(Reading time: 13 - 25 minutes)

வனை கண்ட மதுவின் பெற்றோர் அவனை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல மதுவோ ஏதிலிருந்தோ தப்பிப்பது போல அங்கிருந்து ஓடி முரளியின் அருகே சென்று அமர்ந்தாள்.

தன் அருகே வந்தவளிடம் எதையோ பேசியபடி இருந்த முரளி வெகு நேரம் பதில் இன்றி போகவே மதுவின் முகம் பார்க்க அவளோ குனிந்த படி தன் விறல் நகங்களை ஆராய்வதும் ஓரக்கண்ணால் எங்கேயோ பார்ப்பதுமாக இருக்க, அவள் பார்வை செல்லும் திசையில் கண்களை செலுத்தியவன் "அந்த வைட் சூட் போட்டு இருக்காரே அவர் தான் மதியா என்று மதுவின் காதருகில் சென்று கேட்க , ஒரு கணம் தடுமாறி அவன் முகம் பார்த்தவள் பின் மெல்ல கன்னம் சிவக்க ஆம் என தலை அசைத்தாள்.

"ஹெய்ய்ய நான் சொன்னதெல்லாம் நிஜாபாகம் இருக்குல்ல..." -மது

"அது சரி எனக்கு நிஜாபாகம் இருக்கறது இருக்கட்டும் உனக்கு தான் மறந்துடுச்சுனு நெனைக்கிறேன். திவ்யாவை விட உன் முகம் தான் வெக்கத்துல குளிக்குது " என்று முரளி கிண்டல் செய்ய

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"அவ்வளவு அப்பட்டமாகவா தெரியுது "என்று பாவமாக கெட்டவளை பார்த்து வாய் விட்டு சிரித்தவன் தன் பாக்கெட்டில் கைவிட்டு கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான். "இந்த தொடைச்சுக்கோ " என்று சொல்ல அவனின் கிண்டல் புரிந்து அவன் தோளில் ஒரு போடு போட்டவள் "கொன்னுடுவேன் " என்று போலியாக மிரட்ட , நீண்ட நாட்களுக்கு பின் தான் முதன் முதலில் மதுவை கண்ட அந்த புகைப்படத்தில் இருக்கும் இயல்பான மகிழ்ச்சியும் குறும்பும் முரளியை நெகிழ செய்தது. ஒரு விஷயம் அவனுக்கு தெள்ள தெளிவாக புரிந்தது. மதுவின் சந்தோஷம் மதியிடம் மட்டுமே என்று. தன் தோழிக்கு தான் செய்து கொடுக்க வேண்டிய மிக முக்கியமான கடமையும் அவனுக்கு புரிந்தது.

தற்குள் இசை குழுவிடம் இருந்து ஏதோ ஒரு அறிவிப்பு வரவும் முரளியும் மதுவும் திரும்பி பார்க்க மேடையில் ஏறினான் மதி. சரண் இசைக்குழுவினரிடம் தன் நண்பன் நன்றாக பாடுவான் என்று கூறியதால் மதியை மேடைக்கு வருமாறு அழைக்கவும் மேலே சென்ற மதி அந்த இசை குழுவினரிடம் அவன் பாட போகும் பாடலை சொல்ல அவர்களும் அதற்கான ரிதத்தை தொடங்கினர். அதுவரை அந்த இசை கச்சேரியில் அத்தனை ஆர்வம் காட்டாத மூத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் அந்த இசையை கேட்டு இசை மேடையை நோக்கி ஆர்வத்துடன் அமர மதுவோ தன் கட்டு பாட்டில் நிற்காமல் மேடையையே பார்க்கும் தன் கண்களை திட்டியபடி மதியை பார்க்க, சரணும் திவ்யாவும் மதியின் பாடல் தேர்வை பார்த்து ஒருவருக்கு ஒருவர் அர்த்தத்துடன் புன்னகைத்து கொள்ள, முரளியோ "ஹி இஸ் ரியலி இன்டெரெஸ்ட்டிங் " என்று கூறிய படி மதுவையும் இழுத்துக்கொண்டு மேடையின் அருகே சென்று அமர்ந்தான். அனைவரும் இசையோடு சேர்ந்து கைதட்ட தன் வசீகரிக்கும் குரலால் பாட தொடங்கினான் மதி.

பாட்டு பாடவா பார்த்து பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா

நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா

நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா

பாட்டு பாடவா பார்த்து பேசவா

பாடம் சொல்லவா பறந்து செல்லவா

கீழே இருந்த வண்ணம் அகன்ற விழிகளில் அவனை கிரகித்து கொண்டிருந்த மது மெல்ல முறைக்க, அவளை நோக்கி மெல்ல அவள் மட்டும் அறியும் வண்ணம் கண் சிமிட்டியவன் அடுத்த வரியை பாடினான்.

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே

மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே

மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே

பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா

இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா

பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா

இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா

மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா

இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா

என்று தன் இரு புருவங்களை உயர்ந்த்தி அவளிடம் கேள்வி கேட்க அவளோ மெல்ல தலையை குனித்து மனதினில் அவனை திட்டினாள் கள்வா என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.