ன சொல்லி இருப்பார் என்ற யோசனையுடனே கிளாஸிற்கு சென்றாள்.

மாலை கல்லூரியிலிருந்து அவள் அருகிலிருக்கும் தேநீர் விடுதிக்கு செல்ல ஸ்ரீதர் அங்கே காத்திருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“வா ரூபா, உனக்கு ஸ்நாக்ஸ் ஏதானும் ஆர்டர் பண்ணட்டுமா”

“இல்லை வேண்டாம், காஃபி மட்டும் போதும்”, ரூபா சொல்ல ஸ்ரீதர் சென்று இருவருக்கும் தேநீரும், சமோசாவும் வாங்கி வந்தான்.

“நான் ஸ்நாக்ஸ் வேண்டாம்ன்னு சொன்னேனே”

“பரவாயில்லை சாப்பிடு.  நான் மதியமே எதுவும் சாப்பிடலை.  பயங்கர பசி”

“சரி அப்போ இதையும் சேர்த்து நீங்களே சாப்பிடுங்க”

“நாலு சமோசாவும் நானே சாப்பிட்டேன், அவ்வளவுதான்.  நேத்து ஒண்ணும் பிரச்சனை இல்லையே.  நீங்க போகும்போது உங்கப்பா வந்துட்டாரா?”

“ஹ்ம்ம் அப்பாவும், விமலாவும் வந்துட்டாங்க.  லேட்டானதுக்கு அப்பா கொஞ்சம் கத்தினாங்க.  மத்தபடி எங்க மேல டவுட் எதுவும் வரலை.  சரி ACP சார் என்ன சொன்னார்”

“நேத்து நீங்க இருக்கும்போது பேசினதுதான்.  விமலாக்கிட்ட இருந்து information எடுக்கறது”

“நான்தான் எப்படியாவது அவ ஃபோன்ல இருந்து எடுத்துத் தரேன்னு சொன்னேனே”

“இல்லை ரூபா.  என்னதான் நீ ஜாக்கிரதையா இருந்தாலும், அவக்கிட்ட மாட்டிக்கிட்டா மொத்த பிளானும் வேஸ்ட்.  சப்போஸ் விமலா ஃபோன்ல எதையும் ஸ்டோர் பண்ணாம வேற எங்கயானும் வச்சிருந்தா அதைத் தேடி எடுக்கணும்.  ஸோ ACP அவரே நேருல வர்றேன்னு சொல்றாரு”

“அச்சோ அது ரொம்ப ஆபத்தாச்சே.  அப்பா கடைக்கு, விமலா ஆபீஸ்க்குன்னு போனாலும், இப்போலாம் திடீர் திடீர்ன்னு அப்பா கடைலேர்ந்து கிளம்பி வீட்டுக்கு வர்றாரு.  எந்த டைம்ன்னே தெரிய மாட்டேங்குது.  விமலாவும் காலைல சீக்கிரம் போறா.  ஈவினிங் சீக்கிரம் வந்துடறா.  இல்லைன்னா வொர்க் from ஹோம்ன்னு சொல்லிட்டு வீட்டுல இருந்தே செய்யறா.  அதனால அவர் வீட்டுக்கு வர்றது நல்லதில்லை”

“இல்லை ரூபா, ACP சார் நைட் டைம்தான் உங்க வீட்டுக்கு வர்றதா இருக்கார்.  அதனால நீ கவலைப்படாத”

“அது இன்னும் மோசம். விமலா, அப்பா ரெண்டு பேருமே ஆழ்ந்து தூங்கறவங்க கிடையாது.  சின்ன சத்தம் கேட்டாக்கூட முழிச்சுப்பாங்க”

“அதுக்குத்தான் ACP சார் ஒரு ஐடியா சொன்னார்.  அவங்களுக்கு ராத்திரி பால் குடிக்கற பழக்கம் இருக்கா”

“எங்க வீட்டுல அம்மாத் தவிர எல்லாருமே பால் குடிச்சுட்டுத்தான் படுப்போம்”

“ரொம்ப நல்லதாப் போச்சு.  இந்தா இந்தக் கவர்ல தூக்க மாத்திரை இருக்கு.  இதை எப்படியாவது அவங்க குடிக்கற பால்ல கலந்துரு.  இந்த மாத்திரை ஸ்லோவாதான் வொர்க் ஆகும்.  ஸோ கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் தூங்குவாங்க.  அதே மாதிரி ரொம்ப நேரம் எஃபெக்ட் இருக்காது.  மூணுலேர்ந்து,  நாலு மணிநேரம்தான்.  அதுக்குள்ள நாம வீடு முழுக்க தேடணும்.  பால் குடிச்ச உடனே தூங்கினாலோ இல்லை ரொம்ப நேரம் தூங்கினாலோ அவங்களுக்கு சந்தேகம் வரும்ங்கறதால இப்படி ஒரு ஏற்பாடு”

“அது கரெக்ட்தான்.  அம்மா ரெண்டு நாளா வெளிய போனதால விமலா நேத்தே லைட்டா அவங்க மேல டவுட் பட்டா, அப்பாதான் அவளை சமாதானப்படுத்தினார்.  ரெண்டாவது நிறைய டைம் எடுத்து தேடற அளவு வீடு   ஒண்ணும் ரொம்ப பெரிசு இல்லை.  இருக்கறது ரெண்டு பெட்ரூம், ஒரு ஹால்.  கிச்சன் பக்கம் ரெண்டு பேருமே போக மாட்டாங்க.  அதனால அங்கத் தேட வேண்டிய  அவசியமே இருக்காது.  ஸோ ஆளுக்கொரு ரூம் அப்படின்னாக்கூட ஒரு மணி நேரத்துல முடிச்சுடலாம்”

“ஓகே நீ அவங்க பால் குடிச்சு முடிச்ச உடனே எனக்கோ இல்லை ACP சார்க்கோ மெஸேஜ் பண்ணு.  நாங்க அங்க வர்றோம்.  எது பண்றதா இருந்தாலும் அவங்களுக்கு சந்தேகம் வராம பண்ணுங்க.  இன்னைக்கே அவங்களுக்கு இதைக் கொடுக்கணும்ன்னு இல்லை.  ஒண்ணு, ரெண்டு நாள் டைம் ஆனாலும் பரவாயில்லை”

“சரி நான் உங்களுக்கு எதுவா இருந்தாலும்  மெஸேஜ் பண்றேன்.  ஆனால் எப்படியும் ஒரு பத்தரை மணி ஆகிடும்.  அதனால மெஸேஜ் எதுவும் வரலைன்னு நீங்க கால் பண்ணாதீங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.