(Reading time: 17 - 34 minutes)

25. காதல் பின்னது உலகு - மனோஹரி

Kadhal pinnathu ulagu

வ்வளவுதான் அவ்வளவேதான் அபயனும் பவிஷ்யாவும் பார்த்து பழகிய நேரம்…..அடுத்தும் சில பல நிமிடங்களில் திரும்பி அவளை பார்த்துவிடலாம் என அவன் நம்பினான்தான்….ஆனால் அந்த நம்பிக்கை  ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து கொண்டல்புரத்தில் தான் வந்து நிறைவேறியது….. ஆனால் அந்த இரண்டு ஆண்டுகள் தான் இந்த அறிமுகத்தை வேறு கோணத்தில் இருவரையும் உணர வைத்ததும்.

பவிஷ்யாவிற்கு முதலில் அவன் மாயமாய் மறைந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள என தெரியாமல் பெரும் தவிப்பும்….அவன் பிரிவை ஏதோ பெரும் இழப்பாய் எண்ணி உழன்ற உணர்வு நிலையும் இருந்தாலும்…..அதை ஒருவாறு சமாளித்து வைத்தாள்.

ஆனாலும் அதன் பின்னும் அவன் தாக்கம் அவளுள்.  திருமணமாகி இருந்த அவளது பள்ளி கால தோழிகள்….இவளது கல்லூரி தோழிகளின் அக்காமார்கள் என யாரது திருமண வாழ்க்கை பற்றிப் பேசும் போதும்….யாரது வாழ்க்கைத் துணையும் அபயன் அளவுக்கு அக்கறை உள்ளவர்களாய் தோன்றவிலை அவளுக்கு….

சரி திருமண வாழ்க்கை என்றால் இப்படித்தான் போலும் என நினைத்துக் கொண்டால்…சில பெண்கள் தங்கள் காதல் வாழ்க்கைப் பற்றி பேச அவர்களது நாயகர்களும் இந்த இவன் அருகில் வரவில்லை இவள் பார்வையில்….

அதோடு அதுவரை  எப்படிபட்டவர் என அனாலிஸிஸிற்கு உட்படுத்தாத அவளது அப்பாவைக் கூட  ‘ஏன் அப்பா அவன மாதிரி கொஞ்சம் அப்ரோசபிளா ஃப்ரெண்ட்லியா அம்மாட்டயாவது நடந்துகிட்டா என்ன….?’ என அபயனோடு ஒப்பிட வைத்தது….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

நாட்கள் நகர யாரும் அவள் முன் எந்த ஆணைப் பத்தி உயர்த்திப் பேசினாலும் ‘அவனுக்கு பக்கத்துல கூட இவங்க யாராலயும் வர முடியாது’ என்ற எண்ணம் வந்தது…..

அவள் எந்த கதைபுத்தகத்திற்குள் கருத்தை நுழைத்தாலும்….படித்து முடிக்கும் போதுதான் மொத்தமாய் உணர்வாள், கதையின் நல்ல கதாநாயகன் அவள் மனக் கண்ணில் அந்த கார்காரனாகவே கற்பனைப் பட்டிருக்கிறான் என…

இதெல்லாம் அடி மனதில் பதிந்த வகையால் வந்த செயல் என அவள் அதைப் புரிந்து கொண்டாலும்….

படிப்பு முடியவும் திருமணம் என்ற குடும்ப நிலை அவளது என்பதால், அவ்வப் போது இவளது ஃப்ரெண்ட்ஸ் இவளது வருங்காலம்….திருமணம்…மாப்பிள்ளை என எதாவது பேசும் போது இடம் பொருள் ஏவலின்றி இவள் மனக் கண்ணில் அவன் உலாப் போனான்…. அங்குதான் அதில்தான்  அவள் மனம் அவனை என்னதாய்ப் பார்க்கிறது என அவளுக்கு பிழை இன்றி புரிந்தது…..

கூடவே இந்த நினைவே எத்தனைப் பிழை என்றும் தெரிந்தது….பெயரே தெரியாத ஒருவனை இவள் என்னதாய் எதிர் பார்க்கிறாள்…? அதோடு அப்படியே ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாய் அவனை கண்டுவிட்டாலும்……கோடியில் ஒரு வாய்ப்பாய் அவனுமே இவளை விரும்பினாலும்…..

‘இல்ல இல்ல….நிச்சயமா அவனுக்கும் இவள் மீது ஏதோ தடுமாற்றம் இருக்குது….….தன்னோட துப்பட்டாவ எடுத்து இவ அவனுக்கு கட்டிவைத்தாள் சரி….. அவன் அந்த பெட்ரோல் பல்கில் இவள் துப்பட்டாவை கழற்றி ஷாலை எடுத்துக் கட்டிக் கொண்டான் தானே….அது வரை ஏன் அதை அவன் செய்யவே இல்லை…..??

குனிந்து நிமிர கூட இருவரும் ஒத்திசைய வேண்டி இருந்தது தானே….அப்போது கூட அவன் அந்த ஷால் பற்றி நினைக்கவில்லை தானே….

இப்படியாய் இவள் மனம் அவன் செயலை அர்த்தப்படுத்திக் கொண்டு அதில் இளைப்பாறினாலும்….

அவளோட அப்பாட்ட போய் லவ் பண்றேனு சொல்றதெல்லம் கற்பனைக்கு மீறிய செயல் என்பதில் சந்தேகமற்ற தெளிவு இருந்ததால் இந்த அபயன் வகை கனவுகளை சுமக்கவோ அதில் தொலையவோ விரும்பவில்லை அவள்….

ஆக அதன் பின் அவள் மனதை அவன் வகையில் சரியாமல் அதட்டியே வைத்திருந்தாள்…..  தானாக வந்துவிழும் அவன் நினைவுகள் நாளாக நாளாக தன்னாலயே நின்றுவிடும் என்ற அவள் நம்பிக்கை நிஜமாகவில்லை எனினும்….. இவளாக எதையும் அவனைப் பற்றி யோசிப்பதை நிறுத்திக் கொண்டாள்….அந்த வகையில் அவளுக்கு அதில் வெற்றிதான்

ஆனால் இதெல்லாம் அவனை நேரில் மறுபடியும் பார்க்கும் வரைதான்…… பார்த்த நொடியில் பூட்டி வைத்திருந்த பூகம்பம் போல் வெடித்துக் கொண்டு வெளி வந்து, அவளை அவன் வியாபித்துக் கொண்டான் என்பது வேறு கதை….

பயனோ அப்போது பவியை விட்டு அந்த விபத்து நடந்த இடத்துக்கு ஓடும் வரை தான் அவளை நினைவில் நிறுத்தி இருந்தான்….. அங்கு அவன் கண்ட காட்சியில் அவளை என்ன அனைத்தையும்  மறந்து போனான்…

ஏனெனில் தூக்கி எறியப்பட்டிருந்தது நீரா…..இவன் சென்ற நொடி அவள் பல நாள் அழுததில் வீங்கி இருந்த சிவந்த கண்களுடன் அதியின் மடியில் தலை வைத்து இன்னும் அழுது கொண்டிருந்தாள்….. அதுவும் எதற்காக

“நான் திருடுறேன்னு சொல்றாங்கப்பா….நான் அப்டில்லாம் இல்ல….உங்களுக்கு தெரியுமில்ல….” இப்போது நடந்த விபத்தோ அதன் வலியோ எதுவுமே அவள் மனதிற்கு போனதாக கூட தெரியவில்லை…. அவள் எந்த ப்ரச்சனையில் இவர்களை அழுதடித்து அழைத்து வைத்திருந்தாளோ அதை மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.