(Reading time: 17 - 34 minutes)

துவும் அப்படியே கட்டிக் கொண்டு கதற அவள் கைகளில் கிடைத்தால் நன்றாய் இருக்கும் என்ற ஒரு நினைவோடு….

 “நீதான்யா பெரியவன பார்த்துகனும்…… அவன் இன்னும் வாய திறந்து ஒரு வார்த்தை பேசலை….கண்ணுல இருந்து சொட்டு நீர் விடலை……உன்டதான்யா ஒட்டுவான் அவன்…..படிக்க அனுப்பின்னு ஒரு பிள்ளய பரி கொடுத்துட்டேன்…..அதை பார்க்க அனுப்பின்னு அடுத்த பிள்ளயையும் தொலைச்சுட்டேன்னு ஆகிடுமோன்னு பயமா இருக்குடா…..நீதான் அவன பார்க்கனும்….இதுல நீயே இப்டி நின்னா எப்டி….” அம்மாவின் வார்த்தைகளில் அவன் மனம் அடுத்து அதியிடம் போய்விட்டாலும் அதன் பின் அவனுக்கு பவி ஞாபகம் வராத நாட்கள் என எதுவுமில்லை…

அந்த நாட்களில் வீட்டில் ஒரு வகை சூனிய உணர்வு சொல்லாமல் சத்தமில்லாமல் தங்கி இருக்கும்….பகலில் இவன் படு தைரியசாலியாய் அதியை ஆறுதல் படுத்த அனைத்தும் செய்வானாகில்…..இரவில் அன்னை மடியாய் தலை வைத்து அமைதியாய் படுக்க அவள் கிடைத்தால் நன்றாய் இருக்கும் என ஏனோ பவியை தேடும் ஒரு நொடி சில நினைவு…

முதலில் அவன் இதைப் பற்றி யோசித்துப் பார்க்க கூட இல்லை…அவன் நிலை அப்படி…ஆனால் ஓரளவு நிலை மாறி தேறி வந்த பின் இதை அவன் வியப்பாய் உணர்ந்தான்…..இதுவரை அவன் ஒரு பெண்ணையும் இப்படியாய் உணர்ந்ததில்லை…

மாதங்கள் காலத்தால் உருவாகி உருண்டோட …..   மெல்ல மெல்ல அவன் மனம் அவனுக்கு புரிவது போல் இருந்தாலும் அதற்கு முக்கியதுவம் கொடுக்கும் நிலையை வாழ்க்கை அவனுக்கு அனுமதித்திருக்கவில்லை…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

அதியை மட்டுமல்ல, அடுத்து படுக்கையில் விழுந்திருந்த அம்மாவின் நிலையை….. அப்போதுதான் தொடங்கி இருந்த இவன் தொழிலை என எல்லாவற்றையும் அவன் கவனித்தே ஆக வேண்டிய நிலை…

 யவி திருமணம் நிச்சயமாகும் வரையுமே  வீட்டில் எப்போதும் ஒரு அழுத்தம்….. “நான் சாகுறதுக்குமுன்ன என் பிள்ளைங்க கல்யாணத்த பார்க்கனும்….”என்ற அம்மாவின் அழுகையும்…..

”கண்ண மூடினா அவ அழுத கண்ணுதான்டா தெரியுது”  என்ற அதியின் வார்த்தைகளையும் தாண்டி வர செய்தது நீராவின் மறைவுக்குப் பின் இரண்டு வருடங்கள் கழித்து வந்த அந்த கல்யாண நிகழ்வு தான்.

அது அவன் பவிப் பொண்ணையுமே அவன் கைகளில் கொண்டு வந்து கொடுத்திருந்தது……. அதாவது கொடுத்துவிட்தாக அவன் நம்பினான்..

அண்ணிக்கு ஃப்ரெண்ட்…..தூரத்து உறவில் மாம பொண்ணு… இவங்க வீட்டை நம்பி பொண்ணை இவ்ளவு தூரம் வேலைக்கு அனுப்பும் அவ பேரண்ட்ஃஸ்….அதை செய்ய வைத்த அண்ணா….. ஆசையாய் விசாரிக்கும் அம்மா….

இதெல்லாம் அவள் அவனுக்கு கிடைத்துவிட்டதாக தானே சொல்கிறது…. அப்படித்தான் அவன் நினைத்தான்…

ஆனால் காலம் என்னத்தை வைத்திருந்ததாம் கையில்…???

தொடரும்!

Episode # 24

Episode # 26

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.