(Reading time: 13 - 25 minutes)

11. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

நீ கண்சிமிட்டும் போதுதான்

நான் உயிரோடிருப்பது

தெரிந்தது

                                                   - எங்கோ படித்தது

ந்த ஒரு வாரமும் ஓடிய வேகமே தெரியவில்லை மதுவிற்கு.  சரனுடன் மண்டப அலங்கார வேலைகளுக்கான ஏற்பாடுகளை செய்வது, திவ்யாவுடன் திருமண அலங்காரத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவது என்று காலையில் விழித்தது முதல் உறங்கும் வரை அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தாள்.

மதுவிற்கு முன் தான் திருமணம் செய்து கொள்வதில் சிறிதும் உடன்பாடில்லாமல் இருந்ததால் திருமணத்தை மிக எளிதாகவே வைத்துக்கொள்ள சொல்லியிருந்தான் சரண். ஆனால் மது வந்தவுடன் திருமணத்திற்கான வேலைகளை பார்த்தவளுக்கு கோபமே வந்தது. வீட்டில் எல்லோரையும் சளைத்தவள் "இது திருமண வீட்டை போலவே இல்லை. ஏன் எல்லோரும் இப்படி இருக்கிறீர்கள். எனக்கு என்ன பாட்டி வயதா ஆகிவிட்டது. என்னவோ நடக்க கூடாது நடந்ததை போல. சரண் அண்ணா இதை போல செய்து திவ்யாவின் குடும்பத்தினரின் கனவை நீங்கள் எப்படி சிதைக்கலாம்? அப்பா அம்மா நீங்களாவது சொல்ல வேண்டாமா? நம் வீட்டில் நடக்கும் முதல் திருமணம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ..இனி எல்லாம் நான் சொல்வது படி செய்யுங்கள். நான் இன்னும் சிறு பெண் தான் எனக்கு இன்னும் திருமண வயது வரவில்லை, சரிதானே அப்பா " என்று தன தந்தையின் கழுத்தை கட்டி கொண்டாள்.

அவரும் "ஆமாம் என் மகள் இன்னும் சிறு பெண் தான். அவளின் திருமணம் பற்றி இன்னும் ஒரு வருடம் கழித்து தீர்மானிக்கலாம். நம் வீட்டின் முதல் திருமணத்தை மது சொன்னதை போல ஒரு திருவிழா போல கொண்டாடுவோம் " என்று சொல்ல, அதன் பின் எல்லாம் பலமடங்கு வேகத்தில் நடந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...படிக்க தவறாதீர்கள்...

இந்த சில தினங்களில் உள்ளே உறங்கி கொண்டிருந்த இல்லை இல்லை மதுவினால் உறக்கம் கொள்ள வைக்கப்பட்டிருந்த உண்மையான மது வெளியே வந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். துரு துறுவென அங்கும் இங்கும் ஓடி அனைத்தையும் முன்னின்று செய்தாள்.

மதுவின் வீட்டில் உள்ளவர்களுக்கும் மதுவிற்கு முன் சரணின் திருமணத்தை நடத்த கஷ்டமாக தான் யிருந்தது. என்றாலும் மதுவும் அவள் தந்தையும் கூறிய பின் எல்லோரும் முழு உற்சாகத்தோடு எல்லா வேலைகளையும் பார்க்க தொடங்கினர். ஆனால் மதுவின் தந்தையின் உள்ளமோ மகளின் நிலை எண்ணி கலங்கியது. அவரல்லவா அறிவார் அனைத்தையும். மது சென்னை சென்ற பின் அவளுக்கு பெங்களூரில் நேர்ந்தது என்ன என்பதையும் அதற்க்கு காரணமானவனையும் பற்றி அனைத்தையும் அறிந்து கொண்டவர்க்கு அறியாத ஒரே விஷயம் மது மதியின் காதல் மட்டுமே. அவரின் மனம் இப்படி என்றால் மங்களமோ முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருந்தார். தன் மகளை அவர் திருமணத்திற்காக வற்புறுத்தவில்லை. அவர் மனதில் அந்த ஜோதிடரின் வாக்குகள் பதிந்து போயிருந்தது. அவர் கூறியதை போல ஒரு கண்டத்தை தாண்டி வந்திருக்கும் தன் மகள் திருமணம் நிச்சயம் ஜோதிடர் கூறியதை போல அவளை காணும் முதல் மணமகனோடு தான் நடக்கும். நிச்சயம் மதி தான் அவள் கணவனாவான் என்று நம்பினார். அந்த நம்பிக்கைக்கு நீரூற்றினான் மதி வேறொரு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல்.

வீட்டில் உள்ளவர்களின் உள்ளக்கிடக்கை ஒவ்வொன்றும் வேறாக இருக்க மதியின் மனமோ பதின் பருவ மங்கை போல படபடத்தது. தன்னை எண்ணி அவளுக்கே சிரிப்பு வந்தது. மதியை காண போகும் தருணத்திற்காக அவள் மனம் ஏங்கி நின்றது. தன் காதலனோடு வாழும் வாழ்வை கற்பனை செய்யும் காதலிகளை மத்தியில் தன் வாழ்வையே கற்பனை கொண்டு புணைந்து கொண்டாள் இந்த மங்கை. அவனை திருமணம் செய்து கொண்டு வாழ இயலாவிடினும்அவனின் நினைவுகளோடு வாழும் வாழ்க்கை அவளுக்கு கொஞ்சமும் தெவிட்டவில்லை. மதியை விட்டு விலகி நின்றாலும் அவன் நினைவை விட்டு ஒரு கணமும் அவள் விலகியதில்லை. அவனை கண்டால் தன் உணர்வுகளை கட்டு படுத்த இயலாது என்று அறிந்திருந்தாலும் சாதாரண பெண்ணுக்கே உரிய அவளின் மனா ஆசைகள் மதிக்காக அவனின் சிறு பார்வை வருடலுக்காக காத்திருந்தது. இந்த திருமணத்தில் அவனை காணும் அவன் விட்ட மூச்சு காற்றினை சுவாசிக்கும் ஆவலும் அவளை உள்ளும் புறமும் நிறைத்தது.

ஒரு தாயின் தந்தையின் தவிப்பையும் ஒரு பெண்ணின் மாசற்ற காதலையும் கண்டும் காணாமலும் போக அந்த இறைவன் இரக்கமற்றவன் இல்லையே. அவன் ஆடும் ஆட்டம் சற்று கடுமையாக இருப்பினும் அதன் முடிவில் எல்லையற்ற ஆனந்தத்தை அள்ளித்தர அவனன்றி யாரால் இயலும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.