(Reading time: 13 - 25 minutes)

ன்று மாலை சரண் - திவ்யா திருமண வரவேற்பு. இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்த மதியால் இன்னும் சில மணி நேரங்களை நகர்த்த முடியாமல் திணறினான். காலையிலேயே வந்து விட வேண்டுமென சரண் கூறியிருந்தாலும் தேவையின்றி மதுவின் மனதை வருத்த விருப்பமின்றி சிறிது நேரம் கழித்து செல்லலாம் என்று எண்ணியவனால் அதை நடைமுறை படுத்த இயலவில்லை. தன்னை கண்டவுடன் அவளின் பிரதிபலிப்பு எப்படி இருக்கும். முகம் செம்மையுற வெட்கம் கொள்வாளா...டேய் மதி இது ரொம்ப ஓவர்...நீ வேண்டாம்னு சொல்லிட்டு போனவ உன்னை பார்த்து எப்படி வெட்கப்படுவா...முட்டாள்... என்று அறிவு சொல்ல, போடா மடையா அவள் என் மதி...அவளின் இந்த நாடகம் எதற்க்காக வேண்டுமானாலும் இருக்கட்டும்...என்னை கண்டவுடன் அவளின் பிரதிபலிப்பு என்னவென்று நான் அறிவேன் என்று மனம் சொல்ல மதியின் முகத்தில் புன்னகை அரும்பியது. அன்று முழுதும் முகத்தில் கூத்தாதும் குறும்புடன் நடமாடும் தன் மகனை கண்ட அபிராமி அம்மாவிற்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று ஏதோ ஒரு கணக்கு ஓடியது.

ந்த மிகப்பெரும் திருமண மண்டபம் அலங்கார கலைஞர்களின் கைவண்ணத்தில் தேவலோகம் என மின்ன, தங்க நிறத்தில் வெள்ளி சரிகைகள் இழையோட டிசைனர் புடைவையை உடுத்தி அதற்க்கு ஈடாக வைரத்தால் ஆனா அதே சமையம் மிகவும் பகட்டாக காட்டாத ஆபரணங்களில் அந்த தேவலோக ரம்பையும் ஊர்வசியும் தோற்று போகும் அழகோடு மிளிர்ந்தாள் மது. (அய்யயோ மதி இன்னைக்கு காலி தான்ம்மா...என்னமா இப்படி பண்றிங்களேம்மா!!!)

மேடையில் சூட்டில் கம்பீரமாக நின்ற சாரணையும் மெல்லிய பச்சை நிறத்தில் தங்க நிற சரிகை வேலை பாடு நிறைந்த பட்டில் மணப்பெண்ணுக்கு உரிய வெட்கமும் மனதிற்கு பிடித்தவனை கைப்பிடிக்கும் ஆனந்தமும் சேர்ந்து அழகுக்கு அழகு சேர்க்க நின்றிருந்த திவ்யாவையும் காண காண மதுவின் மனம் நிறைந்து போனது.

கோவையின் மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தின் திருமணம் என்பதால் கூட்டம் அலை மோதியது. புகழ் பெற்ற இசை கச்சேரி நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்க மதுவின் கண்களோ மேடையில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணும் என அலைபாய தன் பெண்ணை சுற்றி சுழன்று கொண்டிருந்த மங்களம் இவள் யாரை தேடுகிறாள் என்று யோசனையில் ஆனார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

வெளிய கருப்பு நிற கார் வந்து நிற்கவும் அதை கண்ட மது வேகமாக வெளியே செல்ல மங்களமும் அவள் பின்னே சென்றார். கைகளை அடங்கா சிகையை கோதியபடி அடர் சாம்பல் நிற சூட்டில் ஆறடிக்கு சற்று அதிகமான உயரத்தில் சிவந்த நிறத்தில் வந்திறங்கியவனின் அருகே ஆவலுடன் ஓடினாள் மது.

இறங்கியவனை கண்ட மங்களத்தின் முகம் சற்றே ஏமாற்றம் கொண்டாலும் அவரும் மதுவின் பின்னே சென்றார் அவனை வரவேற்க.

"ஹேய் முரளி வா வா. இது தான் உன்னை நான் வர சொன்ன டைமா.... ஒரு ஸ்கூல் ஓனருக்கு பங்க்சுவாலிட்டி இல்லை...வெரி பேட்..." --மது

"ஹலோ பிரின்சிபால் மேடம் உங்க கண்டிஷன் எல்லாம் ஸ்கூல்ல தான் இங்கையில்லை.. ஆமாம் இன்னைக்கு என்ன நெறைய கோட்டிங் போல " -முரளி

"கோட்டிங்கா அப்படினா" - மது

"ஹ்ம்ம் முகத்துல பெயிண்ட் கோட்டிங் ரெண்டு இன்ச் ஜாஸ்தியா இருக்கே அதை கேட்டேன்..." -முரளி

"ஏய்ய்ய்ய் உன்னை " என்று மது ஏதோ திட்ட வாயெடுக்க அதற்க்கு அவர்களை நெருங்கிய மங்களம் "வாப்பா முரளி...என்ன நீ மட்டும் வந்துருக்க .. அப்பா வரலையா" என்று கேட்க அவருக்கு பதில் சொல்லி கொண்டே அவரோடு முரளியும் மதுவும் மண்டபத்தை நோக்கி செல்ல, ஏதோ ஒன்று மதுவை அங்கே நிறுத்தியது. அவர்களை தொடர்ந்து செல்லாமல் அங்கே நின்றவள் சட்டென திரும்பி பார்க்க அங்கே அதே கார் பார்க்கிங்கில் முரளியின் காருக்கு அருகில் நிறுத்தப்பட்ட தன் காரில் சாய்ந்து நின்று தன்னவளை ரசித்து கொண்டிருந்தான் மதி.

வனின் காந்தம் போன்ற கண்கள் அவளை ஊடுருவி செல்ல அவளின் மேனி சிலிர்த்தது அந்த பார்வையில்... தன் இந்த இரண்டு கண்கள் போதாதோ அவனை அல்லி பருகி தண்ணி நிறைக்க என்று தோன்றியது அவளுக்கு... தன்னை சுற்றியிருந்த கூட்டமும் இரைச்சலும் எங்கோ தூர செல்ல கண்ணனை கண்ட ராதையாய் உருகி நின்றாள் பெண்ணவள். எத்தனை நேரம் அப்படி நின்றாளோ, எப்போது அவன் அவள் அருகே வந்தானோ இது எதுவும் அவள் அறியவில்லை.

"பெவி க்விக் கூட இவ்வளவு ஸ்ட்ரோங் இல்லை" என்ற அவனின் குரலில் மெல்ல இயல்பு நிலைக்கு வந்தவளுக்கு ஒரு கணம் இடம் போறும் எதுவும் புரிய வில்லை. அவளின் நிலை உணர்ந்தானோ என்னவோ "சும்மாவே உன் தாசன் நான்..இதில் இப்படி ஒரு காந்த பார்வை பார்த்தால் என்ன ஆவது" என்று கேட்க , இப்போது முழுதும் தன்னை மீட்டு கொண்ட மது "ஹலோ மிஸ்டர் மதி வாங்க. " என்று எதுவும் நடவாதது போல அவனை வரவேற்றவள் அவன் முன்னே செல்ல உதட்டில் மறையாத குறும்பு புன்னகையுடன் அவள் பின்னே சென்றான் மதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.