(Reading time: 17 - 34 minutes)

தோடு வீட்டில் ஒற்றைப் பெண்….கொஞ்சலுக்கு இடையில் வளர்ந்தவள்….கடும் சொல் தாங்கி வழக்கமில்லை….இதில் திருடி என்ற பட்டம்….. அதை அனைவரும் நம்புவது போல ஒரு உணர்வு….

வெற்று பயத்தில் இவளை விலக்கி வைப்பதற்கும் இப்படி பட்டம் கட்டி தள்ளி வைப்பதற்கும் வித்யாசம் இருக்கிறதுதானே…..அதில் அவள் அடிபட்டுப் போனாள்…..இன்னும் சில மாதங்களில் கோர்ஃஸ் முடியப்போகுது…அடுத்து இவங்கலாம் நமக்கு யாரோ என விட்டுத் தள்ளி போக முடியவில்லை அவளால்….

அதில் தான் அபயனையும் அதியையும் அவள் அழைத்திருந்தது…..

அத்தனை விபத்துக்கு பின்னும் அவள் அதைத்தான் அவளவனிடமும் அபயனிடமும் அரற்றிக் கொண்டிருந்தாள்…. அதியும் அபயனும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் இன்னொரு வகை பதற்றம் அவர்களுக்கு……

அவளுக்கு உள்காயம் எதுவும் இருக்குமோ….? குறிப்பா ப்ரெய்ன்ல…? அவள் பேச்சு நார்மல் போல் இருந்தாலும் ஏதோ சரி இல்லாத உணர்வு…

அப்படி பறந்து வந்து தரையில் தலை பட விழுந்தவள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஆக அவளுக்கு அவசர மருத்துவ உதவி வேண்டும் என்ற எண்ணம் இந்த இருவருக்கும்…. ஆனால் மருத்துவமனையில் யாரிடம் சென்று இவர்கள் பேசினாலும் யாரும் அதை கண்டு கொள்வதாய் இல்லை…. இவர்கள் தவிப்பை யாரும் சட்டை செய்யவும் இல்லை…. ஆங்கிலம் அறியா ரஷ்யாவில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த இவர்களால் எதையும் செய்து கொள்ள முடியவில்லை…

ஆக வெகுவாக காக்க வைக்கப்பட்டு க்யூவில் தான் டாக்டரை சென்று இவர்களால் பார்க்க முடிந்தது முதல் தவறு….. அதில் அவர் அவளுக்கு ஸ்கேன் அளவுக்கு கூட எதையும் செய்யாமல் காலிலிருந்த சின்ன காயத்திற்கு மட்டும் மருந்து கொடுத்து அனுப்பியது இரண்டாம் தவறு….

அடுத்துமாய் இவர்கள் அப்சர்வேஷனுக்காகவாவது அவள் அங்கு தங்கி இருக்கட்டும் என கேட்டது அவர்களுக்கு புரியாமல் போனது யார் தவறு….

இப்படி இழுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இயல்பாய் உட்கார்ந்திருந்த நீராவின் காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம்….அடுத்து அவளை உள்ளே அனுமதித்த மருத்துவமனை….சற்று நேரத்திற்கு எல்லாம் சடலமாய்தான் திருப்பித் தந்தது…..

அபயன் உணர்ச்சிகள் நிறைந்தவன்…அதை எப்போதும் ஏற்ற வகையில் வெளிப் படுத்தியும் பழக்கம்….அதியும் அவனளவுக்கு சமமாக உணர்ச்சியாளன் தான்…..ஆனால் எதையும் தன்னுள் அடக்கித்தான் வழக்கம்…

அபயன் அழுது தெளிந்தான் எனில் அதி சொட்டு கண்ணீரின்றி உள்ளுக்குள் இறுகிப் போனான்…. அவன் கண் முன் …..அவன் கை அருகில் இருந்தும்……அவளை காக்க அத்தனை வசதிகளும் அருகிலிருந்தும் அவளை அந்நிய நாட்டில் தொலைத்து விட்டு வந்த தவிப்பு அவனுக்குள் அணைய மறுத்தது…..

அதில்தான் அவன் திருமணம் வேண்டாம் என்று நின்றவன்….. ஆனால் காலம் கடக்க கடக்க…..அடிவரை வெட்டபட்ட மரம் கூட பக்கவாட்டில் தளிர்க்குமே அப்படியாய் இன்று அவன் நிலை……அந்த துளிராய் அனு…

அதோடு அந்த திருட்டு பழி நீராவை அடித்து நொறுக்கிய விதத்தை அருகில் இருந்து பார்த்தவன் அல்லவா…… மரண நொடிவரை நீராவின் அடிபட்டுப் போன மூளையில் அந்த பழி மட்டும்தானே ஆளுகை செய்து அழுகை தந்தது…. வேறு எதையுமே அவள் அப்போது நினைக்கவில்லையே….

அதில்தான் அனுவை திருடுகிறாள் என்று இவன் நினைக்க சூழல் வழி செய்தாலும் அவனால் அதை இயல்பாய் வெளியில் சொல்ல முடியவில்லை….

அதோடு அடுத்த நாட்டில் வந்து அவள் அழுது கொண்டு நின்றதைப் பார்க்கவும் அந்த அனாதை நிலை எப்படி இருக்கும் என அனுபவத்தில் அறிந்தவன் அல்லவா…..அவள் எப்படிபட்டவளாக இருந்தாலும் அவளுக்கு உதவத் தான் ஓடியது இவன் மனம்….

“பவி அழுதுட்டு இருப்பா” என வினி அபயனிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்கவும் அடுத்த காரியமாக அவன் பவிஷ்யா வீட்டிற்குப் போய் அவளை கொண்டல்புரம் வர வழி செய்ததற்கு ஒருத்தி அழுகைக்கு தன் உயிரை தாரை வார்த்ததும் காரணமாய் இருக்கலாம்….

எது எப்படியோ நீராவை நினைத்து அனுவை நாடவில்லை அதி…… அனுவை அனுவாகவே விரும்பினான்…. அதை புரிந்து கொள்வாளா அனு???…..

அன்று பவியை விட்டு போன அபயனுக்கு, அடுத்து இந்தியா வந்து நீராவின் இறுதி சடங்கு வரை எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு நிற்கும் வரையுமே  பவியை நினைக்க வகை இல்லை…..பிறந்ததில் இருந்து பழகி வளர்ந்த ஒரு உயிர்……அவன் சகோதர்களும் நீராவும் அவனுக்கு வேறில்லை…..அதில் அதி மீது அத்தனை ஆசைகளை சுமந்து நின்றவள்…..அப்படி கண் முன்னே மண்ணோடு மண்ணாய்….

குளித்து முடித்து வெளி வந்தவன் கண்ணீர், துவட்டாத தலையிலிருந்து வடியும் நீரோடு நீராக உருள… அப்படியே எங்கேயோ பார்த்தபடி எதிலோ உழன்றபடி நிற்க….. அப்போது அவனைத் தேடி அங்கு வந்த அவன் அம்மா மரகதம் அவன் தோளில் இருந்த துண்டை எடுத்து …சற்றாய் அவனை இழுத்து குனித்து அவன் முடியை துவட்ட…..

அப்போது வந்தது அவள் ஞாபகம்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.