(Reading time: 13 - 25 minutes)


அங்கமெல்லாம்
தங்கமான மங்கையை போலே

நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே

நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே

கண்ணிறைந்த காதலனை காணவில்லையா

இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா

கண்ணிறைந்த காணவில்லையா

இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா

காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா

இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா

என்று கேட்க மெல்ல விழி நிமிர்த்தி பார்த்தவள் கண்களில் காதலும் வலியும் சரி சமமென கலந்திருந்தது.

பாடி முடித்து மதி இறங்கி செல்ல கை தட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆனது.

அதற்குள் முரளி ஏதோ கால் வரவும் வெளியில் செல்ல மெல்ல மதுவின் அருகே வந்து அமர்ந்தான் மதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

"இன்னும்கா எத்தனை நாள் காத்து இருக்கணும் மது... என் மேல் உனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை யா.. " என்று கேட்க

தன்னை சமாளித்து "மிஸ்டர் மதி நான் ஏற்கனவே ஒருத்தரை " என்று சொல்லி முடிக்கும் முன் " இல்லை மது பொய் உனக்கு வராது. உன் கண்ணுல இருந்த காதல் எனக்கு புரியலைனு நெனைக்கிறியா. உன் கண்ணுல வந்து போன அந்த வலி அது எனக்கு புரியலைனு நெனைக்கிறியா... ஆனா ஏன் அந்த வலி... நீ மட்டும் சுக்கும் அந்த வலி என்ன..நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து சுமக்கலாம்னு சொல்றேன்..அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது " என்று கேட்க

வானின் அருகாமையில்  தன் இளமை கொண்டு வரும் உணர்வுகளின் பிடியில் இருந்து வெளி வர முடியாத இயலாமையில் வார்த்தைகள் வந்தன மதுவிடம் இருந்து.

"உங்களுக்கு ஒரு முறை சொன்னா புரியாதா..இ டோன்ட் லைக் யு. ஜஸ்ட் கெட் அவுட் பிரேம் ஹியர்." என்று அடிக்குரலில் சீறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்ல அதுவரை அவர்கள் பேசட்டும் என்று நின்ற முரளி மதியின் அருகில் வந்து அமர்ந்தான்.

"ஹாய் ஐ யாம் முரளி. மதுவுடைய பிரென்ட். உங்ககிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்" என்று சொல்ல மெல்ல தலையாட்டி படி அவனுடன் பின்னாலிருந்த தோட்டத்திற்கு சென்றான் மதி.

நடந்தவைகளை பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த ஒரு ஜோடி கண்கள் யாரும் அறியா வண்ணம்அவர்களை பின் தொடர்ந்து  சென்றது.

முரளி மதியிடம் கூற போவது என்ன... அந்த ஒரு ஜோடி கண்கள் யாருடையது... மதுவின் தந்தை அறிந்ததென்ன.... இந்த இரு வருடங்களில் கிரண் என்ன ஆனான்...மதியும் மதுவும் ஒன்று சேர காரணமாக போகிறவர்கள் யார்...இதெல்லாம் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் தெரிய வரும் பிரெண்ட்ஸ்...

தொடரும்

Episode 10

Episode 12

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.