(Reading time: 21 - 41 minutes)

24. காதல் பின்னது உலகு - மனோஹரி

Kadhal pinnathu ulagu

ஸ்ஸிலிருந்து ஒருவன் அந்த இடத்தில் இறங்குவான் என்றே பவிஷ்யா எதிர்பார்த்திருக்கவில்லை…. இங்கிருந்து கிளம்பிச் செல்வதென்பது எத்தனை கடினம் என்பது அவளுக்கு இதற்குள் நன்றாகவே புரிந்துவிட்டதே…..

வழக்கமாக இந்தியா செல்வதானாலும்…அங்கிருந்து இங்கு வருவதானாலும் நட்புகளுடன்  சேர்ந்துதான் பயணம் செய்வாள்…. இவளோட கிளாஸ்மேட் ஒரு பையனே இந்திய ஸ்டூடன்ட்ஸ் எல்லோருக்கும் போக வர என ஒரே ஃப்ளைட்டில் மொத்தமாகவே டிக்கெட் புக் செய்து கொடுத்துவிடுவான்….

ஆனால் இப்படி இவள் இடையில் வீட்டுக்குப் போய் வருவது இதுவே முதல் முறை…ஏன் கடைசி முறையும் கூடத்தான்…..இனி ஒரு முறை இப்படி தனியாய் பயணம் செய்யும் மூடத்தனத்தை இவள் செய்வதாய் இல்லை…..

இங்கு மாஸ்கோ ஏர்போர்ட்டிலிருந்து குர்ஸ்க் டாக்சியில் தான் வந்தாள். கூட வந்தது இண்டு ரஷ்யன் சீனியர்ஸ்….…. பெண்கள் தான்…….பொதுவாக ரஷ்யன்ஸ் யாரும் இங்குள்ள இந்தியர்களிடம் பேசுவது கிடையாது…..நம் காதுபட தங்களுக்குள் நம்மை கிண்டல் அடிப்பதோடு சரி….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "பார்த்தேன் ரசித்தேன்" - காதல் கிரிக்கெட்டில் சட்டம் இல்லை, ஒரு சாஸ்திரம் இல்லை, ரன்ஸ் எடுப்பது தான் வேலை...!

படிக்க தவறாதீர்கள்... 

ஆனால் இன்று அவர்களுக்கு டாக்சியில் மூன்றாவது ஒரு நபர் தேவைப் பட இவளைக் கூப்பிட்டனர் போலும்….இவளுக்கும் குர்ஸ்க் வந்தாக வேண்டுமே….கூட வருவது பெண்கள் என்ற பட்சத்தில் ஏறி வந்துவிட்டாள்…..

இவளுக்கு ரஷ்யன் ஓரளவுதான் புரியும்… என்ன ப்ரச்சனை என அவர்கள் சொல்லவும் இல்லை…..இங்குவரவும் ஏதோ போனில் பேசிய ட்ரைவர்…..இதற்கு மேல் வரமாட்டேன் என சொல்லி மாஸ்கோவிற்கே திரும்புவதாக சொல்ல…. அந்த பெண்கள் இங்கு இறங்கிக் கொள்ள…. இவளையும் இங்கு இறங்க சொன்ன ட்ரைவர் காரை திருப்பிக் கொண்டு போய்விட்டார்….

அடுத்து வந்த கார்களில் மூன்று மூன்று பயணிகள் இருந்த போதும்,  அந்த பெண்களை ஒருவர் ஒருவராக ஏற்றிக் கொள்ள…. இவளுக்குத்தான் யாரும் உதவ தயாராக இல்லை….

இவள் கல்லூரியில் ஒரு பழக்கம், இவர்கள் எல்லோரும் எப்போதும் மொபைலை ரீசார்ஜ் செய்வது அங்குதான்…..வழக்கமாக வருடம் தோறும்  விடுமுறைக்கு இந்தியா வந்து மீண்டும் கல்லூரி திரும்பும் இந்த பயணம் குழுவாகத்தான் இருக்கும்….

அதுவும் இவர்களுக்கு பஸ்டிக்கெட் புக் செய்தவன் இங்கு இவர்களை ரீசிவ் செய்து பஸ்ஸில் ஏற்றி அனுப்பவென மாஃஸ்கோவே வந்துமிறுப்பான்…..அவன் கையில் மொபைல் இருக்கும்….அதில்தான் எல்லோரும் இங்கு ரீச் ஆகியதாக வீட்டுக்கு தகவல் சொல்வார்கள்……

கல்லூரி போய் அங்குள்ள வைஃபையில் இவர்கள் ரஷ்யன் ஸ்டூடண்ட் சிம் கனெக்ட் ஆகியபின்தான் ரீசார்ஜ் செய்வது பழக்கம்…..அதற்கு முன் செய்ய முடியுமா, முடியுமெனில்  எப்படி செய்ய வேண்டும் என எதையும் இதுவரை கண்டு கொண்டதே கிடையாது இவள்…தேவை என்று எதுவுமில்லையே….

ஆனால் இப்போது அது பலி அண்ட் பழி வாங்குகிறது…..கையில் இன் ஆக்டிவ் சிம்முடன் இங்கு இவள்…..

கிட்டதட்ட அழும் நிலையில் நின்றிருந்தாள் பவிஷ்யா….. அப்பொழுதுதான் இந்த இவனின் வரவு….

இறங்கியவன் இவளைப் பார்த்தே நகரத் தொடங்க…..சற்றே மிரண்டு இவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்….நீண்ட சாலையில் இவர்களைத் தவிர ஆட்கள் என்று யாருமே இல்லை…. ‘ இதில் இவன் எதுக்கு இங்க வர்றான்??!!’

அவளுக்காகத்தானே இறங்கினான் அபயன்…. ஆக அவளிடம் நேரடியாக சென்று என்ன விஷயம் என விசாரித்துப் பேசத்தான் நினைத்திருந்தான் அவன்…. இங்கு இந்த சூழ்நிலையில் அது தவறென்று அவனுக்கு தோன்றவில்லை…..ஆனால் அவள் விழித்த அந்த  மிரண்ட பார்வையே அவனுக்கு அவள் மனம் பற்றி போதுமான தகவல் தந்துவிட அவளை நோக்கி நகராமல் சாலையின் எதிர் புறமே நின்றுவிட்டான்..

இப்போது அவள் மெல்ல பஸ் சென்ற திசையிலேயே நடக்க தொடங்க, இவனும் சாலையை கடக்காமல் இவன் இருந்த புறமே அவளுக்கு இணையாக நடந்தான்.

பவிக்கு இந்த அவனது செய்கையிலேயே அவன் நோக்கம் மொத்தமுமே புரிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்…. இவளுக்காக வந்தவன்….இவள் பயப்படுவதைக் கண்டவுடன் தயங்கி அப்புறமே நின்றுவிட்டான்……

இதுவரை நொடி நொடியாய் அவள் அனுபவித்து கொண்டிருக்கும் இரண்டாம் தர ட்ரீட்மென்ட்……எந்த காரணத்தைக் கொண்டும் எதற்காகவும் இவளுக்கு உதவ முன்வராத மக்கள்….அறியாத அன்னிய மொழியோடு அடுத்து என்ன என்றே தெரியாமல் அலை மோதிக் கொண்டிருந்தவளுக்கு, இவன் பற்றிய இந்த புரிதல், ஆறுதல் மழை…. நிராயுத பாணியாய் நின்றவளுக்கு நீண்ட படை அவளுக்காய் வந்து சேர்ந்து போல் ஒரு உணர்வு…

ஆனாலும் அதற்காக அவனை முழுதாக நம்பிவிடவும் அவளது அறிவு அனுமதிக்கவில்லை….ஆக அவ்வப்போது அவனை சில நொடிகள் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டாலும் தன் வழியிலேயே நடந்து கொண்டிருந்தாள் பவி.

ஏனோ இன்று வரை கண்மூடினால் பவிஷ்யாவிற்கு அன்று அவனைப் பார்த்த அந்த கோலம் தான் எப்போதுமே மனதில் ஊர்வலம் வரும்….ப்ளாக் அன்ட் ப்ளாக் ட்ரெஸ்…..கொட்டி இருந்த பனிக்கு அருகில் அவன் நடந்து வந்த அந்த காட்சி….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.