(Reading time: 22 - 44 minutes)

வர் செல்லும் வரை அமைதியாக இருந்த மருத்துவர் அவர் சென்றவுடன் "நீங்க ரெண்டு பெரும் ரொம்ப சின்ன வயசா இருக்கீங்க. உங்ககிட்ட சொன்னா நீங்க எப்படி ஹாண்டில் பண்ணுவிங்கன்னு தெரியல. அதே சமயம் உங்க வீட்டு பெரியவங்க எல்லாம் இப்போ இருக்கற நிலையில் இந்த விஷயத்தை தாங்குவாங்கலானு தெரியலை. உங்க பெரியம்மாவும் இப்போ எங்க அப்சர்வேசன்ல இருக்காங்க. " என்று ஒரு நிமிடம் அமைதி காத்தவர் "இன்னும் ரெண்டு நாளுல உங்க சிஸ்டருக்கு இன்னொரு ஆப்பரேசன்  இருக்கு. அந்த ஆப்பரேசன்  பண்ணலைனா...." என்று தொடங்கி அவர் அதன் விவரங்களை சொல்ல சொல்ல சிலையாகி போயினர் இருவரும்.

பிறந்ததில் இருந்து எந்த கஷ்டங்களையும் காணாமல் வளர்ந்தவர்கள். தங்கள் மேல் எற்றபட்டிருக்கும் இவ்வளவு பெரிய பாரத்தை சுமக்க இயலாமல் வாய்விட்டு கதறினர். அவர்களின் நிலையை உணர்ந்த மருத்துவரும் சற்று நேரம் அமைதி காத்தார்.

"இப்போ நமக்கு முக்கியம் உங்க தங்கையின் உயிர். இந்த ஆப்பரேசன்  முடிஞ்சா உங்க தங்கை உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லைன்னு என்னால உறுதியாக சொல்ல முடியும். எதிர்காலத்தில் வருவதை யார் அறிவார். இறைவன் மேல் பாரத்தை போட்டுட்டு உங்க தங்கையை கவனியுங்கள் " என்று அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பினார்.

அவரும் ஒரு பெண்ணை பெற்றவர் தான் அவராலும் இதை அவ்வளவு சுலபமாக ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால் தான் ஒரு தாயின் தந்தையின் வழியை உணர்ந்தவராக அவர்களிடம் சொல்லாமல் இவர்கள் இருவரிடமும் பொறுப்பை ஒப்படைத்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

முகத்தை அழுந்த துடைத்து வெளியே வந்த இருவரும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் வெளியே காத்திருந்த கமிஷனரிடம் வந்தனர்.

"சொல்லுங்க அங்கிள் " -ரகு

"இந்த கேசை நான் ஆபிசியலா விசாரிக்கட்டுமா ? " -கமிஷனர்

ரகுவும் சரணும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். இந்த விஷயம் கேசாகும் பொது மருத்துவரின் அறிக்கையை சமர்பிக்க நேரிடும். பின் உண்மையை எல்லோரும் அறிய நேரிடும். அப்படி மட்டும் நேர்ந்தால், அதற்க்கு மேல் நினைத்து பார்க்க முடியவில்லை சரணால்.

"இல்லை அங்கிள் வேண்டாம். இது இப்படியே இருக்கட்டும். இன்னும் ஒரு வாரத்தில் நாங்க மதுவை டிஸ்சார்ஜ் பண்ணி கோயம்பத்தூருக்கே கூட்டிட்டு போறோம் சார். ப்ளீஸ் இந்த விஷயத்தை இதற்க்கு மேல் விசாரிக்க வேண்டாம்" என்று கமிஷனரை நோக்கி கையெடுத்து கும்பிட்டான் சரண்.

"சரண் என்னப்பா இது. சரி  நான் விசாரிக்கலை. போதுமா. இந்த பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவை நான் பிடிச்சு தண்டிக்கணும்னு நெனைச்சேன். பரவாலை. ஆனா சரண் நான் நிச்சயம் அவனை கண்டுபிடிப்பேன். ஆபிசியலா இல்லை அனபிசியலா. டேக் கேர் " என்று சொல்லி கிளம்பினார் அவர்.

ருவரும் தங்கள் பெரியம்மா அனுமதிக்கபட்டிருந்த அறைக்குள் நுழைந்தனர். இருவரும் ஏற்கனவே பேசி வைத்திருந்ததை போல சிரித்த முகத்துடன் உள்ளே செல்லவும் இவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த மங்களமும் அவருடன் துணையிருந்த மோகனாவும் லலிதாவும் நிச்சயம் ஏதோ நல்ல செய்தியோடு தான் வந்திருப்பார்கள் என்று நிம்மதியடைந்தனர்.

"மது எப்படி இருக்கா " -மோகனா

"அவளுக்கு ஆப்பரேசன்  முடிஞ்சுது. இனி எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் ஒரு வாரத்துல நாம மதுவை கோயம்பத்தூருக்கே கூட்டிட்டு போயி அங்க இருக்க ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மெண்டை கண்டினியு பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க " என்று சரண் சொன்னவுடன் அதுவரை இழந்திருந்த சக்தியெல்லாம் திரும்ப பெற்றது போல எழுந்து அமர்ந்தார் மங்களம்.

"சரண் என்னை இப்போவே மதுகிட்ட கூட்டிட்டு போ. எனக்கு அவளை பாக்கணும். கூட்டிட்டு போ." என்று சரணின் கையை பிடித்து கேட்க, "இல்லை பெரியம்மா அவ இப்போ மயக்கத்துல இருக்கா. இன்னும் மூணு நாலு மணி நேரம் ஆகும் நினைவு திரும்ப. நீங்க ரெஸ்ட் எடுங்க. அவ எழுந்ததும் நானே வந்து உங்களை கூட்டிட்டு போறேன். இப்போ நான் போயி எல்லோருக்கும் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரோம். " என்று பிடிவாதம் பிடித்தவரை ஒரு வழியாக சமாளித்து அங்கிருந்த கேண்டீனை நோக்கி சென்றனர் இருவரும். கேண்டினில் இருந்து உணவை வாங்கி கொண்டு வெளியே வந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தனர்.

"அண்ணா கொஞ்ச நேரம் பெரியம்மா முன்னாடி நடிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படி நாம இந்த விஷயத்தை எல்லோர்கிட்ட இருந்தும் மறைக்க போறோம். இது ரொம்ப பெரிய விஷயம்.இங்க இல்லைனாலும் நம்ம ஊருல ட்ரீட்மெண்டுக்கு மதுவை கூட்டிட்டு போகும் போது இந்த விஷயம் யாராவதுக்கு தெரிய வந்தா... அப்போ என்ன செய்றது  "-ரகு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.