(Reading time: 14 - 28 minutes)

ததான் நானும் சொல்றேன்.... அடுத்த வீட்ல வச்சு இதெல்லம் எப்டி செய்றதாம் ?” என கீழ் உதடு கடித்தபடி கேட்டவன் குரலில் முழு குறும்பும்....ஆசை குழைவும்...

அவன் செயினை இழுத்தான் என்றெல்லாம் இல்லை. ஆனாலும் அனிச்சை செயலாய் கழுத்துச் சங்கிலியை ஒரு கையால் பற்றியவள்...அது இழுபடாமல் காக்கும் பொருட்டு அவனைவிட்டு விலகி சுவரில் பம்மி நின்றவள்....தயங்கித்தான் எனினும் மெல்ல மெல்ல அவன் நோக்கி சரிந்தாள்.

இப்போது ஏற்த்தாழ அவன் மார்மீது அவள்.

“ஹனிமூன் போலாமா வினுப் பொண்னு...?” ஆசை சரசரப்பும் காதலும் கூடல் தேடலுமாய் அவன் கேட்ட விதத்தில், அவன் மிக அருகில் இருந்த இவள் கன்னத்தில்,  பேசிய அவனது உதடுகள் உரசி உரசி எழ.....

 நேற்றைய மரவீட்டு மாநாட்டுக்குப் பின் அவனோடு திரை மறை ஏதுமின்றி இணந்திருந்த இவள் இதயம் எங்கோ சென்று அவனுள் கரைய..  .

ஒரு வார்த்தை பதிலென்று எதுவும் சொல்லவில்லை எனினும் அவனை கண்ணோடு கண்ணாக கண நேரம் பார்த்தவள்... அப்படியே விழி தாழ்த்திக் கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அந்த விழியில் விழுந்து எழுந்தவன் அவளுள் ஆசையும் அறிமுகமற்ற  முதல் நிலை பயமும் கபடி ஆடும்  கதை உணர்ந்ததன் விளைவாய் அவள் முகம் மீது மென் பார்வை பதித்து....இளையவள் காதோர கற்றை முடி ஒற்றைவிரலால் ஓரமாய் ஒதுக்கி..... சின்னவள் கன்ன கதுப்பில் இளம்பட்டாய், இலவம் பஞ்சாய் இதழ் பதித்தான் அச்சம் துடைக்கும் செயலாய்..

சின்னதாய் வெளிப் படுத்தப்பட்ட சிலிர்ப்போடு அதை சுவீகரித்த்வள்... “விடுங்க யவி “ என மெல்லமாய் முனங்கினாள். இப்போது அவனும் அவளைவிட்டு சற்று விலகிக் கொண்டான். அவன் கையிலிருந்த சங்கிலி விடுபடவும்  இவள் சட்டென விலகி ஓட,  அதற்குள் அவள் அசையாதபடி மீஎண்டுமாய் ஒற்றைக் கை பற்றியவன்

“எங்க போகலாம்னு சொல்லிட்டு போ...”

“அதெல்லாம் உங்க இஷ்டம்...” அவன் முகம் பார்க்காமலே பதில் சொன்னாள் இவள்.

இதைப் பற்றியெல்லாம் எப்படி பேசவென்று ஏதோ ஒன்று போடும் தடை....

அவன் பதிலின்றி அவளைப் பார்த்திருந்தான்.

தன்னவன் முக பாவம் பார்க்கவில்லை எனினும் அவனுக்கு தன் பதிலில் உடன்பாடு இல்லை என்பது இவளுக்கு உணர்வில் புரிய

“உங்களுக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும் “ என்றாள் சற்று விளக்கமாய்.. அவனை சந்திக்க தவிர்க்கும் அவள் கண்களை பார்த்திருந்தவன் இதற்கு மேலும் இந்த விஷயத்தில் இன்னும் விளக்கமாய் இவள் ஏதும் சொல்லிடப் போவதில்லை எனப் புரிய

“கொச்சில எனக்கு ஃப்ரெண்ட் ஒருத்தங்களோட க்ரூஸ் ஷிப் ஒன்னு இப்ப ஹார்பர் வந்திருக்கு....ஒரு ஃப்யூ டேஃஸ் பக்கத்துல இனடர்நேஷனல் வாட்டர்ல இருக்குமாம்....போய் ஃஸ்டே பண்ணிட்டு வரலாமா?” இவன் தன் திட்டத்தை சொல்ல

ஆசை பொதிந்த ஒரு “ம்” பதிலாக வந்தது அவளிடமிருந்து. இன்னுமே அவன் முகத்தைப் பார்க்கவில்லை அவள்.

“ஷிப் ஃஸீ இதுக்கெல்லம் பயப்படுவிய வினுப் பொண்ணு....?”

“ம்.... கொஞ்சம் பயம்தான்....ஆனா நீங்க இருப்பீனல்ல...” அவன் இவள் மீது அக்கறையில் கேட்கிறான் என நினைத்து தன்மையாய் பதில் சொல்ல

அவனோ “பயப்படுவ்வியா.....குட் குட்....அப்பதான் .நமக்கு வசதி....” என்று விட்டுப் போனான் சீண்டல் குரலில்.

இப்பொழுது நிமிர்ந்து பார்த்து  நிறுத்தாமல் முறைத்தாள் வினி.

சென்றவன் இப்போது இவளிடமாக திரும்பி வந்து “பயப்படுறப்ப க்யூட்டா வந்து கெட்டியா ஒட்டிப்ப வினுப் பொண்னு ...அப்பதான் ஹனிமூன் களை கட்டும்...” கண் சிமிட்டிவிட்டுப் போனான்...

முறைக்க முயன்று முடியாமல் சின்னதாய் சிரித்து வைத்தாள் இவள்,

டுத்த இரு மணி நேரத்தில் கொச்சி செல்ல தேவையானதை தேடி தேடி தன் வீட்டில் பேக்கிங் செய்து கொண்டிருந்த யவி அதுவரை அவனை சுற்றிக் கொண்டிருந்த மனைவியை காணாமல் தேடி அடுத்த அறைக்கு சென்றான்......

அவளோ ஒரு சுவரோரமாய் ஒண்டி நின்று மொபைலில் யாரிடமோ கதையடித்துக் கொண்டிருந்தாள்.

“சே ..சே க்ரூஃஸ் மட்டும் தான்....”

“......”

“ம்.....வொண்டர் லா போனும்னு ஆசைதான்.....நான் தீம் பார்க்கே பார்த்தது இல்லைதான்...”

“........”

“ப்ச்.... இதைப் போய் எப்படி சொல்லனு இருக்கு.... என்னை இங்க கூட்டிட்டுப் போங்க....இதை செஞ்சுதாங்கன்னு....அவங்கட்ட போய் கேட்க ஒரு மாதிரி இருக்கு....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.