கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன்
கண்ணீர்த் துடைக்க இவளும் அந்த நிலவும் அழகென்றேன்
என்னை நானே காண்பது போலே அவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன்
உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் கொண்டு இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்
18 மணி நேரங்கள் ஓடியிருந்தன. ஆனாலும் எல்லோருக்கும் ஏதோ பல யுகங்களாக இங்கே இருப்பதை போன்ற உணர்வு. அங்கு காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் மனம் எதைஎதையோ நினைத்து கவலைகொண்டது. யாரும் உண்ணவும் இல்லை கண்ணயரவும் இல்லை. பித்து பிடித்ததை போல அமர்ந்திருந்தனர் மங்களமும் சிவசண்முகமும். மருத்துவர் கேட்டது எல்லாம் வாங்கி வருவதும் மற்றவர்களை கவனிப்பதும் ரகுவின் சரணின் வேலையானதால் கவலை கொண்டு அவர்களால் அமர இயலவில்லை.
இதோ மது இப்போது அறுவை சிகிச்சைக்காக ஆப்பரேசன் தியேட்டரில் அழைத்து செல்லப்பட்டு 6 மணி நேரங்கள் கடந்து விட்டன. எல்லோர் மனத்திலும் தலைமை மருத்துவர் சொன்னதே ஓடிக்கொண்டிருந்தது.
" டாக்டர் மது எப்படி இருக்கா? அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?" -சரண்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...
படிக்க தவறாதீர்கள்...
"அவங்க இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டலை. அவங்களுடைய காயங்களை பார்க்கும் போது வேகமா ஓடுன வண்டியிலிருந்து கீழ விழுந்திருக்கணும். உடலில் பல பாகங்களில் ஆழமான காயங்கள் இருக்கு. அவங்களுக்கு அடிபட்டு கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கும் மேல ஆயிருக்கு. ஹெவி ப்லட் லாஸ். இப்போ ரெண்டு மேஜர் ஆப்பரேசன் பண்ண வேண்டியது இருக்கு. அதுக்கு அப்பறம் தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும். நர்ஸ் ஒரு பாரம் கொடுப்பாங்க. அதுல கொஞ்சம் சைன் பண்ணி கொடுத்துருங்க.." என்று கூறிவிட்டு மருத்துவர் செல்ல, இதுவரை அவர்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த மங்களம் அவர்கள் பேசியது புரியாத காரணத்தால் சரணின் முகத்தை ஆவலோடு நோக்கினார் கண்களில் சிறு நம்பிக்கையை தேக்கியபடி.
அவன் எதுவம் சொல்லாமல் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர,
"சரண் டாக்டர் என்ன சொன்னார்? மது நல்ல இருக்கா தான. உள்ள போயி அவளை பார்க்கலாமா ?" என்று கேட்க கைகளில் முகத்தை புதைத்து அழத்தொடங்கினான் சரண்.
"ஐயோ எங்க இவன் அழறான் எனக்கு பயமா இருக்கு " என்று கணவரின் தோளை பிடித்து குலுக்கியவரிடம் மதுவின் தந்தை மருத்துவர் கூறியவற்றை அழுகையினூடே கூறி முடிக்கவும் மங்களம் மீண்டும் மயங்கி சரியவும் சரியாக இருந்தது.
ஆப்பரேசன் தியேட்டரின் வெளியில் இருந்த விளக்கு அணையவும் எல்லோரும் அவரவர் நினைவலைகளில் இருந்து வெளி வந்து பரபரப்புடன் மருத்துவரை நோக்கினர்.
"ஆப்பரேசன் நல்ல படியா முடிஞ்சுது. இன்னும் ஒரு 5 மணி நேரத்துல அவங்களுக்கு சுயநினைவு வந்திடும். இன்னும் ஒரு ஆப்பரேசன் இருக்கு. அது ஒரு ரெண்டு நாளுக்கு அப்பறம் வெச்சுக்கலாம். " - மருத்துவர்
"சார் நாங்க இப்போ போயி பாக்கலாமா ?" சரண்
"இல்லை இப்போ போக வேண்டாம். அவங்க கண் முழிச்சதும் சிஸ்டர் வந்து சொல்லுவாங்க. அதுவரைக்கும் இங்க யாரவது ரெண்டு பேர் மட்டும் இருங்களேன் ப்ளீஸ் " என்று கூறியவர் ரகுவையும் சரணையும் நோக்கி "நீங்க ரெண்டு பெரும் என் கூட வாங்க " என்று கூறிவிட்டு அனைவரிடமும் விடை பெற்று செல்ல, அவரின் பின்னோடு சென்றனர் ரகுவும் சரணும்.
மருத்துவரின் அறையில் அவருக்காக கமிசனர் காத்திருந்தார்.
"வணக்கம் சார், ரொம்ப நேரமா காக்க வெச்சுட்டனா?" - மருத்துவர்
"இல்லை சார் நான் இப்போதான் வந்தேன்." என்று மருத்துவரிடம் கூறியவர் ரகுவையும் சரணையும் நோக்கி " வாங்கப்பா. இப்போ மதுவுக்கு எப்படி இருக்கு " என்று கேட்டார்.
"இப்போதான் ஒரு மேஜர் ஆப்பரேசன் முடிஞ்சுது. ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க " என்று மருத்துவர் பதில் அளிக்கவும், தன கேள்விகளை அவரிடமே கேட்க தொடங்கினார் கமிஷனர்.
"அவங்களுடைய மெடிகல் கண்டிசன் என்ன டாக்டர் " -கமிஷனர்
"அவங்களுக்கு கீழ விழுந்ததுல தலைல கூர்மையான ஒரு கல் குத்திருக்கு. அது மண்டையோட்டை குத்தி அந்த துகள்கள் மூளையின் வெளிபரப்புல சிதறி இருந்துச்சு. இப்போ அதை எல்லாம் எடுத்துட்டு அந்த எடத்துல ப்ளேட் வெச்சருக்கோம். இன்னும் ஒரு 6 மாசம் இல்லைனா ஒரு வருஷத்துல அந்த ப்ளேடை எடுத்துடலாம். மத்தபடி சின்ன காயங்கள் தான். " -மருத்துவர்
"ஓகே. வேற எந்த பாதிப்பும் இல்லையே ?" என்று கமிஷனர் கேட்கவும் இவர் எதை கேட்கிறார் என்று புரியாத பாவனையில் அவரை பார்த்தனர் ரகுவும் சரணும்.
"நீங்க கேட்கிறது புரியுது. அவங்களுக்கு வேற எந்த விதமான பதிப்பும் இல்லை " என்று பதில் அளித்தார் மருத்துவர்.
"ரொம்ப நன்றி சார் ரகு, சரண் நான் வெளிய இருக்கேன். நீங்க டாக்டர்கிட்ட பேசிட்டு வாங்க. எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் " என்று விடைபெற்று சென்றார் கமிஷனர்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
But Madhu, Saran rendu perum maraikkira vishayam ena
what next
Nalla athiyaayam. Neengale solli iruppathu pola sogamana athiyaayam.
Police further aga investigate seithu nadantathai kandupidipargala?
Mathi - Madhu relationship future enna? Mathi eppadi handle seiyya poraar?
Manasu barama aakina episode
Mangalam aunty pesura Apa laa romba azhugai vandhuduchu
Konjama azha veinga nu munnadiye sonnaen ivlooooo azha vekkureenga avangaloda engalayum sethu.. Anyway nice way of narrating.. Apadi enna thaan aachu madhu ku awaiting to read more
Hospital scenes ellaame romba natural-aa iruntatu...
Police aval accident-rku kaaranamanavanai kandu pidikum?
Matu-ku enna problem? Aval tannai viddu vilaga poraaanu terintaal Mati enna seyvaan?..
Madhu ku irukum problem mathi ku teriya varuma
Madhu Ku enna problem ah irukumnu oru yoogam iruku adhu correct ah nu ninga sonnadhum terinjikiren :)
Endha problem ah irundhalum mathi ethupannu ninaikiren ana avanga family accept pannipangala