(Reading time: 14 - 28 minutes)

நீ இந்தியா அதுவும் கொண்டல்புரம் வந்தா இன்னொரு மேரேஜுக்கு வாய்ப்பே கிடையாது...அதானால் வராத என்பது தான் அவரது பேச்சின் சாரம்சம். வேறு யாரும் அதை அப்போது பேசி இருந்தால்  இவள் எப்படி எடுத்திருந்திருப்பாளோ?

தன்னை மார்மீதும் தோள்மீதும் தூக்கி வளர்த்தவர் அன்பின் அடிப்படையில் தன் இழப்பையும் தாண்டி  சொன்னதை தாய்மையின் வெளிப்பாடு என சரியாகவே எடுத்துக் கொண்டாள்.

ஆனாலும் அன்றைய அவளது நிலையில் அதை தன் வாழ்வோடு பொருத்திப் பார்க்க கூட முடியவில்லை....நிகழ்விலேயே புதைந்திருந்தாள்......எதிர்காலத்தை நிமிர்ந்து கூட பார்க்க தோன்றவில்லை....அவள் இழப்பின் ஆழமது.

 ஆனால் இறு அதே விஷயத்தை அதிபன் முன்னிலையில் ஆன்டி திரும்பவும் குறிப்பிடும் ப்து வேறு ஒன்று புரிகிறது அனுவுக்கு....

‘கனி ஆன்டி தீபன் முன்னால செகண்ட் மேரேஜ் பத்தி பேசுறாங்கன்னா...தீபன் மீது ஆன்டிக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை..?’ என்ற ஒரு கேள்வி அவளுள். அதில் தான் அவள் மிரண்டு போனாள்.

எப்படிப் பட்டவன் இவன்? எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்த்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“நீ கிராமத்துக்கு வந்து சமாளிச்சுக மாட்ட.....அங்க எந்த ஒரு ஆண்பிள்ளைட்டயும் நின்னு நீ ரெண்டு நிமிஷம் பேசினா போது என்னன்னமோ சொல்லிருவாங்க......அதுவும் அமெரிக்க பொண்னூனா எந்த மாரல் பியரும் இருக்காதுனு வேற நினைப்பாங்க....ஆண் துணையில்லாத வீடுன்னா  ஆயிரம் ப்ரச்சனை வரும்... அதோட ராசி அது இதுன்னு இன்னும் என்னலாமோ பார்ப்பாங்க....உன் மனசு நோக பேசுவாங்கடா.....கேட்டுட்டு இருக்க என்னால முடியாது.....தயவு செய்து அங்க வராத” என கெஞ்சிய அதே கனி ஆன்டி இன்று இந்த ஊரை சேர்ந்த அதுவும் ஒரு இளைஞன் முன்பு  எப்படி இரண்டாம் கல்யாணத்தைப் பற்றிப் பேசுகிறார்.....?

கனிமொழியின் முடிவுகளில். எப்போதும் அனுவுக்கு அபார நம்பிக்கை உண்டு.....அது வேறு இப்போது அதன் பலத்தை காண்பிக்க

‘ஆன்டி நம்புற அளவுக்கு தீபன் எல்லா வகையிலும் ப்ராட் மைன்ட்டோ...? அவ்ளவு ட்ரெஃஸ்ட்வொர்த்தியோ...? நாந்தான் தப்பா புரிஞ்சுகிட்டனோ ....அப்டிபட்டவனையா நம்பாம அவ்ளவு மோசமா ட்ரீட் செய்துட்டேன்...’ என் தவித்துப் போனாள்.

தன் சூழல்...தன் தேவை...அதில் அதிபனின் ரோல் என இந்த எல்லையை  தாண்டி முதன் முதலாக  அதிபனை அதிபனாக அனு பார்க்க தொடங்கியது இப்போதுதான்.

காதல் என்று எதுவுமில்லை...அந்த கோணத்தின் சாயலில் கூட எதுவும் தூண்டவில்லை அவள் நினைவலையை நிர் சிந்தனையை பெண் எண்ணத்தை....

 பிறரிடம் பழக பயந்து தனிமையில் தன்னை திணித்துக் கொண்டு இருந்தவள் இதயத்தில் ஆழ ஊன்றியது ஒரு நட்பு விதை அவன் மீது வந்திருக்கும் நட்பு நிலை .... அவன் முன்பு அவள் இயல்பாய் இருக்கலாம் என்றது ஒரு நினைவு அலை அவ்வளவே.....

நிம்மதியுடன் நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்திருந்தவள் சிறு இதழில் சிந்தியது சிநேக புன்னகை...

அதே நேரம் அங்கு உணவு பரிமாற என தட்டுகளுடன் வந்து சேர்ந்தாள் நிலவினி....

அனு இருந்த கட்டிலுகு அருகில் இரு நாற்காலிகளை இழுத்துப் போட்டவள்  மூவர் கையிலுமாய் தட்டுகளை கொடுத்து உரிமையுடன் பரிமாற தொடங்கினாள்.

காலை சாப்பாடு என்பதால் இட்லி இடியாப்பம் என எளிதான உணவுவகைகள்தான்.... அதுவும் மருத்துவமனையிலிருந்து டிஃஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கும் அனுவிற்கு வேறு எதுவும் உகந்ததாக இருக்காதோ என்ற எண்ணம் வேறு வினிக்கு.

ஆனாலும் அதை சாப்பிட்ட மூவருக்கும் வெகு நாளைக்குப்பின் உள் மனதில் நிறைவு.

ன்று வினி மெல்லிய் ஆரஞ்சு நிற புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் தழைய தொங்கிய நீண்ட பொன்தாலி சங்கிலி மட்டுமாய்.

சின்ன சின்னதாய் பேசியபடி சாப்பிடும் மூவருக்கும் சிரிப்போடும் கவனிப்போடும் குனிந்து நிமிர்ந்து பரிமாறிக் கொண்டிருந்தவளையும்.. அவள் செயலுக்கு தக்கதாய் பாந்தமாய் இயந்தாடிக் கொண்டிருந்த இவன் கொடுத்த தாலியையும் வைத்த கண் வாங்காமல் பார்வையால் பருகிக் கொண்டிருந்தான் பார்த்திருந்த அவள் கணவன்.

ஆம் அவளை தேடி அங்கு வந்திருந்தவன் இந்த காட்சியின் அழகில் அதை கலைக்க எண்ணாமல்...அறை வாசல் அருகே ஒதுங்கி நின்று பார்வையால் அவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்குப் பின் ஏதேச்சையாய் எதிர்பார்ப்பின்றி வெளியே வந்தவளை அவள் எதிர்பாரா நேரம் இடையோடு பிடித்து இழுத்து சுவரோடு சாய்த்தான்.

“அ....க்...” அதிர்ச்சியில் அலறப் போனவள்  இழுத்தவன் அவளவன் என தெரியவும் அலறாமல் அடங்கினாலும் பார்வையால் சுற்றுமுற்றும் சிதற சிதற  பார்த்தபடி “ஐயோ என்ன செய்றீங்க?.....அதுவும் அடுத்த வீட்ல வச்சு...? “ எனப் பதறினாள்.

முடிந்தவரை அவனைவிட்டு விலகி சுவரோடு சுவராக ஒண்டினாள். 

இவனோ இப்பொழுது புடவைக்கு வெளியே இருந்த இவளது செயினை ஒற்றை விரலை கொக்கியாக்கி பற்றினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.