(Reading time: 13 - 26 minutes)

ராம போயிடுவியோன்னு நினைச்சேண்டி… நல்லவேளை வந்துட்ட… ஆமா எங்க சந்தியாவும் , மீனாட்சியும்?...”

“வந்திட்டே இருக்குறாங்கடி…” என்ற லாவண்யா ஜானுவை பார்த்து,

“ஹேய்… நீ எப்போ வந்த?...” என்றதும்,

“போங்கக்கா… எத்தனை தடவை போன் பண்ணினேன் தெரியுமா?... நீங்க எடுக்கவே இல்லை…” என குறைபட,

“சாரி சரயூ… போனை வீட்டிலேயே வச்சிட்டு கிளம்பிட்டேன்.. அதான்…” என்றாள் லாவண்யா…

“ஹ்ம்… சரிக்கா…” என அவள் சொன்னதும், அடுத்தடுத்து அரட்டை ஆரம்பிக்க, அதில் மற்றவற்றை மறந்து போனாள் ஜானவி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்... 

ஒரு மணி நேரம் கழித்து, ஜானவியிடம் வந்த லாவண்யா, “ஜானு நான் அவசரமா கிளம்பணும்… சரயூகிட்ட சொல்லாத… நான் கிளம்புறேன்… சரியா?..” எனவும்,

“அய்யோ… அக்கா… அப்போ நான் எப்படி போறது?... உங்க கூட போகலாம்னு தான இருக்குறேன்…” என அவள் மனம் கூப்பாடு போட,

“ப்ளீஸ்… ஜானு… சரயூகிட்ட சொல்லாத… நாம நாளைக்கு பார்க்கலாம்… பை…” என்றபடி அவள் விரைந்து செல்ல,

ஜானு இங்கே கைகளை பிசைந்தபடி என்ன செய்ய என யோசிக்கலானாள்…

நிச்சயம் முடிந்த பிறகு, ஜானுவை அழைத்த சரயூ, “ஜானு ஏன் ஒருமாதிரி இருக்குற?... என்னாச்சு…” என வினவ,

“இல்லக்கா… எதுமில்லை… நேரமாச்சுல்ல… அதான்…” என்றாள் ஜானு…

“ஆமால்ல… சரிடா… ரொம்ப தேங்க்ஸ் வந்ததுக்கு… சாப்பிட்டியா?..”

“இதுக்கு ஏதுக்கு தேங்க்ஸ் எல்லாம்?... சாப்பிட்டேன்க்கா…”

“சரிடா… லாவண்யா எங்க?...”

“அது வந்துக்கா…” என இழுத்தவள், “ஆ…. அவங்க வெளியே வெயிட் பண்ணுறாங்க… நான் போனதும் கிளம்பிடுவோம்…” என சொல்ல,

“சரிடா… பார்த்து போயிட்டுவா… வீட்டுக்கு போனதும் போன் பண்ணு… என்ன… சரியா?...” எனக் கேட்க

“சரிக்கா… நான் வரேன்…” என்றபடி வாசலை நோக்கி நடந்தாள் ஜானு…

அப்பாவை வர சொல்லலாம் என எண்ணி செல்போனை எடுத்தவள், அவர் ஊருக்கு போயிருக்கிறார் என்ற நினைவும் வர, தன்னையே நொந்து கொண்டாள்…

இங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் சென்றுவிட்டால் போதும்… அங்கிருந்து வீட்டிற்கு போயிடலாம்… ஆனால் பஸ் ஸ்டாண்ட் இங்கிருந்து அதுவும் தனியே இந்த ராத்திரி நேரத்தில் எப்படி போவது?... என யோசித்து யோசித்து பார்த்து கடைசியில் சரி நடந்தே போயிடலாம்… என முடிவெடுத்து, வாசலுக்கு வந்து அவள் தெருவை பார்க்க, சரயூ இருந்த தெரு முனை வரை கொஞ்சம் ஆள்நடமாட்டம் இருந்தது… அதன் பிறகு உள்ள தெருவில் எப்படி இருக்கும் என்ற யோசனைக்கே அவள் செல்லவில்லை..

எப்படி இருந்தாலும் தனியாக சென்றாக வேண்டுமே… அதனால் தைரியத்துடன் மெல்ல நடந்து தெருமுனையை தாண்டிய போது,

நாய் ஒன்று வேகமாக குரைத்துக்கொண்டு ஓடிவர, கைகால் ஆட்டம் எடுத்தது அவளுக்கு…

“போச்சு… நாய்கிட்ட கடிவாங்கப் போறது உறுதி… செத்த ஜானு நீ…” என அவள் மனதிற்குள் புலம்ப,

அந்த நாயோ வேகமாக அவளை நோக்கி வந்தது, தன் பற்களை காட்டி மிரட்டிக்கொண்டே…

“இதுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்?... இது ஏன் இப்படி என்னை பயமுறுத்துது?... கடவுளே…” என அவள் அவரை அழைக்க,

அது அவளை நெருங்க சில விநாடிகளே இருந்தது…

“ஓடினாலும் துரத்தும்… நின்றாலும் பாயும்… எதுக்கு இந்த நாய்க்கு இப்படி ஒரு கொலைவெறி… சே… வசமா மாட்டிக்கிட்டேனே… ஜானு…” என பயத்தில் நடுங்க ஆரம்பிக்க,

“அதோட தெருவுக்கு நீ புதுசா வந்தா பின்ன உன்னை மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்கவா செய்யும்?... எப்படி நீ என் ஏரியாவுக்கு என் பர்மிஷன் இல்லாம வரலாம்னு கொந்தளிக்கத்தான செய்யும்?...” என அவளின் மனம் எடுத்துரைத்தது அவளுக்கு…

“எங்க ஏரியா உள்ளே வராதன்னு அப்போ நாயை பாட சொல்லு… நான் இனி இந்த ஏரியா பக்கமே வரமாட்டேன்…” என அவளும் தன் மனதினை திட்ட,

“உனக்கு போய் அட்வைஸ் பண்ணினேன் பாரு… நீ எல்லாம் நாய்கிட்ட கடிவாங்கினா தான் திருந்துவ… முதலில் கடிவாங்கு…. அப்புறம் அந்த நாயென்ன பாடுறது வலியில நீயே பாடுவ…” என மனம் அவளை திட்டிவிட்டு செல்ல,

அதற்குள் பக்கத்தில் வந்துவிட்ட நாயை, பார்த்து மிரண்டாள் அவள்…

அது வேகமாக குரைக்க ஆரம்பிக்க, பயத்தில் நா வறண்டு போனது அவளுக்கு…

“சூ… போ…..” என்று கத்த கூட ஆவியில்லாது, கைகளை மட்டும் அவள் போ என்பது போல் ஆட்ட, அது வேகமாக அவள் கைகளை பற்ற தாவ…

“ஆ……….” என்ற அலறலாய், தன்னை மீறி வெளிவந்தது, பயத்தில் அதுவரை மறந்து போயிருந்த அவளது குரல்…

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.