(Reading time: 20 - 40 minutes)

வீணா ட்ரை பண்ணாத டீ,நல்லா முருங்கைகாய்க்கு கை கால் முளைச்சா மாறி இருந்துட்டு பெரிய பாடிபில்டர்நு நினைப்பு..

போங்க எதுவும் பேச வேணாம்..உங்களுக்காக எவ்ளோ ஆசையா சமைச்சேன் தெரியுமா உங்களை தவிர எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணாங்க..என முகத்தை திருப்பி கொண்டாள்..

ஏ பொண்டாட்டி எல்லாரையும் மாறி நானும் வெறும் வார்த்தையில் சொன்னா எனக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்..போ போய் அந்த கப்போர்ட்ல ஒரு கவர் இருக்கும் எடுத்துட்டு வா..

என்னவென்று ஆச்சரியமாய் அவனை ஏறிட்டவள் அவன் கூறிய பையை எடுத்து வந்தாள்.. ராம் அதை பிரிக்கச் சொல்ல பிரித்து உள்ளே பார்த்தவளுக்கு கண்கள் மேலும் விரிந்தன..அது ஒரு அழகிய ப்ரேஸ்லெட் இரு இதயங்கள் இணைந்தவாறு இருக்க அதனை சுற்றி வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டிருக்க,நடுவே மகி ராம் என்ற பெயரை தாங்கி நின்றது..அதை எங்கோ பார்த்ததாய் தோன்ற சட்டென உரைத்தது மாங்கல்யம் எடுக்க சென்ற போது தற்செயலாக அதை பார்த்துவிட்டு அழகாய் இருப்பதாய் கூறியிருந்தாள் மகி..அதில் இவர்களின் பேர் சேர்த்து இன்று அவள் கைகளுக்கே வந்துவிட்டிருந்தது..

அதை அவள் கையில் அணிவித்தவன் அதன் மேல் இதழ்பதித்து ரொம்ப ரொம்ப நல்லா சமைச்சுருந்தடா..அதுக்காகதான் இந்த கிப்ட் பிடிச்சுருக்கா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

நாணத்தோடு அழகாய் தலையசைத்தவள்..எப்போ வாங்கினீங்க ராம்??

நீ பிடிச்சுதுநு சொன்னப்பறம் டிலே பண்ணுவேணா மறுநாளே போய் வாங்கிட்டேன் என்னைக்காவது இத குடுத்து சர்ப்ரைஸ் பண்ணணும்நு நெனைச்சேன்..இன்னைக்குவிட பெஸ்ட் டே வந்துர போதா அதான் இப்போவே குடுத்துட்டேன்..

தன்முன் அமர்ந்திருந்தவனை தன் மார்போடு அணைத்து உச்சி முகர்ந்தாள்..லவ் யு ராம்..

பாருடா என் குட்டிமா ரொமான்டிக்கா கூட பேசுறா..ம்ம் குட் நல்ல இம்ரூவ்மெண்ட்..

இதுக்கு மேல நாம அங்க இருக்க வேண்டாம் வாங்க  போய்ட்டு அப்புறமா வரலாம்..

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.