(Reading time: 12 - 24 minutes)

கையில் எடுத்த சப்பாத்தி துண்டை அப்படியே வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் சொன்ன அதே வார்த்தைகள் இதற்கு முன் பரத் இப்படி சொல்லும் போதெல்லாம் மகிழ்ச்சியுடன் அவனிடம் அவள் சொல்லும் அந்த நினைவுகள். தேவ்.. விதார்த் தேவ்..!!!

"ன்ன தங்கம் பார்க்கறீங்க?"

"ம்ம்ம்ம் ஒன்னும் இல்லை"

"இல்லையே ஒன்னும் இல்லாம இப்படி பார்க்க மாட்டியே? சாப்பாடு நல்ல இல்லையா?"

தான் சமைத்ததை ஒரு வாய் உண்டு விட்டு அவன் தன்னையே பார்த்து கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்தாள் அனன்யா.

"நான் ரொம்ப கொடுத்து வெச்சவன்ல"

"அப்படியா? ஏன்?"

"இப்படி நல்ல சமைச்சு போட்டு பாசமா பார்த்துக்கிற இன்றைய காதலி நாளைய பொண்டாட்டி கிடைக்கிறது எவ்வளவு அதிர்ஷ்டம்?! எதனை பேருக்கு கிடைக்கும்?"

"அடடா ஐஸ் எல்லாம் பலமா தான் இருக்கு.. நாளைக்கும் சமைச்சு கொண்டு வரணும்னா சொல்லு அதை விட்டுட்டு.."

"இல்லை நிஜமா தான்.. இது மட்டும் இல்லை டீ எல்லாமே.. நீ என்மேல கொட்டுற இந்த அளவில்லாத அன்பை எப்படி உனக்கு திருப்பி கொடுக்க போறேன்னு தெரில இதுக்கு நான் தகுதியானவன் தானான்னு கூட புரியலை"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"ஸ்ஸ்ஸ் என்ன தேவ் இது.. நீ தான் உன் சந்தோஷம் தான் எனக்கு எல்லாமே உனக்குன்னா என்ன வேணாலும் செய்வேன்.. சாப்பாடு எப்படின்னு சொல்லலையே?!"

"அம்மாக்கு அப்புறம் உன் கைல சாப்பிட்ட தான் ஒரு திருப்தி.. அப்படியே அம்மா சமையல் மாதிரி நயா" சொல்லி விட்டு அழகாய் சிரித்தான் அவன் நிறைந்து விட்டிருந்தது அவள் மனது.

"அனு.. அனு..அடியே" பரத் வந்து உலுக்க, நினைவுகளில் இருந்து மீண்டாள். எல்லாம் நினைவுகளாய் போய் விட்டதா?

எவ்வளவோ முயற்சி செய்து மூடி வைத்தவை எல்லாம் தங்கு தடையின்றி சூழ்நிலைக்கேற்ப இப்படி வந்தாள் என்ன செய்வதாம்?யாரை நொந்து கொள்வது?

அவளையே பார்த்திருந்த பரத் ஓரளவு ஊகித்திருந்தான். இந்த ஒரு வாரமும் அவளை எப்படி பார்த்துக் கொண்டாலும் அடிக்கடி இப்படி தான். அந்த தேவின் மேல் கோபம் வந்தது. கொன்று விடும் வெறியும் வந்தது. என்ன இவன்?! ச்சை.. ஒரு வரமாக தொடர்பு கொள்ள  முயற்சிக்கிறான்.. ஆனால் எல்லாம் வீண்.. கிடைக்கட்டும் பார்த்து கொள்கிறேன்" மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

எதுவும் பேசாமல் அவள் முன் அமர்ந்தான். அவள் கையில் இருந்த சப்பாத்தி துண்டை அப்படியே வாயில் வாங்கி கொண்டான். சட்டென சுதாரித்தவள்,

"ஏய் பாத்தி.. உனக்கு சப்பாத்தி பிடிக்காது"

அவளுக்கு பதில் சொல்லாமல் அவள் தலையில் போட்டிருந்த கிளிப்பை கழட்டி விட்டு கண் சிம்மிடி சிரித்து விட்டு ஓடி விட்டான்.

"டேய் பிசாசே எத்தனை தடவை என் முடியில கை வைக்காதன்னு சொல்லிருக்கேன் பன்னி பன்னி போடா" என அவள் கத்த,

"ஹாஹாஹா போடி முட்ட கண்ணி சீக்கிரம் வா டைம் ஆகுது நான் பைக்கை எடுக்கறேன்" என சொல்லிவிட்டு நிறைவுடன் சென்றான்.

ண்ணாடி முன் நின்று தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டான் அவன்.. தாடியை ஷேவ் செய்து மீசையை திருத்தி தலை முடியை ஒழுங்காக வெட்டி விட்டு, வெளிர் நீல சட்டையும் வெள்ளை பேண்ட்டும் அணிந்து 'டக்-இன்' செய்து தன் கம்பீரம் குறையாமல் இருந்தவனை மேலும் ஒரு முறை பார்த்துக் கொண்டு நகர்ந்தான்.

பூஜை அறையில் இருந்து வந்த அவன் அன்னை அவன் நெற்றியில் சிறு கீற்றாய் திருநீறை வைத்து விட்டார்.ஏற்கனவே தயார் ஆகி சாப்பிட உணவறையில் இருந்த அவன் தந்தை ஒரு சிறு புன்னகையுடன் அதை பார்த்திருந்தார்.

"என்ன அப்பா?"

"ஒண்ணுமில்ல, இன்னைக்கு புது கம்பெனில ஜாயின் பண்ணனும்ல?"

"ம்ம்ம்ம் ஆமாம்"

"ஹ்ம்ம் நான் என் பிரென்ட் மூலமா அங்க எல்லா சிபாரிசும் பண்ணிட்டேன், என் பிரென்ட் சி.இ.ஓ-வா இருக்கிறதால நமக்கும் எந்த ப்ராபளமும் இல்லை"

"ம்ம்ம்ம்"

"பார்த்து நடந்துக்கோ"

"ம்ம்ம்ம்"

தெரியும் அவருக்கு ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் அவனிடம் இருந்து 'ம்ம்ம்ம்' தான் வரும். அதனால் சாப்பிட ஆரம்பித்திருந்தார். சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்பி தன் காரை விடுத்து பைக்கில் அமர்ந்து ஹெல்மட்டை அணிந்தவன், வாசல் வரை வந்து நின்ற அம்மாவை பார்த்து சின்ன புன்னகையும் தலையசைப்புமாக விடை பெற்று பறந்திருந்தான்.

"ப்படி இருக்க அனு?"

"ஹே அனு வந்துட்டியா?"

"இப்போ நல்லா இருக்கியா?"

"ஹே ஆமாம் இவளுக்கு தான உடம்பு சரி இல்லை இந்த மைதா மாவு எதுக்கு லீவ் எடுத்துச்சு?"

"டேய் எந்த பிகரு பின்னாடி சுத்த போன?"

அலுவலகத்தினுள் நுழைந்து தங்கள் இருக்கைக்கு சென்றவர்களை நண்பர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளை அடுக்க, புன்னகையுடன் பதிலளித்தாள் அனன்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.