(Reading time: 21 - 41 minutes)

ப்போது அவன் தன் இரண்டு கைகளையும் பேண்ட்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்தான்….

குளிர்கிறது அவனுக்கு என இவளுக்கு உறைக்கிறது….

பொதுவாக ரஷ்ய நகரங்கள் சென்ட்ரலைஸ்ட் ஹீட்டிங் சிஸ்டத்தினால் வெப்பமாக்க படுபவை….அதாவது  ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தண்ணீர் அதீதமாய் கொதியூட்டப்பட்டு நகரின் அனைத்து கட்டிடங்களுக்கு அடியிலும் அதற்கென சுருள் சுருளாக பதிக்கப் பட்டிருக்கும் இரும்புக் குழாய்களுக்குள் பாய்ச்சப்படும்…..பனி உறைந்து கிடக்கும் நகரங்களின் குளிர் அதன் மூலம் ஓரளவு  குறைந்து இருக்கும்… இப்படி மக்கள் வசிக்காத பகுதிகளிலோ குளிர் அதிகமாக இருக்கும்…..

அவசர அவசரமாக கிளம்பி வந்தவர்களல்லவா அதிபனும் அபயனும்…..அதோடு இதைப் பத்தியெல்லாம் பொதுவாக யாரும் தெரிந்தும் வைத்திருப்பதில்லை என்பதால்……அபயன் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது இதை யோசிக்கவே இல்லை…..

லக்கேஜ் எல்லாவற்றையும் அதிபனிடம் கொடுத்து அனுப்பி இருந்ததால் இவனிடம் கையில் வேறு உடையும் ஏதுமில்லை….

குளிரின் அளவை கூடுதலாய் அவன் இப்போது உணர்ந்தாலும் அபயன் அதை அப்போதைக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

ஆனால் பவிஷ்யாவால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை…..முதல் கணம் அவனைப் பார்க்கும் போது இதெல்லாம் அவள் கவனத்தில் வரவில்லை எனினும்…..இப்போது இது விஷயமாக படுகிறது…

சாதாரண குளிர் என்பது வேறு ரஷ்யா போன்ற குளிர் ப்ரதேச ஆள்கொல்லி குளிர் என்பது வேறு…..

அவன் நடவடிக்கைகளே அவன் ரஷ்யாவுக்கு புதிது என இவளுக்கு புரிய வைக்க….இது பற்றியும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என உணர்ந்தவள் மனதில், அவள் சூட்கேஸிலிருக்கும் ஷால் ஞாபகம் வருகிறது….

அதை அவனுக்கு கொடுக்க எண்ணி….. அவன் இதை சரியாய் எடுத்துக் கொள்ள வேண்டுமே….இதனால் இவள் தனக்கு எந்த வம்பையும் இழுத்துக்கொள்ள கூடாதே…. என்ற ஒரு சின்ன டென்ஷனுடன்  அவனை நோக்கி கூப்பிட்டாள்…

“எக்‌ஸ்க்யூஸ் மீ…”  அவனைப் பார்த்துக் கொண்டே டென்ஷனில் அவளையும் அறியாமல் சாலையில் இரண்டு எட்டு எடுத்து வத்திருந்தாள் போலும்….அதோடு அந்நேரம் அந்த ட்ராக்கில் வந்த ட்ரக்கையும் இவள் கவனித்திருக்கவில்லை….

க்யீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க்…………. இவள் காது கிழியும் வண்ணம் ஹார்ன் அடித்துக் கொண்டு இவளை கடந்து போனது அது……கூடவே இவளது எக்‌ஸ்க்யூஸ்மியையும் காதுக்கு கேட்காமல் எடுத்துப் போனது….

இவள் மீது ஒரு கண் வைத்தபடிதானே நடந்து கொண்டிருந்தான் அபயன்….அவன் இந்த நிகழ்வில் திகைத்துப் போய் இவளைப் பார்த்தாலும்…..அவனுக்கு இவள் கூப்பிட்டது கேட்டிருக்கவில்லை…..

ஆக இவளைப் பார்த்தபடி அவன் இருந்த புறமே நின்றுவிட்டான் அவன்…

இவளைப் பார்த்துக் கொண்டு நிற்பவனை எப்படி கூப்பிட..? முழித்தாள் பவி…

பின் அவள் வாயில் வந்த வார்த்தை “என்னங்க?” முதன் முதலாக அவனறிந்து  அவள் அவனைக் கூப்பிட்டது அப்படித்தான்….

ஒருவகையில் அது சாதாரண வார்த்தைதான்……இவனே கூட அறிமுகமில்லாதவரை மரியாதையுடன் பேச பயன்படுத்துவானாய் இருக்கலாம்தான்…..ஆனால் இப்போது இவனுக்கு ஞாபகம் வருவது இவன் அம்மா அப்பாவை அழைக்கும் செயல்….

அதுவரை அவளிடம் “உங்களுக்கு ஹெல்ப் பண்ணதாங்க வந்தேன்…” என தானே சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள இவனை தடுத்த ஒன்றை அது காலி செய்து….சின்னதாய் ஒரு சிரிப்பையும் இவன் இதழில் சென்று சேர்ப்பிக்கிறது….. 

அதே நேரம் தான் சொல்லிய வார்த்தையில் பவிக்குமே தன் தாய், தந்தையை அழைக்கும் விதம்தான் ஞாபகம் வந்தது…. அம்மா சில நேரம் பவிஅப்பா என்பார் எனினும் என்னங்கதான் பெரும்பாலும்.

‘நான் என்ன இப்படி கூப்ட்றுக்கேன்….’என இவள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம்  இவள் புறம் வந்து இருந்தான் அவன்.

அப்போதுதான் சாலையை கடந்து வரும் அவனை விழி கொட்டாமல் தான் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த இவள், அவசரமாக குனிந்து சூட்கேஸை திறப்பதில் ஈடுபட்டாள்…..

அதே நேரம் க்ரீச் என இவர்கள் அருகில் வந்து நின்றது ஒரு கார்….

உருவிய ஷாலோடு தூக்கிவாரப்போட இவள் நிமிர்ந்து பார்த்தால்…..

ஒரு கணம் படுபயங்கரமாய் பதறிப் போனவள்….பாய்ந்தடித்து அபயனுக்கு பின்னால் போய் அவளாக நின்றாள்…..

ஏனெனில் காரில் உள்ளே இருந்த அத்தனை உருவங்களும் நெத்தியும் கண்களும் மட்டும் தெரியும் படியாக வுல்லன் ஸ்னோ மாஸ்க்  அணிந்திருந்தனர். காருக்குள்தான் ப்ளோவர் இருக்குமே…யாரும் குளிருக்காகவெல்லாம் இப்படி அணிவதில்லை…இது வேற எதுவோ….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.