(Reading time: 10 - 19 minutes)

வலைப்படாத ரூபா, உங்க செக்யூரிட்டி பயங்கர கடமை கண்ணாயிரம்.  மணி பதினொண்ணுக்கூட ஆகலை, அதுக்குள்ள நல்லா குறட்டை விட்டுத் தூங்கறார்.  மத்த வீடு எல்லாமும் பூட்டித்தான் இருக்கு.  ACP சார்  வண்டியை ரெண்டு தெரு முன்னாடியே  நிறுத்திட்டார்.  அங்க இருந்து நடந்துதான் வர்றோம்.  அதனால எந்த சத்தமும் வரலை. இதே மாதிரி நாங்க இங்க இருந்து கிளம்பும்போதும் உங்க செக்யூரிட்டி தூங்கிட்டார்ன்னா சூப்பரா இருக்கும்”, ஸ்ரீதர் சொல்ல, நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் ரூபா.

“மதி சார், நான் அக்கா, அப்பா இல்லாதப்போ வீடு முழுக்கத் தேடிப்  பார்த்துட்டேன்.  எந்தத் தகவலும் கிடைக்கலை”

“அவங்க இல்லாதப்போ எல்லார் கைலயும் மாட்டிக்கறா மாதிரி எந்த எவிடென்ஸும் வைக்க மாட்டாங்க.  அதனாலதான் நான் அவங்க இருக்கறபோது வந்து தேடனும் அப்படின்னு சொன்னேன்.  தேவிம்மா  நீ இங்க சாவித்ரி அம்மாக்கூட சேர்ந்து,  விமலா ஆபீஸ், அப்பறம் காலேஜ்ல எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் உன் ஃபோன்ல ஷாட் எடுத்துடு.  அகில்.... நானும், நீங்களும் விமலா ரூம்க்கு போகலாம்.  ஸ்ரீதர் நீங்களும், ரூபாவும் அவங்க அப்பா ரூம்க்கு போய்த்  தேடுங்க.  சின்ன விஷயம்தானேன்னு எதையும் மிஸ் பண்ணாதீங்க.  எல்லாத்தையும் எடுங்க, நாமத் தேட முக்கால் மணி நேரம் வச்சுக்கலாம்”, என்று கூறியபடியே விமலாவின் அறைக்குள் அகிலுடன் நுழைந்தான் மதி. 

அடுத்த அரை மணியில் இருவரின் அறையையும் ஒரு இன்ச் விடாமல் நால்வரும் சோதனை செய்ய, விமலாவின் தந்தை இருந்த அறையில்... மேலே பரணில் இருந்த பெட்டியில்...... ஸ்ரீதரின் தந்தை கொடுத்த கவர் இருந்தது.  மற்றபடி வேறு எதுவும் அவர் அறையில் கிடைக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

மதியும், அகிலும் விமலாவின் அறையைத் தலைகீழாகப் புரட்ட  அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.  பின்னர் மதி.... விமலாவின் கணினியையும், அகில்  அவளின் கைப்பேசியையும் ஆராய ஆரம்பித்தனர்.  இரண்டிலும் அவள் கைரேகையே, பாஸ்வோர்ட்டாக வைத்திருந்தது அவர்களுக்கு சுலபமாக இருந்தது.  விமலா பாதுக்காப்பானது என்று யோசித்து செய்தது இன்று அவளுக்கே ஆப்பாக முடிந்தது. 

அவளின் கைப்பேசியில் பெண்களை பல விதமாக எடுத்த ஃபோட்டோக்கள் இருந்தன.  அதேப்போல்   அவளின் கணினியில் அவள் இதுவரை யார் யாரை தொடர்பு கொண்டாள், அவர்களுடன் நடந்த வியாபாரம்.  கல்லூரியில் அவளிடம் போதை மருந்து வாங்கிய மாணவர்கள் பற்றிய தகவல்கள் என்று தோண்டத் தோண்ட லட்டு லட்டாக விஷயங்கள் கிடைத்தன. 

பர்சனல் ஃபோட்டோ ஃபோல்டரில் அவள் போதை மருந்து வாங்கும் ஆட்களின் புகைப்படங்கள் இருந்தன.  அதில் ஒரு புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து எழுந்தான் மதி.  

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.