(Reading time: 13 - 26 minutes)

ரயூவிடம் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அறைக்கு வந்த அர்னவ் தனது செல்போனை பார்க்க, அதில் ஒரு மெஸ்ஸேஜ் இருந்தது…

யாராக இருக்கும் என அவன் எண்ணத்தேவையே இல்லை.. ஏனெனில் அவனுக்கு தெரியும் அது யாருடையதென்று…

ஜானவி… அவனின் அக்காவின் தங்கையாக இருக்கலாம்… எனினும் அவனுக்கு அவள் தோழி…

ஆம்… அவன் அப்படித்தான் பார்த்தான் அவளை… இப்போதும் பார்க்கின்றான்…

அவளை நினைத்தாலே “லூசு…” என்ற வார்த்தை தான் அவனுக்கு தோன்றும்…

அவளை முதன் முதலில் சரயூவின் நிச்சயதார்த்தத்தில் தான் பார்த்தான்…

“சிஸ்… மாமா சும்மா ஜம்முன்னு இருக்குறார்…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“ஓ… சரிடா தம்பி…”

“ஆமா லாவண்யா வந்துட்டாளான்னு பாரு…”

“இல்ல சிஸ்… அந்த அக்கா இன்னும் வரலையே…”

“வருவேன்னு சொன்னாளேடா எங்கிட்ட…”

“இது நிச்சயம் தான… ஒருவேளை கல்யாணத்துக்கு போயிக்கலாம்னு இருக்குறாங்களோ என்னவோ…”

“இல்லடா… அவ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்… எப்படி என் நிச்சயத்துக்கு வராம இருப்பா…”

“ஹ்ம்ம்… அதுவும் சரிதான்…”

“சரி… இன்னும் யாரெல்லாம் வருவா… சந்தியா அக்கா, அப்புறம் மீனாட்சி அக்கா… ரெண்டு பேரும் தான…”

அர்னவ் கேட்டதும், சற்று நேரம் யோசித்தவள், “ஹே…. இல்லடா… இன்னும் ஒரு பொண்ணு வருவா…”

“இன்னும் ஒருத்தரா?... அது யாரு சிஸ்…”

“அது என்னோட ஜூனியர்டா… நல்லா பேசுவாடா… எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்… அவளுக்கும் தான்….”

“எல்லாம் சரிதான் சிஸ்… பட் அந்த பொண்ணு இங்க வருவாங்கன்னு என்ன உத்திரவாதம் இருக்கு?..”

“இல்லடா… நான் போனில் சொன்னதுமே வரேன்னு சொல்லியிருக்கா… எப்படியும் மீனாட்சி கூட வருவா… இல்ல லாவண்யா கூட வருவாடா…”

“சரி சிஸ்… பார்ப்போம்…”

“வரும்போது கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு வாடா இங்க… ஃபர்ஸ்ட் டைம் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வர்றா இல்லையா… அதான்….”

“சரி… சரி… ஒவர் பில்டப் பண்ணாதீங்க… அவங்க பேரை சொல்லுங்க…”

“உன் வயசு தாண்டா அவளுக்கும்… உன் பேட்ச் தான் அவளும்…”

“ஷப்பா….. இது வேறயா?... சரி பேரை சொல்லுங்க…”

“ஜானவி….”

“ஓ… ஓகே சிஸ்… நான் போய் பார்க்குறேன்…”

“டேய்… டேய்… நான் அவ பேரை மட்டும் தான சொன்னேன்… அதுக்குள்ள ஓடுற?..”

“இன்னும் என்ன சொல்ல போறீங்க?.. ஜாதகம்… குலம்… கோத்திரமா?... அட போங்க சிஸ்…. சும்மா கடுப்பேத்திக்கிட்டு…”

“அந்த பொண்ணை நீ பார்த்தே இல்லைன்னு ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னா, நீ ரொம்ப தாண்டா பண்ணுற?..”

“யார் நான் ரொம்ப பண்ணுறனா?... தேவை தான் சிஸ் எனக்கு… இந்த பேச்செல்லாம்..” என அவன் நொந்து கொள்ள…

“பின்ன என்னடா?... அவளை பத்தி நான் சொல்லாம நீ எப்படி அது அவ தான்னு தெரிஞ்சிப்ப?...”

“சிஸ்… அது என் பிரச்சினை…. நீங்க ஏன் கவலைப் படுறீங்க?... அந்த பொண்ணு வந்ததும் உங்க கூட இருப்பா… ஓகே…?...”

“என்னமோடா… நீ சொல்லுற… பார்ப்போம்… உன் மூளை எந்த அளவு வேலை செய்யுதுன்னு…”

“அதெல்லாம் பக்காவா செய்யும்… யூ வெயிட் அண்ட் சீ சிஸ்…” என்றவன் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து, வாசலுக்கு வந்தான்…

“டேய்… அர்னவ்… இங்க என்ன பண்ணுற?...” என தன் நண்பன் ஒருவன் அழைக்க, “சிஸ் இன்வைட் பண்ண அவங்க ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க… அவங்களை சிஸ் கிட்ட கூட்டிட்டு போகணும்… அதான் இங்க இப்படி…” என அவன் சிரித்துக்கொண்டே சொல்ல, “அது சரி… உன் வாட்ச் மேன் டுயூட்டியை நல்லாப் பாருடா…” என அவனது நண்பனும் கிண்டல் செய்து விட்டு தனது நண்பர்கள் குழுவை தேடி செல்ல,

அப்போது, அவனது தெருவின் கடைசியில் ஒரு பெண் நின்று கையை பிசைவதும் போனை எடுத்து யாருக்கோ போன் செய்து சே என்று நொந்து கொள்ளவுமாக இருக்க, மெதுவாக இவன் அவளை நோக்கி நடந்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.