(Reading time: 17 - 34 minutes)

ந்த சீனியர் ஹியானாவோ இவள் பேட்ச் மேட் பெண்களிடம் யாரும் நீராவுடன் பழக கூடாது என  சொல்லி வைத்திருந்தாள்….

”சீனியர்ஸ் ஹெல்ப் இல்லனா இங்க கோர்ஸ முடிக்கவே முடியாது….உள்ள ஒரு ரஷ்யாகாரனும் சின்னதா கூட ஹெல்ப் பண்ண மாட்டான்…..என்னதான் கிளாஸ் இங்க்லீஷ்ல எடுத்தாலும் எல்லா விஷயமும் ரஷ்யன்ல தான் இருக்கும்…எக்‌ஸாம் அப்ளை பண்ண கூட நாங்க வேணும்….” இது பொதுவாக அடிக்கடி ஜூனியர்ஸ் காதில் விழும் வசனம்……

ஆக சீனியர்ஸை பகைக்க கூடாது என இவள் பேட்ச் மேட்டும் இவளிடம் இருந்து வெகுவாய் விலகியே இருப்பர்….

ஆனால் விபரீதம் என்னவென்றால் எந்த ராகிங் இஷ்யூவும் அடுத்த ஆண்டு வரை தொடராது…… நீரா விஷயத்தில் அது தொடர்ந்தது….. முதல் வருடம் முழுதும் இவளிடம் பேசாதிருந்த இவள் வகுப்பு கூட்டம் இப்பொழுது தங்களுக்குள் வந்துவிட்ட பாண்டிங்கில் இவளிடம் பெரிதாய் ஒட்டுதல் காட்டவில்லை…..

அதோடு இவளிடம் வருடம் முழுவதும் பழகாமல் இருந்தவர்களிடம் இவளுக்கும் தான் இப்போது என்ன பெரிய ஒட்டுதல் வந்துவிட முடியும்?

மேலும் வேறு ஒரு காரணமும் இருந்தது…..பொதுவாக அங்கு ப்ரொஃபெசர்களாக இருப்பவர்கள் ரஷ்ய நாட்டினர் தான்…. அவர்களிடம் நம் மாணவர்கள் இயல்பாய் பேசி பழகுவதெல்லாம் பொதுவாக இயலாத காரியம்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இதில் அந்த ஹியானா தொடர்ந்து அரியராகிக் கொண்டிருந்த ஒரு சப்ஜக்ட்டை கையாண்ட பெண் ப்ரொஃபெசர் ஏனோ நீராவிடம் மட்டும் ரொம்பவே நட்பாக பழகினார்.

முதலில் இருந்தே எல்லோரும் நீராவை விலக்கி வைத்துவிட்டனர் அல்லவா……அதனால் அவள் எதையும் எப்போதும் தானாக தனியாக செய்தாக வேண்டிய நிலை….. அது அவருக்கு பிடித்ததோ?

அதோடு பெரும்பாலான அவள் பொழுதுகள் படிப்பில் மட்டுமே செலவழிய வேண்டிய நிர்பந்தம்…..வேற எதுக்கும் அவளுக்கு யார் இருக்கா…?

சோ படிப்பு மற்றும் அசைன்மென்ட் வேலைகளை அவள் நேரத்துக்கு முடித்துவிடுவாள்…. மற்றவர்கள் அதில் சொதப்புவது அடிக்கடி நடக்கும்….

 அதோடு நம்ம ஊர் வெயிலுக்கு பழகின நம்ம பிள்ளைங்க அங்க உள்ள குளிர்ல அப்பப்ப ரொம்ப நேரம் தூங்கி, முதல் பீரியட, இல்லைனா ஹால்ஃப் டேவ, அடிக்கடி மிஸ் செய்வாங்க….. அப்டி செய்றப்ப மொத்தமா ஆறேழு பேரா சேர்ந்துதான் செய்வாங்க….

திரும்ப பாதியில் காலேஜ் போறதும் இந்த ஆறேழு பேரா சேர்ந்தே போவாங்க……

ஹாஸ்டல்ல இருந்து காலேஜ் நடந்து போற அளவு பக்கத்துல கிடையாது…பஸ் பிடிச்சு போகனும்…..நீராவைப் பொறுத்த வரை அப்படி பாதியில தனியா பஸ் பிடிச்சு  போற தைரியம்லாம் கிடையாது….. மொழி தெரியாத இடத்தில் எங்க போய் முழிக்க….?ஆக அவ க்ளாஸை மிஸ் செய்யாம காலையிலேயே ஒழுங்கா போய்டுவா….மொத்த  ஹாஸ்டலும் பெரிய க்ரூப்பா சேர்ந்து போகுமே…யாரும் இவட்ட பேசலைனா கூட தனியா இல்லாத ஃபீல்….

அவங்க ஏறுற பஸ்ல ஏறி….அவங்க இறங்குற இடத்துல இறங்கின்னு…..அது ரொம்ப ஈசியான வழியா தெரிஞ்சுது அவளுக்கு….அதனால 100% அட்டென்டன்ஸ் எப்பவும்…..அதுவும் அந்த குறிப்பிட்ட ஃப்ரொஃபெசர் க்ளாஸ் காலைல முதல் பீரியட்தான் பெரும்பாலும்….

ஆக இப்படி அசைன்மென்ட் அட்டெண்டென்ஸ் படிப்பு மார்க்‌ஸ் என எல்லாவற்றிலும் தனியாய் தெரிந்ததால் நீராவை அந்த ஃப்ரொஃபசருக்கு பிடித்ததோ?

எப்படியோ அவருக்கு இவளைப் பிடிக்க….. ஹியானாவுக்கு  இன்னுமாய் இவளைப் பிடிக்காமல் போக… இவள் பேட்ச் மக்களும் விலக்கி நிறுத்த என போய்க் கொண்டிருந்தது வருடங்கள்….

வருடம் போக போக அந்த ஃப்ரொப்சர் க்ளாஸ் இவளுக்கு எடுக்கலைனா கூட அடிக்கடி இவளை பார்த்து பேசுவதும், இவள் கல்லூரியில் அவர் அறைக்குப் போய் அரட்டை அடித்துவிட்டு வருவதும் என்ற அளவு  வந்திருந்தது இப்போது நிலை….

இதில் ஹியானா அந்த பேப்பரால் கோர்ஸ் முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்க….ஒரு வகையில் நீரா போட்டு கொடுத்துதான் தன்னை அந்த ப்ரொஃபெசர் ஃபெயில் செய்கிறார் என நம்ப தொடங்கி இருந்தாள் அவள்.

ஆக அதற்கு பழி வாங்கவென ஒரே ஹாஸ்டல்தானே…அவ்வப்போது ஒவ்வொருவர் பொருளையாக தெரியாமல் எடுத்து சேர்த்து மொத்தமாக அதை நீரா மறைத்து வைத்திருப்பது போல் மாட்டிவிட்டாள் அவள்…. இதில் அவள் பேட்ச் மேட் மட்டுமல்ல அவ்வப்போது அவளிடம் ஓரிரு வார்த்தைகளாவது பேசும் அவளது ஜூனியர்ஸும் நீராவை நம்பாமல் பார்க்க….

இதில்தான் நீரா உடைந்து போனது….…..அத்தனை அழுத்தமான சூழல்களை சமாளித்து தாண்டி வந்த நீரா கோர்ஸ் முடியப் போகும் இந்த நேரத்தில் இதில் மனதளவில் சிதறிப் போனாள்……பெரும் பெரும் சம்மட்டி அடிகளை பல காலமாக கீறலின்றி தாங்கும் பாறை இறுதியில் ஒரு சின்ன அடியில் சிதறிவிழும்…. அப்படித்தான் ஆகிப் போனது அவள் நிலை….

இத்தனை வருடம் யாரோட தயவுமின்றி சாதிக்க முடிந்தவளுக்கு இன்று இல்லாமல் போன இரண்டொரு வார்த்தைகளை ஏற்க முடியவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.