பேசிக் கொண்டிருந்தவளிடம் நேரே சென்றவன் அவள் தோள் பிடித்து திருப்பி தலையில் செல்லமாய் ஒரு தட்டு தட்டி “என்ட்ட கேட்காம யார்ட்டடி கேட்ப?” என சொல்ல தோணிய எண்ணத்தை அப்போதைக்கு கைவிட்டான் யவி...
அவளுக்கு ஆனந்த ஆச்சர்யம் கொடுக்கும் வைகையில் தீம் பார்க் போய்ட்டு ஷிப்க்கு போகலாம் என முடிவு செய்து கொண்டான்.
காரில் லாங்க் ரைட் அவனோடு தனியாக.... வெகு ஆவலாகவே கிளம்பினாள் வினி. அந்த தீம் பார்க்கில் நுழையும் வரையுமே மணி எல்லம் நொடியாகி இதழ் பட்ட ஐஃஸ் க்ரீமாய் இன்பம் சேர்த்தபடி சடுதியில் கரைய...சந்தோஷ வினி...
வொண்டர்லா என அந்த குதித்த குரங்கு போர்ட் வரவேற்க... ஆனந்த வினி... அடுத்து என்ன உள்ளே அத்தனை உற்சாகமாய் அவன் கை பற்றியபடி சுற்றி வந்தாள்.
யெஃஸ் பொண்னுக்கு ஆசை அதைப் போய் பார்க்கனும்ன்றதுதானே தவிர அங்க உள்ளதுல்ல போய்ப் பர்க்கனும்னு இல்ல.... அவதான் நம்ம பயவினி ஆச்சே...
அவன் கூப்பிட கூப்பிட ஒவ்வொரு ரைடுக்காய் மறுத்துக் கொண்டு வந்தவளை..... ஒரு கட்டத்தில்... “என்ன வினு...ஆசைப் பட்டுதான வந்த....ஒரே ஒரு ரைடு மட்டுமாவது சேர்ந்து போய்ட்டு கிளம்பலாம்” என இழுக்க ஆரம்பித்தான் யவ்வன்.
தினமுமா இவ்ளவு தூரம் வந்துடப் போறாங்க....? ஆக அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தான் அவன்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிரேமாவின் "கண்ணாமூச்சி ரே ரே.." - காதல் கலந்த குடும்ப கதை...
படிக்க தவறாதீர்கள்...
நேரம் செல்ல செல்ல “ஏய் வினிப் பொண்னூ இந்த ரோலர் கோஃஸ்ட்டர் இங்க ஃஸ்பெஷலாம்...இது மட்டும் நீ வந்து தான் ஆகனும்....இல்லனா நான் தூக்கிட்டுப் போய்டுவேன்...” என் அவன் நிஜமாகவே அவளை தூக்க முயல....இவள் மிரண்டு ஓட அவன் துரத்த.....
ஒரு மாத்தின் அடியீல் அவன் கையில் பிடிபட்டாள் இவள்.....வொர்க்கிங் டே அதுவும் மாலை மூன்று மணி.... அந்த இடத்தில் இவர்களை தவிர அப்போதைக்கு அடுத்தவர் வருமளவு கூட்டம் இல்லை...
அவளை துரத்தி வந்து பிடித்தவன் தனிமை தந்த தைரியத்தில் இப்போது இடையோடு பிடித்து அவளை வலுக்கட்டாயமாய் தூக்க....அவளோ கால்களை உதறியபடி ஐயோ என்ன விடுங்க விடுங்க...என அலற... எங்கிருந்தோ வந்து நின்றார் ஒரு போலீஃஸ்காரர்...
“டேய் பொறுக்கி விடுறா அவள...” என்பதற்கு சமானமாக அவர் மலையாளத்தில் ஏதோ சொல்கிறார் என்பது வரை புரிகிறது வினிக்கு...இதற்குள் அவளை தரையில் இறக்கி விட்டிருந்தான் கணவன்.
பொது இடத்தில வரம்பு மீறி விளையாடிட்டோம்னு அவர் திட்றார் போல என இவள் வெட்கத்தில் குறுகி குனிந்து நிற்க....அவரோ அடுத்து அடுத்து கேட்ட கேள்விகள் அரை குறையாய் புரிந்த விதத்தில் மிரண்டு போனாள் இவள்.
யவ்வன் யாரோ எவனோ....இவளை தப்பான எண்ணத்தில் துரத்தி வந்தவன் என்ற ரீதியில் அவர் யவ்வனிடம் எகிறிகுறார் என்பது புரிய.... அவன் ஆங்கிலத்தில் அதற்கு மறுப்பாய் ஏதோ விளக்கம் சொல்ல முயன்று கொண்டிருக்க....
ஏக உச்ச உணர்ச்சியில் எகிறும் போலீஃஸ்காரர் யவ்வனை எங்கு கை நீட்டிவிடப் போகிறார் என்ற பயத்தில் பாய்ந்து சென்று அவனை தோளோடு அப்பிக் கொண்டாள் இவள்....
“இந்த ரைடுக்காக வந்தோம்” என பக்கத்தில் தெரிந்த ரோலர் கோஃஸ்ட்டரை கை காட்டிவிட்டு மீண்டுமாய். போலீஃஸிடம் “வீ ஆர் மேரிட்” என்றாள் பே என பய முழி முழித்தபடி...
மனதிற்குள்ளோ லாங்க் ஃஸ்கர்ட்டும் டாப்ஃஸுமாய் வந்ததற்காய் தன்னைத் தானே நொந்தும் கொண்டாள்...
“இப்டி குட்டிப் பொண்ணு மாதிரி ட்ரெஸ் செய்தா நமக்கு மேரேஜாகிட்டுன்னு யார் புரிஞ்சுபா...” என சத்தமாய் அருகில் நின்றவனிடம் முனங்கினாள்...
ஏனோ யவன் மட்டுமாய் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒத்துக் கொள்ளாத போலீஃஸ் இவள் செயலில் இவர்களை தம்பதியர் என நம்ப....ஒரு முறைப்போடும்..ஏதோ எச்சரிக்கையோடும் இவர்கள் செல்ல அவர் அனுமதித்தார்....
தன்னவன் மீதிருந்து பிடியை விலக்காது அப்படியே அவனோடு நடந்தாள் வினி. எங்க அவனை விட்டு விலகினா அவனா திரும்பவும் பிடிச்சுட்டுப் போய்டுவாங்களோன்ற மாதிரி ஒரு ஒட்டல்...
மறுப்பு எதுவும் சொல்லாமல் மௌனமாய் அந்த ரோலர் கோஃஸ்ட்டரில் ஏறி அமர்ந்தாள்....
போலீஃஸ்ட்ட சொல்லிட்டு வந்திறுக்கே....
அருகிலிருந்தவன் கையை இறுகிப் பிடித்துக் கொண்டாள்..... “ஆஆஆஆ” என்ற அலறலுடன் தான் அவள் அதன் தொடக்கத்தை ஆரம்பித்தாள்....
இவன் அவளிடம் இதில் என்ன பேச முடியும்...பேசினால் காதில் கேட்டுவிடப் போகிறதமா....
ஆனாலும் “இங்க பாரு வினு...இதுல பயப்பட ஒன்னுமே இல்ல....என்ன ஆனாலும் நாம கீழ விழமாட்டோம்....ஜஃஸ்ட் எஞ்சாய் த ஃபீல்...” என சொல்லிக் கொண்டு வந்தவன்...அவள் அலறல் நின்று போக.....ஓகே பொண்னூ ரிலாக்ஃஸாயிட்டு என திரும்பிப் பார்த்தால்.... அப்படியே தலை குழைந்து ஒருவிதமாய் சாய்ந்து கிடந்தாள் வினி....
பயத்தில் மயங்கி இருந்தாள்.....துடித்துப் போனான் இவன்...
தொடரும்!
{kunena_discuss:929}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.