(Reading time: 12 - 24 minutes)

"ல்லா இருக்கேன் சூப்பர் பைன்.. இவன் என்ன பாத்துக்கிற சாக்குல லீவ் போட்டு நல்லா தின்னு தின்னு தூங்குனான் கும்பகர்ணன்" என பாரத்தை வார அவளை முறைத்தவன் அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.

"அதானே பார்த்தோம்.. ப்ராஜெக்ட் ஒரு வழியா முடிஞ்சுது இன்னும் ரெண்டு நாள்ல நம்ம டீமுக்கு புது ப்ராஜெக்ட் அசைன் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்" என லீலா சொல்ல,

"ஹ்ம்ம் ஆமாம், அதுவும் இல்லாம நம்ம டீம் சிடு மூஞ்சி பேப்பர் போட்டுடுச்சு, சோ அதுக்கு பதிலா வேற ஒருத்தர அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்களாம், அவரு தான் நம்ம புது டீம் லீடர்"

"ஓ இவ்வ்ளவு விஷயம் நடந்துருச்சா? நான் ஒரு வாரம் லீவ் போட்டானா? இல்ல ஒரு வருஷமா?" என சொல்லி அனன்யா சிரிக்க,

"எக்ஸ்கியூஸ் மீ" என பின்னல் அந்த குரல் கேட்டது. சிரிப்பதை நிறுத்தி விட்டாள் அவள். அவன் தான் திரும்பாமலே தெரிந்தது.

அவர்கள் குழு சற்று ஒதுங்கி கொள்ள அவர்களை தாண்டி தன் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான். முகத்தில் அதனை இறுக்கம்!! இவளை திரும்பியோரு பார்வை கூட பார்க்கவில்லை!!

பரத் அவனை நன்கு பார்த்ததில்லை என்பதால் எந்த உணர்வும் காட்டாமல் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தான். இவளுக்கு தான் அத்தனை வியப்பு.

திகைப்பும் வியப்பும் கலந்த ஒரு உணர்வை அவள் முகம் காட்டியது!! ஓரக்கண்ணால் அவன் பார்க்கிறான் என பார்த்தாள். இல்லை அவன் பார்க்கவில்லை அவன் ஏதோ சிந்தனையில் இருப்பது புரிந்தது!!

அதே நேரம் அவன் மனதில் எண்ணங்கள் வேறு விதமாய் இருந்தது. வரும் வழியில் அவளின் தங்கையை பார்த்திருந்தான் அவன். தன்னவளின் தங்கை.

"தேவ் தேவ்" என உருகினாளே!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

அவளால் தங்கையுடன் இவன் பேசியதில்லை ஏதோ ஓரிரு முறை ஆவலுடன் பார்த்திருக்கிறான் அவ்வளவே. இன்றும் இவனை அவள் பார்த்து விடவில்லை. ஆனால் இவன் பார்த்தான்!! எந்த ஒரு உந்துதலும் இன்றியே அவள் நினைவுலகில் சஞ்சரிக்க மனம் முரண்டு பிடிக்கும்!! இப்போது அவளின் தங்கையே கண்முன் வந்த பின்பும் சும்மா இருக்குமா?

அதன் வேலையை அது செய்ய, அதன் பிடியில் தன்னை கொடுத்து விட்டு வெறுமையின் மடியில் அவன்!!

அவன் அலைப்பேசி அழைக்க அதை ஏற்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.அப்போதும் அவளை கவனிக்கவில்லை. ஆனால் அவன் கற்பனை உலகில் இருந்த போது கடினமாக மாறிய அவன் முகம் சட்டென மாறி அலைபேசியில் பேசிக் கொண்டே அவன் நகர்ந்து சென்றது வரை அனைத்தையும் பார்க்க அனன்யா தவறவில்லை!!

சற்று நேரத்தில் எல்லாம் மேனேஜருடன் மீட்டிங் இருப்பதாக மெயில் வர, பரத்துடன் அவள் அவர் அறைக்கு சென்றாள். அவர்கள் குழுவும் வந்தது.அவனும் இருந்தான்!!

தன் முன் இருந்த மடிக்கணினியில் எதையோ மும்மரமாக பார்த்து கொண்டிருந்தான்.ஏனோ அவனின் இந்த இறுகிய முகம் அவளை இளக செய்தது.

"ஹலோ டீம், லாஸ்ட் ப்ராஜெக்ட் ரொம்ப நல்லா முடிச்சு கொடுத்துருக்கீங்க, அனன்யா அண்ட் சரத் காட் அப்ரிஸியேஷன் பிரம் தி க்ளையண்ட், மத்தவங்களுக்கு உங்க ஹார்ட் ஒர்க் கொடுத்தீங்க தேங்க்ஸ் பார் தட், நெஸ்ட் ப்ராஜெக்ட் ஓட டீடைல்ஸ் எல்லாம் இன்னும் இரண்டு நாள் உங்களுக்கு வரும் அதுக்குள்ள பிரிப்பர் ஆகிடுங்க, அண்ட் உங்க பழைய டீம் லீட் பேப்பர் போட்டுட்டதால வி ஹையர்ட் ஏ நியூ லீட் பார் யுவர் டீம், மீட் வேதாந்த்" என மேனேஜர் அவனை அறிமுக படுத்த, தலையை உயர்த்தி ஒரு புன்னகையுடன் அனைவரையும் பார்த்தாவானது முகத்தில் அனன்யாவை கண்டவுடன் புன்னகை உறைந்தது.

இவளா? இவள் அத்தியாயம் தன் வாழ்வில் முடிந்து விட்டதென முடித்து விட வேண்டுமென முந்தைய இரவில் நினைத்திருந்தான். சட்டென அன்று பார்த்த அவள் கம்பெனி ஐ.டி நினைவில் வந்தது. 'அட இதே கம்பெனி தானே, எப்படி மறந்தேன், இவனுக்கு வேண்டிய விஷயமான அவள் பெயரும் படமும் மட்டும் குறித்து கொண்ட மூளை அவள் கம்பெனி பெயரை மட்டும் 'அவுட் ஆப் போகஸ்' -இல் விட்டிருந்தது.

இமைக்க மறந்து தன்னியல்பு மறந்து அவளை பார்த்தது ஒரு கணம் தான் ஆனால் அதை உடனே மாற்றி விட்டான் அதன் பின் அந்த மீட்டிங் முடியும் வரை அவன் பார்வை அவளை உரசவில்லை. ஆனால் அவளுக்கு அங்கே என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை. அவனையே பார்த்திருந்தாள்.

ன்று முழுவதும் வேலை இல்லாததால் அனைவரும் பேச்சு சிரிப்பு என்றிருக்க, பாரத்திடம் சொல்லி கொண்டு கான்டீன் சென்று விட்டால் அவள். அவளுக்கு யோசிக்க வேண்டும்.

தனிமையில் அமர்ந்து அவளுக்கு மிக பிடித்த 'பில்டர் காபியை' சுவைத்து கொண்டு மூளைக்கு வேலை கொடுத்தாள். அவளுக்கு இருக்கும் விடை அறியா கேள்விகளின் அடுக்குகளுக்கு நடுவே 'வேதாந்த்' என்ற கேள்வி நிறைந்த புத்தகம் இடம் பெற பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.

"ஒரு காபி.... கொஞ்சம் ஸ்ட்ராங்கா" என்ற அந்த குரலில் திரும்பியவள், அங்கே காபி கவுண்டர் பக்கத்தில் நெற்றியை அழுத்தி விட்டவாறு நின்ற வேதாந்த்தை கண்டாள். அவனிடமே கேட்டு விடலாம் என்ற யோசனையில் அவனை பார்த்தபடி இவள் அமர்ந்திருக்க.

காப்பியை வாங்கி கொண்டு நேரே வந்தவன், இவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து,

"அனன்யா, அனன்யா தானே உன் பேரு உன்கிட்ட.. சாரி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"

என்று முகத்தில் எந்த உணர்வையும், காட்டாமல் சொன்னான்.

அவனிடம் பேச எழுந்த எண்ணங்கள் எல்லாம் பின்னுக்கு செல்ல, தன்னை அறியாமல் எழுந்தவளின் கரம் பற்றி நிமிர்ந்து பார்த்தான் அவன். எந்த வித நினைவுகளோ சிந்தனையோ இல்லாமல் முதன் முறையாய் அவன் ஸ்பரிசம் உணர்ந்தவள் ஸ்தம்பித்து நின்றாள்..!!

Episode 03

Episode 05

ஊஞ்சல் ஆடும்..!!!!

{kunena_discuss:884}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.