(Reading time: 22 - 44 minutes)

"டேய் உனக்காக நாங்க படறது எல்லாம் சிரமமாகுமா.. நீ எங்க மதுடா...இனி நீ இந்த மாதிரி பேசி ஸ்ட்ரைன் பண்ணிக்காதே. நீ கண் முழிச்சு பேசினதே போதும்டா. எனக்கு வேற எதுவும் வேணாம். என் உயிர் திரும்ப வந்த மாதிரி இருக்குடா. " என்று கூறியவன் அங்கிருந்த செவிலியரிடம் நன்றி கூறி வெளியே வந்தான். அனைவரும் சென்று பார்த்துவிட்டு வந்த பின்னர் மீண்டும் மருந்துகக்ளின் விளைவால் மது உறங்கிபோனாள்.

ரகுவை மருத்துவமனையில் விட்டுவிட்டு எல்லோரையும் ஹோட்டலில் விட்டு வந்தான் சரண்.

யாருக்கும் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே அவரவர் அறைகளில் சென்று அமர்ந்தனர்.

சிவசண்முகத்தின் மடியில் தலை வைத்து படுத்தார் மங்களம். மெல்ல தன் மனைவியின் தலையை கோதினார். தன்னுடைய தாயும் தந்தையும் இறந்த பின் இது போன்று மங்களம் தன் கணவரின் மடியில் தலை வைத்து அழுததில்லை. தன் மடியில் ஈரத்தை உணர்ந்தவர் "மங்களம் அழறியா " என்று கேட்க, "மதுக்கு ரொம்ப வலிக்குதுங்க. அவளுக்கு ரொம்ப வலிச்சிருக்குமே. அம்மா அம்மான்னு அழுதுறுப்பாளே. அந்த சமயத்துல அவளை தூக்கி என் மடியில வெச்சு பாக்காம... என் பெத்த வயிறு பத்தி எரியுதுங்க. கைல ஊசி போட்டு ரத்தம் ஏத்தறாங்க. எத்தனை பேருக்கு உதவி பண்ணிருப்போம். நம்ம பொண்ணு அடிபட்டு கெடக்கும் போது அவளுக்கு உதவி பண்ண யாரையுமே அனுப்பலையே கடவுளே. நான் அப்படி என்ன பாவம் பண்ணுனேன்." என்று அழத்தொடங்கினார். "அம்மா உங்க பேச்சை கேட்காம போனதால தான் இப்படி ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. ஐயோ என்னால தாங்க முடியலைங்க. அவ என்ன தப்பு பண்ணுனாலும் நான் மனசறிஞ்சு அவளை திட்டுனது இல்லையே. " என்று அழுதவரை எவ்வளவோ முயன்றும் சமாதான படுத்த முடியவில்லை சிவசன்முகத்தால்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

அப்படியே அழுது உறங்கி போனார் மங்களம். மெல்ல அவரை தலையணையில் கிடத்தியவர் எழுந்து சென்று கண்ணாடி முன் நின்று ஷேவ் செய்ய தொடங்கினார்.

இதோ மருத்துவர் கூறிய மற்றொரு அறுவை சிகிச்சையும் முடிந்து விட்டது. மருத்துவரின் அறிவுரையோடு கூடுதலாக மூன்று நாட்கள் இங்கிருந்து சிகிச்சை மேற்கொண்டவர்கள், கோயம்பத்தூரில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனையை தொடர்பு கொண்டு விபரங்களை கூறி அங்கிருந்த மருத்துவர்கள் இங்கிருந்த தலைமை மருத்துவரோடு பேசி மதுவிற்கான சிகிச்சை ஏற்பாடுகளை மேற்கொண்டனர், மருத்துவ உபகரணங்களோடு கோவையிலிருந்து வந்த மருத்துவ குழுவினர் அடங்கிய ஒரு ஆம்புலன்சில் மது கோவை சென்றடைந்தாள்.

இன்றோடு இரண்டு மாதங்கள் ஓடி விட்டது மது கோவை வந்து. மதுவின் தலையில் இருந்த கட்டு முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. தையல் பிரிக்கப்பட்டு மெல்ல எழுந்து நடமாட தொடங்கியிருந்தாள் மது மருத்துவரின் அறிவுரைகளோடு.

உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதோ மேலே ஏறுவதோ கூடாது என்று மருத்துவர் கூருயிருப்பதால் அவளின் அறை கீழேயே மாற்றப்பட்டு மங்களம் அவளுடன் இருந்தார்.

காலையில் எழுந்ததில் இருந்தே எப்படியேனும் இன்று மதுவிடம் தனிமையில் பேசிட வேண்டும் என்று எண்ணினான் சரண். மெல்ல மது இருந்த அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான். தலையணை சற்று நிமிர்வாக வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தால் மது. பாப் கட் செய்ததை போல இருந்தது அவளின் தலை முடி.முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை. விபத்தில் இருந்து மீண்டு ஓரளவு வெளியே வந்து விட்டாள் தான். ஆனால் முகத்தில் இயல்பாக அவளிடம் எப்போதும் இருக்கும் அந்த புன்னகை இல்லை. மற்றவர்களுக்காக சிரிக்கிறாளே தவிர அவளிடம் உண்மையான மகிழ்ச்சி இல்லை. இவள் முகத்தில் அந்த சிரிப்பை கொண்டு வர சரணும் எவ்வளவோ முயன்று தோல்வியையே கண்டான். அவனுக்கு தெரியும் அவளின் சிரிப்பு மீண்டு வர வேண்டுமானால் அது ஒருவனால் மட்டுமே முடியும். ஆனால் அவனிடம் இதை பற்றி இப்போது எதையும் கூற வேண்டாம் என்று கூறி வைத்திருந்தாள். இப்போது எல்லாம் ஓரளவு சரியாக இருக்கும் போது இனியும் ஏன் மதியிடம் இதை மறைக்க வேண்டும் என்று அவனுக்கு புரியவில்லை. அவனிடம் இருந்து தினமும் வரும் அழைப்புகளுக்கு அவனால் பதில் சொல்ல இயலாமல் இன்று எப்படியும் இதை குறித்து மதுவிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவுடன் அவளின் அறையில் நுழைந்தான்.

"குட் மோர்னிங் மது" - சரண்

"என்னண்ணா இன்னைக்கு இதோட மூணு தடவ குட் மோர்னிங் சொல்லிடிங்க. இன்னைக்கு என்ன அவ்வளோ ஸ்பெசலான நாளா " -மது

பதில் கூறாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் சரண்.

"ஏதோ சொல்லனும்னு நெனைக்கிறிங்க சொல்லுங்க " -மது

"மதியை பத்தி தாண்டா" -சரண்

"மதியா...அவர பத்தி நம்ம பேச என்ன இருக்குண்ணா?" என்று கேட்டபடி தன் பார்வையை ஜன்னலின் வழியே வெளியே தெரிந்த தோட்டத்தில் செலுத்தினாள்.

"என்னம்மா இப்படி பேசற.." என்று அதிர்ச்சியுடன் கேட்ட சரணிடம் திரும்பியவள் " ஏண்ணா தலைல அடிபட்டதுல இவளுக்கு பழசெல்லாம் மறந்துடுச்சொன்னு நெனைக்கிரிங்களா.. ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை . இந்த காலைல அவரை பத்தி பேசற அளவுக்கு முக்கியமான விஷயம் எதுவும் இருக்கும்னு எனக்கு தோணலை, அதான் அப்படி கேட்டேன். நீங்க  ஏதோ முக்கியமான விஷயம் பேச வந்த போல இருக்கு. சாரி சொல்லுங்க அண்ணா என்ன விஷயம் " என்று தனக்கும் மதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லாததை போல பேசிய மதுவை குழப்பதுடன் பார்த்தான் சரண். ஒரு நிமிடம் யோசித்தவன் "நீ எப்போ மதிகிட்ட ப்ரபோஸ் பண்ண போற " என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.