(Reading time: 22 - 44 minutes)

"நான் எதுக்கு பண்ணனும் " -மது

"நீ பெங்களூருல இருந்து என்கிட்டே பேசுனப்போ சொன்னது உனக்கு மறக்கலையே ?" -சரண்

"மறக்கலை. ஆனா அது அப்போ. அப்போ நெலமை வேற. "-மது

"இப்போ இருக்கற நெலமைக்கு என்ன? அதான் நீயும் இப்போ நார்மல் ஆயிட்டேன்னு டாக்டரே சொன்னாரே " -சரண்

"அப்படியா...வேற எதுவும் சொல்லலையா? " -மது

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் தன் அதிர்வை வெளிக்காட்டாமல் தொடர்ந்தான் சரண்.

"வேற என்ன சொல்லணும் ?" -சரண்

"உங்ககிட்டயும் ரகுகிட்டையும் பெங்களூர்ல டாக்டர் சொன்னது. இங்க நான் டிஸ்சார்ஜ் ஆகும் போது டாக்டர் உங்ககிட்ட சொன்னது. இதெல்லாம் என்கிட்டயும் சொன்னங்க அண்ணா" என்றவளின் பார்வை ஜன்னலின் வெளியே இருந்த தோட்டத்தை வெறித்தது.

சிலையென நின்றான் சரண்.

"மது அது..அது..சாரிடா உன்கிட்ட மறைக்கணும்னு இல்லை..." என்று அவளின் அருகே சென்று அமர்ந்தான். அவனின் தோளில் சாய்ந்து கொண்டவள் "அண்ணா எனக்கு மட்டும் ஏண்ணா இப்படி நடக்கணும். நான் அப்படியே செத்துருக்கலாமே. என்னை ஏண்ணா காப்பத்துன. " என்று கண்ணீர் விட்டாள்.

"அழாதடா. இது ஒரு பெரிய விஷயமே இல்லை. எனக்கு மதியை பத்தி நல்லாவே தெரியும். அவன் இதை பெரிய விஷயமா நினைக்க மாட்டான். உன்னை அவன் எப்படி இருந்தாலும் விட்டு கொடுக்கமாட்டாண்டா. " என்று அவளின் தலையை வருடினான் சரண். விருட்டென அவன் தோளில் இருந்து எழுந்தவள் "உங்களை விட அவரை பத்தி எனக்கு தெரியும் அண்ணா. அவருடைய காதல், அவருடைய மனம் எல்லாமே தெரியும். நான் எப்படி இருந்தாலும் என்னை அப்படியே நேசிப்பார்னும் தெரியும். அப்படிப்பட்ட மனிதருக்கு என்னை துரோகம் பண்ண சொல்லறிங்களா ? "

"மது......" -சரண்

"என்னை சுயநலமா இருக்கா சொல்றிங்களா ? "-மது

"மதும்மா..." -சரண்

"அவர் என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறாரோ அதே அளவுக்கு அவரை நானும் காதலிக்கிறேன். அவர் வாழ்க்கையில் அவருக்கு எல்லாம் சந்தோசமும் கெடைக்கணும். என்னால அது இல்லாம போக கூடாது. எனக்காக அவர் எதை வேணாலும் தியாகம் பண்ணுவார். ஆனா அதை பார்த்துட்டு என்னால நிம்மதியா வாழமுடியாது. இனி அவர் வாழ்க்கையில மது இல்லை. இனி அவரின் பார்வை வட்டத்துல கூட நான் வரமாட்டேன். இது என் மேல சத்தியம். நீங்க யார் கிட்டயும் இதை பத்தி மூச்சு கூட விடக்கூடாது." -மது

"அப்போ உன் வாழ்க்கைடா..." என்று கலங்கிய கண்களுடன் கேட்ட சரணிடம் திரும்பியவளிடம் அவளின் அந்த புன்னகை குடிகொண்டிருந்தது,

"என் வாழ்க்கை...அது இனி அவரின் நினைவுகளோட.. உனக்கும் ரகுவுக்கும் பிறக்கும் குழந்தைகளோட..அது அப்படியே ஓடிரும் அண்ணா. இனிமேல் இதை பத்தி பேச வேண்டாம். இது தான் என்னுடைய இறுதியான முடிவு" என்றவள் ஜன்னல் கம்பிகளை பிடித்து கொண்டு தோட்டத்தில் பார்வையை நிறுத்த இனி அவள் தன் புறம் திரும்ப மாட்டாள் தன் முடிவை மாற்றி கொள்ளவும் மாட்டாள் என்பதை உணர்ந்து தன்னால் எதுவும் செய்ய இயலாத விதியை நொந்தபடி கனத்த மனதுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான் சரண்.

மதுவிற்கு என்னதான் ஆனது...மதுவின் இந்த முடிவை மாற்ற சரணால் முடியாவிட்டாலும் விதியால் மாற்ற இயலுமா.... மதியின் நிலை என்ன இனி...

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

"பிரெண்ட்ஸ் இந்த முறை கொஞ்சம் அழுவாச்சி காவியம் ஆயிடுச்சு...சாரி..."

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.