(Reading time: 22 - 44 minutes)

"ம்மாடி மது ..." என்று கைகள் நடுங்க அவளின் விரல்களை மெதுவாக பற்றினார். அவரின் ஸ்பரிசத்தை உணர்ந்த மது மெல்ல கண் திறந்தாள்.தலையை அசைக்க முடியாமல் மெல்ல விழிகளைமட்டும் அவரிடம் கொண்டு செல்ல அவளின் வலி உணர்ந்து அவளின் தந்தை எழுந்து அவளின் முகத்திற்கு நேராக தன் முகத்தை காட்ட, இரண்டு நாட்களில் ஒருவரால் எடை இழந்து பத்து வயது கூட இயலுமா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தன் கம்பீரத்தை தொலைத்து நின்றார் சிவசண்முகம்.

"அப்பா " -மது

"மது ..என்னடா " அதற்க்கு மேல் பேச முடியாமல் அவர் கண்கள் கண்ணீரை உதிர்க்க,

"அப்பா ஏன்ப்பா ஷேவ் பண்ணலையா. எனக்கு ஒண்ணும் இல்லபா. நீங்க இருக்கும் போது எனக்கு ஒண்ணும் ஆகாதுபா. நாளைக்கு வரும்போது ஷேவ் பண்ணிட்டு வாங்கப்பா. இல்லைனா உங்க கம்பீரமே காணாம போய்டுச்சு" பேசும் போது வலியில் முகம் சுருங்கினாலும் தன் தந்தையின் மனம் எந்த அளவு வேதனையில் வருந்துகிறது என்று உணர்ந்த அன்பு மகளாய் அந்த நிலையிலும் தன்னை சமாதனம் செய்யும் தன் மகளை கண்டு நெகிழ்ந்து போனார் மதுவின் தந்தை.

"அம்மாடி நீ தானடா இந்த அப்பாவுடைய கம்பீரம். என்னை கலங்க வெச்சிட்டியேடா. இனி நீ சரிஆயிடுவடா. கண்டிப்பா அப்பா நாளைக்கு உனக்கு புடிச்ச மாதிரி வரண்டா. " என்று அவள் கை பிடித்து கலங்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"சார் அவங்க ரொம்ப பேச கூடாது ப்ளீஸ் " என்று அங்கிருந்த தலைமை செவிலியர் கூறவும் மதுவின் கையில் மென்மையாக முத்தமிட்டு," அம்மா பாக்கணும் டா. நான் போயி அவளை அனுப்பறேன்" என்று கூறி கண்களை துடைத்து கொண்டு அவர் வெளியே செல்ல வலியில் மெல்ல கண்களை மூடினாள் மது.

மதுவின் அப்பா வெளியே வந்ததும் "மங்களம் நம்ம பொண்ணு பேசிட்டா.. பாலா சக்தி மது பேசிட்டா. என்னை ஏன் ஷேவ் பண்ணலைன்னு கேட்டா " என்று சொல்லி முடிப்பதற்குள் தன் சகோதரர்களை கட்டிக்கொண்டு வெடித்து அழுதார் சிவசண்முகம். மதுவின் விபத்து குறித்து கேட்ட நொடி முதல் யாரோடும் பேசாமல் அழாமல் அமர்ந்திருந்தவர் தன்னுடைய வேதனைகளை கரைகட்டும் என்று அவரை அழ விட்டனர் இருவரும்.

"பெரியம்மா வாங்க " என்று மங்களத்தை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் சரண்.

தலையில் இருந்த முடி அகற்றப்பட்டு முழுதும் பேண்டேஜால் சுற்றப்பட்டு கைகளில் ரத்தம் இறங்க துவண்டு கிடந்தவளை கண்டவர் சரணின் கைகளை இறுக பற்றி கொண்டார். மெல்ல அவரை மதுவின் அருகே இருந்த இருக்கையில் கொண்டு அமர்த்தினான் சரண்.

மெல்ல அவளின் கன்னத்தில் கை வைத்து வருடினார் மங்களம்.

மெல்ல விழி திறந்து தன் அம்மாவை நோக்கினாள் மது.

இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. மதுவின் விழியோரம் கண்ணீர் வடிய மெல்ல தன் விரலால் அதை துடைத்தார் மங்களம். "ரொம்ப வலிக்குதாடா கண்ணா " என்ற அவர் விழிகளில் வெள்ளம் கன்னங்களை தாண்டி வழிய, அவரின் இந்த ஒரு கேள்வியில் உடைந்த மது "அம்மா அழாதிங்கம்மா. நீங்க சொன்னதை கேட்காம நான் பெங்களூரு போனதால தான இப்படி எல்லாம் ஆயிடுச்சு. சாரிமா." என்று மெல்லிய குரலில் கூறிய போது உள்ளே நொறுங்கி போனது அந்த தாயின் உள்ளம். ஆனால் இது தன் மகளின் மறு பிறப்பு. இதை எதிர்கொண்டு அவள் மீண்டு வர வேண்டும். அந்த நம்பிக்கையை அவளிடம் இருந்து பறித்து விடக்கூடாது என்று உணர்ந்த அந்த தாயுள்ளம் தன்னுடைய வலியை மறைத்து தன் மகளை மீண்டும் ஒரு முறை தன் கருவில் சுமக்கும் தாயின் கவனத்துடன் அறிவியலாளர்கள் சொல்வதை போல மனிதன் தாங்க கூடிய அளவை காட்டிலும் பலமடங்கு அதிகமான பிரசவ வலியை தன்னுடைய குழந்தையின் வரவிற்க்க்காகவும் நலத்திற்க்க்காகவும்  தாங்கி கொள்ளும் ஒரு தாயாக மறுபடியும் மாறினார்.

"அப்படியே ஒண்ணு வாயில போட்டனா இந்த மாதிரி பேச மாட்ட. உனக்கு இப்போ என்ன ஆயிடுச்சுன்னு இப்படி எல்லாம் பேசற. ஏதோ போறாத காலம் ஒரு சின்ன அக்சிடண்ட். அதுல ஒரு சின்ன அடி. இப்போ அது ஆப்பரேசன் பண்ணி சரி பண்ணியாச்சு. இந்த மாதிரி தத்து பித்துன்னு பேசாம வீட்டுக்கு வந்து சேரு. நீ வந்து தான் உன் கல்யாண வேலைகளை நாங்க ஆரம்பிக்கணும். " என்று தன் மனோதைரியம் முழுதும் திரட்டி பேசியவர் தன்னையே பார்த்திருந்த மகளின் கைகளை மெல்ல வருடி  "மதும்மா உன் உயிர் உன்கிட்ட இல்லடா. இந்த அம்மா இங்க வெச்சுருக்கேன் " என்று தன் நெஞ்சை தொட்டு காட்டியவர் "என்னை தாண்டி உன்னை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. உனக்கு ஒண்ணும் இல்லடா. இந்த வலி வேதனை எல்லாம் சரி ஆயிடும். நீ எழுந்து வா. என்னுடைய மதுவா.அம்மா எப்பவும் உன்கூட இருப்பேன் " என்று கூறியவர் "ரெஸ்ட் எடுடா கண்ணம்மா " என்று அவளின் கன்னங்களை வருடி தன் வாயில் வைத்து முத்தமிட்டு "சரண் நீ பேசிட்டு வாப்பா. நான் வெளிய இருக்கேன்" என்று சொல்லி எழுந்து சென்றார்.

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா

உலகெல்லாம் ஓர் சொல்லில் அம்மா

மதுவின் அருகில் சென்று அமர்ந்தான் சரண்.

"பயமுறுதிட்டியேடா... "  -சரண்

"அண்ணா...ரொம்ப கஷ்டபடுதிட்டனா" –மது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.