(Reading time: 20 - 40 minutes)

13. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

"விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்

பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு

மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்

பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்

உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்

மணல் மீது தூவும் மழை போலவே

மனதோடு நீதான் நுழைந்தாயடி

முதல் பெண் தானே நீதானே

எனக்குள்தானே என்பேனே

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்

உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்

எதற்க்காக உன்னை எதிர்பார்க்கிறேன்

எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்

இனிமேல் நானே நீயானேன்

இவன் பின்னாலே போவேனே

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டே எழுத்து..."

வாட் DCP யா?????

ராம் ,பரணி இருவருமே அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்…சார் எங்களால இன்னும் நம்பமுடில..உங்களுக்கே சீனீயர்  கேரேட்ல இருந்துட்டு எப்படி சார்.. -பரணி..

என்னாலயும் இன்னும் ஜீரணிக்க முடில பரணி,எங்க டிபார்மெண்ட்ல ஒருத்தர்நு நெனைச்சதுக்கே மனசு கொதிச்சது..இதுல இவருக்கு என் கையாலயே சல்யூட் போட்டுருக்கேன்னு நினைக்கும் போது..ச்சச்ச..

கூல்டவுண் சார்..உங்க நிலைமை புரியுது பட்இப்போ நம்ம இன்னும் கேர்புல்லா கேஸ்ஸ மூவ் பண்ணணும்..அவரோட பொசிஷனுக்கு நம்ம பண்ற வேலை தெரிஞ்சுதுனா என்ன வேணா பண்ணுவாரு..அதுகுள்ள பக்கா எவிடென்ஸ் லா கொண்டு வரணும் சார்..

யு ஆர் ரைட் ராம்..சரி நீங்க முடிஞ்சா அந்த அதர்வா ரூம்ல எதாவது கிடைக்குமாநு பாருங்க..எதுக்கும் நா கமிஷ்னர்கிட்ட இதபத்தி சொல்லி வைக்குறேன்..நமக்கு கொஞ்சம் ஹெல்ப்புல்லா இருக்கும்..

மறுநாள் காலையில் உள்ளே நுழைந்தவுடன் அமர்நாத்தை சந்திக்கச் சென்றான் ராம்..

வா ராம்..என்ன காலையிலேயே வந்துருக்க என்னாச்சு??

A.K.. ஒரு சின்ன ஹெல்ப் வேணும்..

என்ன ராம் சொல்லு..

அது வந்து கொஞ்சம் உங்க மனசை தைரியபடுத்திக்கோங்க..உங்க பையன் ஏதோ பெரிய லெவல்ல இல்லீகல் வேலைல இன்வால்வ் ஆயிருக்காருநு தோணுது A.K..இன்னும் முழுசா தெரில பட் எனக்கு சில டீடெய்ல் தேவைபடுது..அவரு ரூம்ல எதாவது கிடைக்குமாநு பாக்கணும் தப்பா எடுத்துகாதீங்க..உறுதியா தெரியாம உங்ககிட்ட சொல்ல எனக்கு இஷ்டமில்லை..என்னடா வேலைக்கு வந்தவன் இவ்ளோ உரிமை எடுத்துகுறானேனு நினைக்காதீங்க..என் வேலைய நா ஒழுங்கா செய்யனும்னு நினைக்குறேன்..ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுங்க என பாதி உண்மையும் பாதி நடிப்புமாய் கூறி முடித்தான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அமர்நாத்தின் முகத்தில் இருந்தது கோபமா வருத்தமா இயலாமையா ராமால் கண்டுகொள்ள முடியவில்லை..

என்ன சொல்றதுன்னு தெரில ராம்..ஏன் அதர்வா இப்படி மாறிட்டான்னு தெரில..இந்த எஸ்.எம் குரூப்போட ஒரு ஒரு சின்ன செங்கலும் நா கஷ்டப்பட்டு உருவாக்கினது..என் மீராவோட கனவு..அத போய் இப்படி கெட்ட பேரு வாங்க வச்சுட்டானே..

A.K ப்ளீஸ் இமோஷனல் ஆகாதீங்க..தைரியமாயிருங்க..உங்க ஹெல்த் தான் முக்கியம்..நா உங்க கூடவே இருக்கேன் கவலைபடாதீங்க..

தேங்க்ஸ் ராம்..சரி அந்த கப்போர்ட் ஒபன் பண்ணு அதுல ஒரு சாவி கொத்து இருக்கும் எடுத்துட்டு வா..

எடுத்து கொண்டு வந்து அவரின் கையில் கொடுத்தான்..இதுதான் ராம் அவன் ரூம் கீ..அவன் ஊர்ல இல்ல இருந்தாலும் மதியான நேரமா போ இல்லனா வேலைகாரங்களோட தேவையில்லாத பார்வைக்கு இடம் கொடுக்கனும்..

ராமிற்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது..இவ்ளோ நம்புறாரே..என்னைபத்தி சொல்லவா வேண்டாமா??அங்க ACP சார் இங்க இவரு என்ன பண்றதுனே தெரியல..இந்த அஸைண்மெண்டையே எடுத்துருக்க கூடாதோ..ஏதேதோ சிந்தனையிலிருந்தவனை அழைத்தார் A.K..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.