(Reading time: 11 - 22 minutes)

வர்கள் இருவரு எவ்வளவு பொருத்தமான ஜோடி... கடவுள் ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு நிலையை கொடுத்தான் என்று வருந்தியவன், "இல்லை மதி அவ விளையாடுல. உண்மையை தான் சொன்னா. அவளுக்கு இந்த கல்யாண ஏற்பாடே தெரியாது" என்றான் மதியிடம்.

"அப்பறம் எப்படி அவ இந்த கல்யாணத்துக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னா " -மதி

" இல்லைப்பா, அவ இந்த வாரம் ஊருக்கு வந்திருந்தா. அவ யாரையோ விரும்புரதாகவும் அதுக்கு நான் தான் பெரியப்பா பெரியம்மா கிட்ட சம்மதம் வாங்கி தரணும்னு சொன்னா. " என்று எப்படியோ மென்று விழுங்கி சொல்ல வந்ததை சொல்லி முடித்தான் சரண்.

மதியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவன் மனதிற்கு நிச்சயமாக தெரியும் அவளுக்கு அவன் மேல் உண்டான காதலை. ஆனால் இப்போது சரண் சொல்வதை உண்மையில்ல என்று எந்த ஆதாரம் கொண்டு வாதிட முடியும். ஆனால் எதையும் யோசிக்க இயலவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"சாரி மதி " என்று ஏதோ தான் தன்னுடைய நண்பனுக்கு துரோகம் இழைத்து விட்டதை போல வேதனையுடன் அமர்ந்திருந்த சரணை மேலும் வருத்தும் எண்ணம் இல்லாமல்,

"நீ எதுக்கு மச்சான் சாரி சொல்ற. இதுல உன் தப்பு எதுவும் இல்லையே. என்ன ஆனாலும் நம்ம ப்ரெண்ட்ஷிப் மாறாதுப்பா. " என்றவனை கட்டி அணைத்து கொண்டான் சரண்.  பேசாமல் எல்லா சத்தியத்தையும் மீறி அவனிடம் உண்மைகளை சொல்லி விடலாம் என்று தோன்றியது சரணுக்கு. ஆனாலும் இப்போது மதியின் நல்லா மனதிற்கு மது சொன்னதை போல தான் சுயநலமாக சிந்தித்து தவறிழைக்க கூடது என்று தோன்றவும் தொண்டை வரை வந்ததை அப்படியே விளுங்கிகொண்டான்.

"சரண் எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. நான் உன்கிட்ட அப்பறம் பேசறேன் " என்று அங்கிருந்து புறப்பட்டவன் நேரே சென்றது மதுவை சந்தித்த அந்த கோவிலுக்கு.“

மனதில் வேதனையும் குழப்பமும் மிகுந்திருந்தது. எதையும் யோசிக்கவும் இயலவில்லை அவனால். அவனுக்கு புரியவில்லை. அவளை குறித்த தன்னுடைய புரிந்துணர்வு தவறா? அவளுக்கு என் மேல் எந்த ஈடுபாடும் தோன்றவில்லையா? எதுவும் அவனுக்கு புரியவில்லை. ஏன் ஏன் இந்த ஒரு கேள்வியே அவனுக்கு மிஞ்சியது. தான் எந்த இடத்தில் தவறுசெய்தேன். என்னுள்ளுணர்வு அழுத்தமாக கூறியதே அவளுக்கு என் மேல் இருந்த காதலை. அது எந்த இடத்தில் தவறானது. சிறிது நேரம் தன்னுள் குழம்பியவன் கண்களை மூடி கடவுளின் சன்னிதானத்தில் சாய்ந்து அமர்ந்தான்.இன்னும் அவனுக்கு சரண் கூறியதை நம்ப இயலவில்லை. மதுவிற்கு அவன் மேல் உள்ள காதலில் அவன் இருநூறு சதவீதம் உறுதியாக இருந்தான். ஒரு வேளை மதுவிற்கு வேறேதேனும் பிரச்சனையோ ? அதை மறைக்க இப்படி பொய் சொல்கிறார்களோ என்றும் தோன்றியது. சரண் இப்படி கூறியதற்கான காரணம் , இல்லை சரணிடம் மது இப்படி கூறியிருந்தால் அதற்க்கான காரணம் என்ன. இதுதான் அவனுக்கு புரியவில்லை. ஆனால் அதே சமயம் அவனின் புத்தி அவனுக்கு எடுத்துரைத்தது. கண்களால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று சொல்வார்கள் ஆனால் நீ அவள் கண்களை பார்த்து உணர்ந்தேன் அவள் என் மீது கொண்ட காதலை என்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்றது. மனமோ காதல் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது.அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஒரு பக்கம் வாதிட்டது. சற்று நேரம் அமைதியாக இரண்டின் வாதங்களையும் கவனித்தவன் ஒரு முடிவோடு அங்கிருந்து கிளம்பினான்.

எல்லோரையும் போல காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் என்று அவனால் தாடி வளர்த்து திரிய முடியாது. அதே சமயம் மனதால் ஒரு பெண்ணை  மனைவியாக உருவகப்படுத்தி கொண்டபின் வேறொரு பெண்ணை மணம் முடிப்பதும் அவனால் இயலாது. அவனுக்கு தெரிந்த ஒரே விஷயம் இதில் ஏதோ குழப்பம் உள்ளது. அவனுடைய உள்ளுணர்வு இம்முறை அவனுக்கு அப்படியே உணர்த்தியது. அவனை பொறுத்தவரை தொழில் என்று வந்தால் அதில் உணர்வுகளுக்கு இடமில்லை. அதே சமயம் உறவு என்று வந்தால் அவனின் மனதின் கூற்றே இறுதியானது. இந்த முறை தன் மன உணர்வு அவனுக்கு கூறிய வழியில் நடப்பது என்று முடிவெடுத்தான். சரண் கூறிய விஷயம் உண்மையா அப்படி உண்மை என்று அறிய நேர்ந்தால் எந்த காரணம் கொண்டும் மதுவின் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படாமல் விலகிவிட வேண்டும். ஆனால் அவர்கள் கூற்றில் உண்மை இல்லை என்றால் இடையில் அந்த இறைவனே வந்தாலும் இல்லை மதுவே வந்தாலும் அவள் அவன் மனைவியாவதை யாராலும் தடுக்க முடியாது என்று உறுதி பூண்டவன் கோவிலை விட்டு வெளியே பாடியபடி சென்றான் மதி முன்பு எப்போதும் இல்லாத வேகத்துடன்.

கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே

எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே

எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே

அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே

என்னை விட்டு ஓடி போக முடியுமா முடியுமா

அவனின் இந்த உறுதி அவ்வளவு சீக்கிரம் நிறைவேறி விடாது என்று கள்ள சிரிப்பொன்றை சிந்தினான் அந்த கள்வன் கண்ணன் :)

பிரெண்ட்ஸ் உங்களுடைய மதியை பற்றிய கேள்விகளுக்கு என்னால் முடிந்த வரை விடையளித்துள்ளேன். இனி வரும் நாட்கள் மதிக்கும் மதுவுக்கும் இடையில் நடக்கும் போராட்டங்களே மிகுந்திருக்கும். இன்னும் சில புது முகங்கள் நம் தொடரில் இடம் பெற போகிறார்கள் உங்களை சிரிக்க வைக்கவும் சில சமயம் அழவைக்கவும்.

தொடரும்

Episode 08

Episode 10

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.