(Reading time: 13 - 26 minutes)

லூசு… லூசு… ஜானு… அறிவே இல்லடி உனக்கு… ஒழுங்கா கல்யாணத்துக்கே வந்திருக்கலாம்… இப்போ பாரு உங்கூட யாருமே வரலை… லாவண்யா அக்காவையும் காணோம்.. தனியா உள்ள போகவும் யோசிச்சிட்டிருக்குற…” என தன்னை தானே திட்டிக்கொண்டிருந்தாள் ஜானவி…

“அய்யோ… சே… இந்த லாவண்யா அக்கா வேற, போனையும் எடுக்க மாட்டிக்குறாங்க… சே…” என அவள் நகத்தினை கடிக்காத குறையாக பேசிக்கொண்டிருக்க, அவளை நோக்கி வந்தவன், ஒன்றுவிடாமல் அவள் பேசிய அனைத்தையும் கேட்டு சிரித்துக்கொண்டான்…

“இப்போ நான் என்ன தான் பண்ணுறது?... இப்படியே நின்னுட்டிருந்தா விடிஞ்சிடும்… சீக்கிரம் போ… எப்படியாச்சும் சரயூ அக்காவை பார்த்துட்டா அப்புறம் நிம்மதியாகிடும்… ஆனா அதுதான் எப்படி பார்க்க?...” என்ற அவளது கேள்விக்கு,

“கண்டிப்பா இப்படியே நின்னுட்டிருந்தா பார்க்கவே முடியாது… அதுமட்டும் கன்ஃபார்ம்…” என்றவனின் குரலில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவள்,

அங்கே புதிதாக ஒருவன் நிற்பதை பார்த்து அதிர்ந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல், அங்கிருந்து நகர முற்பட்ட போது,

“ஹலோ… என்ன நிச்சயதார்த்தத்துக்கு வரலையா?..” என்ற அவனின் கேள்வியில் அப்படியே நின்றாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்... 

“நான் நிச்சயதார்த்தத்துக்கு தான் போறேன்னு இவனுக்கு எப்படி தெரியும்?...” என யோசிக்கையிலே,

“நான் போறது இவனுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீங்களா?..” என அவன் கேட்க, கண்களை உருட்டினாள் அவள்...

“இவங்கிட்ட ஹெல்ப் கேட்கலாமா?... சே… யாருன்னே தெரியாதவங்க கிட்ட எப்படி கேட்க முடியும்?.. அறிவே இல்ல ஜானு உனக்கு… நீ லூசே தான்…” என அவள் முணுமுணுக்க,

“தெரியாதவங்க கிட்ட எப்படி பேச, ஹெல்ப் கேட்குறதுன்னு நினைக்குறீங்களா?... அது ஒன்னும் ப்ராஃப்ளமில்லை… பட் அதுக்காக உங்களை நீங்களே திட்டிக்க வேண்டாம்… சரியா?...” என அவன் கேட்டதும், ஆச்சரியத்தில் வாயைப் பிளக்காத குறை தான் அவள்…

பின்னே நினைப்பதை எல்லாம் அப்படியே மனதிலிருந்து பார்த்தவன் போல் சொன்னால், யார் தான் ஆச்சரியப்படாமல் இருப்பார்கள்…??? எனில், அவளுக்கும் அந்த ஆச்சரியம் உதித்ததில் அதிசயம் ஏதுமில்லையே…

அவளின் ஒவ்வொரு முகபாவனையையும் கவனித்துக்கொண்டே இருந்தவன்,

“நான் கார்த்திக்… சரயூ சிஸ்ஸோட தம்பி… நீங்க வருவீங்கன்னு சிஸ் சொன்னாங்க… போகலாமா?...” என கேட்டதும்,

“அப்பாடா… இவன் தெரியாத ஆள் இல்லை… சரயூ அக்காவோட தம்பியா… அப்போ சரி… நிம்மதி…” என்ற உணர்வுடன் அவள் முகம் பூக்க, அதையும் அவன் கவனித்துக்கொண்டான்…

அவன் சரயூவின் தம்பி என்ற ஒன்றே போதுமென்று மனம் முடிவெடுத்துவிட, அவனை அமைதியாக பின் தொடர்ந்தாள் அவள்…

அவன் அவளுடன் வீட்டிற்குள் நுழையும் போது,

“டேய்… யாரிது…” என அர்னவின் நண்பர்கள் காதோடு கிசுகிசுக்க, அவள் அவனின் பின்னே மறைந்தாள்…

“சிஸ்ஸோட ப்ரெண்ட்டுடா…”

“ஃப்ரெண்டா… பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே…” என அவன் நண்பன் ஒருவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“இருங்கடா வந்துடுறேன்…” என்றவன், தன் பக்கத்திலிருந்த அவளை தேட, அவள் அங்கே இல்லை…

எங்கே போனாள் என்ற நினைவுடன் அவன் விழிகள் தேட,

“மச்சான்… உன் பின்னாடி…” என்ற நண்பனின் குரலில் சிரித்தவன், திரும்பி நின்று அவளைப் பார்த்தவன்,

“உள்ளே போகலாமா?...” எனக் கேட்க, அவள் சரி என்று தலை அசைத்தாள்…

அவளை அழைத்துக்கொண்டு சரயூவிடம் அவன் செல்ல,

“ஹேய்… ஜானு.. வா…வா…” என சரயூ குதூகலிக்க,

“ஹாய்… அக்கா… கங்கிராட்ஸ்…” என சரயூவின் கைப்பிடித்து குலுக்கினாள் ஜானவி..

“டேய்… சொன்ன மாதிரியே கூட்டிட்டு வந்துட்டீயே… பரவாயில்லைடா… மூளை உனக்கும் வேலை செய்யுது…”

“பின்ன என்னை என்ன உங்களை மாதிரி நினைச்சீங்களா?..” என அவன் கேட்க

“போடா அரட்டை…” என்றாள் சரயூ…

“சரி நீங்க பேசிட்டிருங்க… நான் வரேன்…” என அவன் அங்கிருந்து அகல,

“லாவண்யா எங்க ஜானு… அவ வரலையா?...”

“அவங்களை காணோம்க்கா… நானும் போன் பண்ணினேன்.. எடுக்கவே இல்லை..”

“எங்க போய் தொலைஞ்சா அவ?... வரட்டும் நான் பேசிக்கிறேன்” என சரயூ திட்டிக்கொண்டிருக்கும்போது, நினைவு வந்தவளாக,

“ஆமா ஜானு… கார்த்தி எப்படி உன்னை இங்க கூட்டிட்டு வந்தான்?...” என கேட்க,

அந்த நேரம் சரியாக, “ஹேய் சரயூ………..” என்றபடி ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள் லாவண்யா…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.