(Reading time: 12 - 24 minutes)

04. என் காதல் பொன்னூஞ்சல் நீ - ப்ரியா

En kathal ponnunjal nee

ன் மாடி அறையின் பால்கனியில் நடை பயின்று கொண்டிருந்தான் அவன்!! வெளியில் சென்று வரும் கார்களும் தூரத்தில் தெரிந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் இருந்த மின்விளக்கும்,தோட்டத்தில் சலசலத்து கொண்டிருந்த தென்னையும், அம்மா ஆசையாக வளர்த்து வரும் முல்லையின் மனமும் எதுவுமே அவனை எட்டவில்லை இன்று!!

இயல்பிலே சற்று முரட்டு குணம் உள்ளவன் தான்..மூக்கின் நுனியில் குடியிருக்கும் கோபம் என்றாவது 'டாட்டா பை பை' சொல்லி விடுமுறையில் சென்றால் இதை எல்லாம் அனுபவிப்பான்!!

அவன் கோபத்திற்கு கரணம் என ஒன்றிரண்டு உள்ளது தான்... ஆனாலும் சிறு வயதில் இருந்தே ஏனோ அது இப்படி தான். ஆனால் அவன் கோபத்திலும் மறைந்திருக்கும் அன்பும் பண்பும் தான் அவனது அசத்திய பலம்!!

அது தான் அவளை அவன் புறம் ஈர்த்தது கூட.. அவள்!!! அவனின் அவன் மட்டுமே யாதும் என உணரச் செய்த அவள்!!! நினைவுகளில் வந்து சிரித்தாள் அவள்!! கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பு!! எத்தனை ஆசையாய் தன்னை விரும்பினாள்!!

அவன் நெற்றியில் படியும் முடியை கோதி "தேவ்" என அவள் அழைத்தாள் உலகமே மறந்து போகும் இவனுக்கு. அவன் உயிரில் ஊடுருவி தினமும் அவனை அலைக்கழிக்கும் அவள் நினைவுகள்!! இப்போது தன் தாய் திருமணம் பற்றி பேசியவுடன் சூழ்ந்து கொண்டது.

கைபேசியை எடுத்தவன் அவள் புகைப்படத்தை எடுத்து பார்த்து கொண்டிருக்கையில் சட்டென அவன் மனக்கண் முன் தோன்றியது அவள் முகம். அன்று ஒரு பெண்ணிடம் இருந்து ஸ்கூட்டியை எடுத்து சென்றானே அவள் முகம்!!

அவள் கைபேசியின் திரையில் கருப்பு நிற உடையில் குறும்புடன் சிரிப்பது போன்று அன்று பார்த்த அந்த முகம்!! இவன் மருத்துவமனையில் கோபத்தில் கத்த திடுமென பயந்து இமைகள் படபடக்க பார்த்தாலே அந்த முகம்!! மயங்கி சரியும் வெளியில் இவன் கைகளில் தாங்குகையில் லேசாக புருவம் சுளித்து கிடந்தாளே அந்த முகம்!! அவள் இடை பற்றி தள்ளி நிறுத்தி விட்டு அவள் வண்டியை எடுக்கையில் மருண்ட விழிகளுடன் பயந்தபடி பார்த்தாலே அந்த முகம்!! வெள்ளையும் நீலமும் கலந்த உடையில் அவள் அலுவலுக அடையாள அட்டையில் மலரென சிரித்துக் கொண்டிருந்தாளே அந்த முகம்!!

என்னது??!!! அதிர்ந்து அப்படியே நின்று விட்டிருந்தான் அவன் !! எப்போதும் தன்னவளின் நினைவு வந்து விட்டால் பசி தூக்கம் கூட மறந்து விடும் ஏன், எத்தனை முறை அம்மா  கூட இவனை பார்த்து வருந்தி இருக்கிறாள்? ஆனால் இப்போது?!

இரண்டு நாட்களுக்கு முன் வந்த பெண் ஒருத்தி தன்னவளின் நினைவுகளை பின்னுக்கு தள்ளி விட்டாளே!! 'ச்சே ச்சே இல்லை ஏதோ சாதாரணமாக தான்' என்று அவனே சொல்லி கொண்டாலும். முகத்தில் ஒரு அழுத்தமும் கோபமும் படர்வதை தவிர்க்க முடியவில்லை.

ரு வாரம் எடுத்துக்கொண்ட விடுப்பு முடிந்து, அன்று காலை அனன்யா அலுவலுகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். பரத்தின் வீட்டில் தான்!! இன்னும் ஒரு வாரத்திற்கு அவளை அங்கேயே தாங்கும் படி கூறியிருந்தான். ஊரில் இருந்து வேலைக்கென வந்து சென்னையில் வீடு பார்த்தவுடன் முதலில் அவன் செய்தது அனன்யாவிற்கு என ஒரு அறையை ஒதுக்கியது தான். அவளையும் அவனோடு வந்து தங்கும் படி எவ்வளவோ கேட்டான். ஆனால் அவள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

என்ன தான் நண்பர்கள் என்றாலும் ஊரார் பார்வை வேறு மாதிரி இருக்கும் என்றும் தன் பேர் கெட்டாலும் அவன் பேர் கெட்டுவிட கூடாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டிருந்தாள்.ஆனால் இப்போது வற்புறுத்தி இன்னும் ஒருவாரம் மட்டும் தங்குமாறு கூறவும் ஒப்பு கொண்டாள் அனன்யா.

"அனு சீக்கிரம் வாடீ லேட் ஆகுது பாரு" என பரத் அவள் அரை நோக்கி கத்திக் கொண்டிருந்தான்.

"எருமை சாப்பிடாம போறதா.. வா வந்து சீக்கிரம் சாப்பிடு" என அவள் சமையலறையில் இருந்து வெளியே வரவும், கோபத்துடன் அவள் அருகில் சென்றான்.

"உன்னை யார் இதெல்லாம் பண்ண சொன்னா? நான் ஆதிரா கிட்ட சொல்லிட்டேன், அவ சமைச்சு வைக்கிறேன்னு சொன்னா.."

"யாரு?! அவளா? ஏன்டா எங்க ரூம்லயே அவளை சமைக்க வைக்க நான் படாத பாடு படனும், ஏதோ எனக்கு உடம்பு சரி இல்லன்னு நீ பண்ண அலப்பறையில அவ சமைச்சா இந்த ஒரு வாரம்.. இன்னைக்கு காலையிலேயே எனக்கு போன் பண்ணி ஒரு ரத்த கண்ணீர் தான்.. சரி போன போகுதுன்னு உனக்கு சமச்சுட்டு அவளுக்கும் சேர்த்து செஞ்சு வெச்சேன் டக்குனு உட்காந்து சாப்பிடு"

என சிரித்து விட்டு சமயலறைக்குள் சென்று ஆவி பறக்கும் பூரிகளுடன் வந்தாள்.பசியுடன் இருந்த போதும் அவளுக்காக அதை காட்டிக்கொள்ளாமல் இருந்தவன், இப்போது அவனுக்கு பிடித்த பூரிகளை பார்த்த உடன், துள்ளி குதித்து வந்தான்.

"சோ ஸ்வீட் டீ அம்மு.. போடு போடு பசிக்குது"

"எரும ஏன்டா இப்படி பறக்கிற? இவ்வளவு பசியை வெச்சுகிட்டு உன் சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என அவனை செல்லமாக கடித்தவாறு பரிமாறியவள். அவள் தட்டில் ஹாட் பேக்கில் இருந்த சப்பாத்திகளை போட்டு கொண்டு அமர்ந்தாள்.அதற்குள் வெளியே இருந்து ஆதிராவின் குரல் கேட்க அவளுக்கு என எடுத்து வைத்திருந்த டிபன் பாக்ஸை கொடுக்க சென்றவள் அவள் பாரத்திற்கு தெரியாமல் பதுங்கி பதுங்கி அதை வாங்கி செல்ல முகம் மலர்ந்த சிரிப்புடன் தான் இரு நண்பர்களை எண்ணிக்கொண்டே உண்ண அமர்ந்தாள்.

பூரிகளை வேகமாக காலி செய்தவன்,அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பவளை கண்டு,

"என்ன தான் சொல்லு, அதென்னமோ அம்மாக்கு அப்புறம் உன் கையாள சாப்பிட தான் ரொம்ப பிடிச்சுருக்கு டீ அம்மு, அப்படியே அம்மா சமையல் மாதிரி" சொல்லிவிட்டு கைகழுவ சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.