(Reading time: 17 - 34 minutes)

திக்கு நடந்தது ஒன்றும் சின்ன விபத்தாக தெரியவில்லை…. அவன் கண் முன் தானே நடந்து ஏறியது அது….. அப்போதுதான் வந்து இறங்கி இருந்தான் அவன்…..அவனோடு வந்த யாவரும் சற்று முன்பாகவே மாஃஸ்கை நீக்கி பேச தொடங்கி இருந்ததால் ஆபத்தான பகுதியை தாண்டி விட்டதாக உணர்ந்த இவன் நீராவை அழைத்துப் பேசி இருந்தான்…..

தானும் அபையும் வந்துவிட்டதாகவும்….யுனிவர்சிட்டி அருகில் நெருங்கிவிட்டதாகவும் சொல்லி இருந்தான்….

ஆக அவனுகாக அவள் அந்த நுழைவுப் பகுதிக்கே வந்து காத்திருந்திருக்கிறாள்…… இவன் இறங்குவதை சாலையின் மறுபுறம் இருந்து பார்த்தவள்……இவன் சாலையை கடக்கும் வரைக்கும் கூட காத்திருக்க மனமில்லாமல் அதை தாண்ட முயல….

பெடெஸ்ட்ரியன் க்ராஸுக்கென சிக்னல் இருந்த போதும்  வேகமாக கட்டுப்பாடு இன்றி வந்த ஒரு காரை கண்ணீர் காரணமாக அவள் கவனிக்காமல் போக……அது அவளை அப்படியே அள்ளி எறிய….எதிரில் இறங்கி இருந்த அதி பக்கத்திலேயே வந்து விழுந்திருந்தாள்….

ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த வரை அங்கு பொது மக்கள் கார் வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது…..அதன் பின்னேதான் அவர்களுக்கு அதற்கான அனுமதி….

ஆக காலம் காலமாக ட்ரைவிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என சொல்ல முடியாமல்…குறைந்த அனுபவம் கொண்டவர்கள் அவர்கள்…… அதற்கு பொருந்தாத வகையில் பிற அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் போல அதி வேக அனுமதி அங்கு உண்டு. ஆக ஏராளமான சாலை விபத்துகள் நடக்கும் நாடில் அதுவும் ஒன்றாக இருந்து வருகிறது…

அதற்கு அந்த நாளின் பலி நீரா…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

அதி அவள் எறியப்படுவதை அருகிலிருந்து பார்த்தவன் அல்லவா…. ஆக அவன் தவிப்பும் வெடிப்புமாய் அடுத்து என்ன என பார்க்க நினைத்தால்….. நீராவோ அவனிடம் இதைப் பற்றி பேசுவதிலேயே முனைந்திருந்தாள்….

அத்தனை அடி பட்ட நிலையிலும் அவள் இதைப் புலம்புவதில் அவள் மனக்காயம் உணர்ந்தும்….அதோடு அவனுள் இருந்த பரிதவிப்பும் பாச காதலும்  அவள் மீது இரக்கமாய் பாய….. அவள் பேச்சுக்கு

“நீ எப்டின்னு எனக்கு தெரியாதாடா..? யாராவது எதாவது சொன்னா சொல்லிட்டுப் போராங்க…..அதெல்லாம் பெருசா…” அவளை ஆறுதல் படுத்த முனைந்து கொண்டே அவளுக்கு எங்கு காயம் என தேடிக் கொண்டும்…….யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என சுற்றுமாய் பார்த்துக் கொண்டுமாய்  அதி…

அவன் பார்த்த வரை அவளுக்கு வெளிக் காயம் என எதுவுமில்லை….எங்கிருந்தும் சொட்டு ரத்தம் கூட கொட்டவில்லை……அவளும் முழு நினைவில் இருந்தாள்….

இந்நேரம் தான் அபயன் அங்கு போய் சேர்ந்தது……. முதலில் அவனுமே அரண்டு போனாலும்…..அவளைப் பார்க்கவும் சற்று ஆறுதல்தான்…..பார்வைக்கு நிலமை மோசமாக இல்லை….. ஆனாலும் அவனுக்குள் ஒரு பயம்….

“ஏ கழுத ரோட்ல படுத்துட்டு டூயட்டா பாடிட்டு இருக்க…” கண்ணில் முட்டிக் கொண்டு நின்ற கண்ணீரோடு கேட்ட இவன் கேள்வியில்…..சற்று சூழ்நிலை உணர்ந்த நீரா அதி கையப் பற்றிக் கொண்டு எழுந்துமேவிட்டாள்….

அதனால்தானோ என்னவோ யாருக்கும் அது அடுத்து பெரிய விபத்தாக தெரியவில்லையோ???

அதுவரை வெளிய போகாதீங்க….பேசாதீங்கன்னு இருந்த சூழ்நிலை காரணமோ என்னவோ…..ஸ்டூடண்ட்ஸ் கூட்டம் எதுவும்  அங்கு வெளியே இல்லை….. பவி கார் மக்களும் இருந்த குழப்ப ட்ராஃபிக்கில் சற்று காத்திருந்துவிட்டு பின் சுதாரித்து விபத்து இடத்திற்கு வருவதற்குள்….

அதியோடும் அபயனோடும் நீரா அந்த மருத்துவ கல்லூரிக்குள் சென்றிருந்தாள்….  அவளே இவர்களை அழைத்துக் கொண்டு போனதால்…எமெர்ஜென்சி அட்மிஷன் கூட ஏதுமில்லை…

அவள் இன்னும் தெளிவாக பேசிக் கொண்டிருந்தாலும் பேச்சு முழுவதும் ஒரு வகையில் இந்த திருட்டுப் பட்டம் பற்றிய அழுகைதான்…. விபத்தை அவள் விஷயமாகவே உணரவில்லை…..

இவள் படித்த கல்லூரியைப் பொறுத்த வரை வெளி நாட்டு மாணவர்களுக்கென தனி பேட்ச் இருக்கும்…..ரஷ்ய மாணவர்களுக்கு தனி….. எந்த நல்லது கெட்டதிற்கும் ரஷ்ய மாணவ கூட்டம் இவர்களிடம் பேசாது பழகாது….. அந்த வகையில் அவர்கள் இவர்களை ராகிங்கும் செய்வதில்லை….

ஆனால் அதற்காக அங்கு ராகிங் இல்லை என்று சொல்வதற்கில்லை……நம்ம மக்கள்தான் அங்க இருக்காங்களே…..ஒவ்வொரு வருஷத்துகும் ஒரு பேட்ச்னு….அந்த நம்ம நாட்டு சீனியர்ஸ் தவறாம தன்னோட நாட்டு ஜூனியர்ஸை ராக் செய்து பிச்சு எடுத்துடுவாங்க….. அதுவும் எல்லோரும் ஹாஸ்டல் தானே …சோ தப்பிக்க வழியும் கிடையாது…

இப்படி நீரா வந்து சேர்ந்த வருஷம் நீராவும் இதை அனுபவித்திருந்தாள்…. அதில் ஒரு குறிப்பிட்ட சீனியர் பெயர் ஹியானா என்ற பொண்ணோடு ரொம்பவுமே முட்டலும் மோதலுமான நிலமை…. ஆனால் இதை எதையும் நீராவால் வீட்டில் சொல்ல முடியவில்லை….

பிடிவாதம் பிடிச்சுல்ல படிக்க வந்திருக்கா….. கஷ்டமா இருக்குன்னு சொன்னா அடுத்த நிமிஷம் கிளம்பி வான்னு சொல்லிடுவாங்களே…. ஆக அதை அவளே அப்படியும் இப்படியுமாய் சமாளித்துக்  கொண்டிருந்தாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.