(Reading time: 11 - 22 minutes)

னம் கட்டுபாடின்றி பின்னோக்கி செல்ல அதை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லாமல் அதோடு பயணப்பட்டான் மதி இரண்டு வருடங்கள் பின்னோக்கி.

 கடந்த ஒரு மாதமாக முயன்று கொண்டிருக்கிறான் சரணை தொடர்பு கொள்ள. ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாக இருந்தது. அன்று அவன் பெங்களூரில் இருந்து பேசியதோடு சரி, அதன் பின் அவனும் இவனை அழைக்கவில்லை. இவன் அழைத்தாலும் சரியாக பேசுவதில்லை. சரி அவனுக்கு தொழிலில் ஏதேனும் அவசர வேலை இருக்கலாம் என்று இவன் எண்ணினாலும் இவன் மனம் மதுவுடன் பேச துடித்தது. அவளின் பதிலை கேட்க தவித்தது. ஆனால் சரண் இல்லாமல் எப்படி மதுவை சந்திக்கும் ஏற்பாட்டை செய்வது என்று புரியாமல் குழம்பினான். இவன் மட்டும் காதலித்து அதன் பின் இந்த திருமண ஏற்பாடு நிகழ்ந்திருந்தால் இந்நேரம் அவன் அவளை தேடி பெங்களூரில் இருந்திருப்பான். ஆனால் இவன் பெற்றவர்களையும் மதுவின் குடும்பத்தாரையும் பொருத்தவரை இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதில் தன்னுடைய போருமையின்மையல் ஏதேனும் குழப்பம் நேர்ந்து விட அவனுக்கு விருப்பமில்லை. இந்த திருமணம் எல்லோருடைய முழு மகிழ்ச்சியுடன் நடப்பதற்கான வாய்ப்பை இறைவன் கொடுத்திருக்கிறான். இது போன்ற ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் அமைவதில்லை.இதை கேட்க அவனுக்கு துளியும் விருப்பமில்லை. எங்கே அவளை சந்திக்க சென்று அது அவளின் வீட்டார் அறிந்தால் ஏதும் தவறாக கொள்ளவில்லை என்றாலும் ஏற்கனவே மதுவின் சம்மதம் பெறப்படவில்லை என்று கூறி இருந்தும் இவன் அவசரப்படுவதாக எண்ணிவிடுவார்களோ என்று வேறு இருந்தது மதிக்கு. அதனாலேயே பல்லை கடித்து கொண்டு இருந்தான் பொறுமையாக.

ஆனால் ஒரு நாள் இரண்டு நாள் இல்லாமல் வாரக்கணக்கில் சரணை சந்திக்க இயலவில்லை. தன் காதலை சொன்னதில் இருந்து அவளின் நிலை அறிய முடியவில்லை என்ற தவிப்பு நாளுக்கு ஆள் அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவனின் பொறுமையை கொன்று கொண்டிருந்தது. இல்லை இன்று எப்படியும் சரணிடம் பேசி விட வேண்டியது தான். இல்லை என்றால் நேரே மதுவின் வீட்டிற்கு செல்வது என்று முடிவெடுத்து விட்டன. யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை எற்று முடிவு செய்த பின் தான் அவன் மனதின் தவிப்பு கொஞ்சமேனும் அடங்கியது. அன்று இரவு தான் அவன் சிறிது நிம்மதியாக உறங்கினான். இதற்க்கு பிறகு அவன் பல நாள் தன்னுடைய தூக்கத்தை தொலைக்க போவதை அறியாமல்.

காலையில் அலுவலகம் சென்றடைந்தவுடன் முதல் வேலையாக சரணை அழைத்தான். நம்பர் பிசி என்று வரவும் சரி பின்னர் அழைக்கலாம் என்று தன் வேளையில் மூழ்கி போனான். சிறிது நேரத்திலேயே அவனின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தவன் இணைப்பை ஏற்று " என்ன மச்சான் இந்த மாப்பிளையை இப்படி அம்போன்னு தொங்கவிட்டுடிங்கலே " என்று விளையாட்டாகவே பேச்சை தொடங்கினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"ச்சே ச்சே அப்படி இல்லைப்பா. எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நீ ப்ரீயா இருந்தா அந்த காபி ஷாப்புக்கு வரியா?" -சரண்

"கண்டிப்பா நான் இன்னும் 15 மினிட்ஸ்ல அங்கே இருப்பேன் " என்று அழைப்பை துண்டித்தவன் சொன்னதை போல அடுத்த 15வது நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்தான்.

அவனுக்கு முன் அங்கே வந்து காத்திருந்தான் சரண். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே அவன் ஏதோ பதற்றமாக இருப்பதை போல தோன்றியது மதிக்கு.

அவனின் அருகே சென்றவன் "ஹலோ மச்சான் எப்படி இருக்கீங்க " என்று புன்னகையுடன் அவன் எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

"நல்லா இருக்கேன் பா " என்றவன் இருவருக்கும் காபி ஓர்டர் கொடுத்து விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

"என்ன சரன் எதாவதும் பிரச்சனையா? பிசுனசில் எதாவது ? " -மதி

"இல்லைப்பா. எனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். பிரச்சனை தான் ஆனா பிசுனசில் இல்லை. " -சரண்

....

"மதி அது வந்து...." -சரண்

இப்போது தான் மதி அந்த விஷயத்தை கவனித்தான் வார்த்தைக்கு மூநூறு முறை மச்சான் மச்சான் என்று விளிக்கும் சரண் இன்று தன்னை அப்படி எதுவும் குறிப்பிட்டு அழைக்கவில்லை என்பதை. இது நிச்சயம் மது குறித்த விஷயம் என்பது அவனுக்கு புரிந்து போனது. 

"சொல்லுங்க மச்சான் என்ன விஷயம்னு. என்கிட்டே என்ன தயக்கம் " என்று சரணை ஊக்கினான்.

"மதி உன்னை எங்க வீட்டு மாப்பிளை ஆக்கிக்குற பாக்கியம் எங்களுக்கில்லை. " என்று கூறி மெல்ல நிமிர்ந்து மதியின் முகத்தை பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

"ஏன்னு தெரிஞ்சுக்கலமா " -மதி

"அது ... மதுக்கு இதுலை இஷ்டம் இல்லை " -சரண்

இப்போது வாய்விட்டு சிரித்த மதியை புரியாமல் பார்த்தான் சரண்.

"உன் தங்கச்சி சொன்னாளா. நல்லா ஏமாந்துட்ட சரண். நீ இப்போ என்னை உன் தங்கை கிட்ட கூட்டிகிட்டு போ . அவளுக்கு விருப்பமா இல்லையானு நானே கேட்கிறேன் " என்றவனை வேதனையோடு நோக்கினான் சரண்.

"அண்ணா நான் சொல்ற மாதிரி சொல்லுங்க. நீங்க வேற என்ன சொன்னாலும் என்னை பார்க்கணும் என்கிட்டே பேசணும்னு சொல்லுவாரு. ஆனா நா சொல்ற மாதிரி நீங்க சொன்னிங்கனா அதுக்கும் மேலே எதுவும் கட்டாயப்படுத்த மாட்டார் " என்று இங்கு வரும் முன் மது கூறியது ஞாபகம் வந்தது சரணுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.