(Reading time: 20 - 40 minutes)

வ என்ன காலையிலேயே கால்ல சக்கரத்தை கட்டிட்டு நிக்குறா..அப்படி என்ன பண்றா என்று யோசித்தவாறே கீழே செல்ல அங்கே சமையலறையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள் மகி..ஹாலில் அமர்ந்திருந்த தன்வியிடம் என்ன என்று கண்களாலேயே கேட்க,

அத ஏன் கேக்குற ராம்,இன்னைக்கு நம்ம மகி சமையல்தான்..இன்னும் ரெண்டு நாள்ல டெல்லி கிளம்புறீங்களாமே..அதான் எல்லாருக்கும் அவ சமையல் தானாம் இன்னைக்கு..காலைலயிருந்து கிச்சனும் அம்மாவும் அவகிட்ட மாட்டிட்டு படாதபாடு பட்றாங்க..என்று கூறி சிரித்தாள்..கேட்டவனுக்கோ ஒன்றும் புரியவில்லை..சரி என்னதான் நடக்குதுநு பாப்போம் என்று அறைக்குச் செல்ல பரணி கேள்வியாய் நோக்கினான்..எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் தோள் குலுக்கிச் சென்றான்..சமையலை முடித்துவிட்டு ராமைஅழைக்க மாடிக்கு சென்றாள் மகி..

ராம் வாங்க சாப்டலாம் இன்னைக்கு எல்லாமே நானே சமைச்சேன் வாங்க சாப்ட்டு எப்படியிருக்குநு சொல்லுங்க..என்று பொறிந்து தள்ளியவள் எதிரே இருப்பவன் ஒன்றும் கூறாமலிருக்க இடுப்பில் கை வைத்து என்னவென்று புருவம் உயர்த்தி கேட்டாள்..அவளின் செய்கையை ரசித்தவன்..

ஹே பொண்டாட்டி கொஞ்சம் இப்படி பக்கத்துல வந்து உக்காரு முதல்ல..

மறுப்பேதும் கூறாமல் அவனருகில் அமர்ந்தவள் என்ன கேட்பான் என்றறிந்து ஒன்றுமே பேசவில்லை..

அவளை தோளோடு அணைத்தவன்..நாம டெல்லி போறோமாமே..

அவனிடம் கேட்காமல் எடுத்த முடிவு என்பதற்கான கோபம் துளியும் இல்லாமல் மிக சாதாரணமாக கேட்டான்..மகியிடம் பதிலில்லை..

குட்டிமா டெல்லி போய்ட்டோம்நா நா இவ்ளோ நல்ல பையனாலா இருக்க மாட்டேன்..அங்கே நீயும் நானும் மட்டும்தான் நியாபகம் இருக்குல அப்புறம் எதுவுமே அவுட் ஆப் ஸிலபஸ்நு சொல்ல முடியாது பாத்துக்கோ..

அவன் பேச்சின் அர்த்தம் புரிந்தவளுக்கு கன்னங்கள் அதுவாகவே சூடேற அவன் மார்பில் செல்லமாய் குத்தினாள்..என் மேலே கோபமே வரலையா ராம்??

என் குட்டி பேபி மேல எனக்கு என்னடா கோபம்..ஏதோ ஒரு காரணத்துக்காக உனக்கு டெல்லி போகனும்னு தோணிடுச்சு..இதுல என்ன இருக்கு..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

ராம்..நீங்க சொல்றது கரெக்ட் தான் அங்க நாம சீக்கிரம் போனா அட்லீஸ்ட் அடுத்து எந்த பேபிக்கும் எதுவும் ஆகாம தடுக்க ட்ரை பண்ணலாம்ல..

மகி..

ஆமாப்பா..ப்ளீஸ் அதுக்காக தான் போனும்னு சொல்றேன்..நேத்து நீங்க சொன்னத கேட்டதுலயிருந்தே மனசு சரியில்லை..ரொம்ப கஷ்டமாயிருந்தது..

சரிடா இருந்தாலும் அப்படி நினைச்சவுடனேலா போய்ட முடியாது..நா ACPட்ட பேசுறேன் என்ன சொல்றாருநு பாப்போம்..

ஹம்ம்கும்ம் என்ன ஆனாலும் போயே ஆகணும் ஒரு வேளை அவரு வேண்டாம்நு சொல்லிட்டா நாமதான் கல்யாணத்துக்கு அப்பறம் ட்ரிப் எதுவும் ப்ளான் பண்ணலையே சோ டெல்லிய சுத்தி பாக்கலாம்..ஆனா நாம போறோம்..

அப்போ ஹனிமூன் ட்ரிப் போட்ரலாம்ங்கிற??ச்ச இப்படி பொண்டாட்டி யாருக்கு கிடைக்கும்..

அய்யோ எப்போ பாத்தாலும் இப்படியே பேசிட்டு இருங்க..

பின்ன இப்படிஒரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுட்டு இன்னும் பேசுற லெவல்ல தான்ம்மா இருக்கேன்..அவனவன்…

அதற்கு மேல் பேசவிடாமல் அவன் வாயை பொத்தியவாறே வெளியே இழுத்துச் சென்றாள்..அனைவரையும் அமர்த்தி அவளே பரிமாறினாள்..ஹய்யோ இவ்ளோ சின்ன வயசுலயே எனக்கு இந்த சோதனையா கடவுளே காப்பாத்து..-பரணி

டேய் அண்ணா வேணாம்..

பரணி என்னடா என் பொண்ண கிண்டல் பண்ற அதெல்லாம் நல்லாதான் சமைச்சுருப்பா வாய மூடிட்டு சாப்பிடுடா – ராஜசேகர்..

வாய மூடினா எப்படிப்பா சாப்பிட்றது -தன்வி..

அக்கா ரொம்ப மொக்க ஜோக் இதுக்கு நா மகி சமையலையே சகிச்சுப்பேன் ப்ளீஸ் விட்டுருங்க..-பரணி..

ஒருவாறாக அனைவரும் சாப்பிட்டு முடிக்க ஓகோ என்று சொல்லும்படி இல்லையெனினும் நன்றாகவே சமைத்திருந்தாள்..அனைத்துமே ராமிற்கு பிடித்ததாய் இருந்தது..ராஜியிடம் கேட்டு கேட்டு சமைத்திருந்தாள்..அனைவரும் அவளை பாராட்டிவிட்டு செல்ல..ராமோ ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டான்..மகிக்கோ ஒரு மாதிரியாய் ஆகிவிட்டது இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்..அந்நேரம் ராம் அவளுக்கு கைபேசி அழைப்பு வந்திருப்பதாய் அழைக்க தன்னறைக்குச் சென்றவள் ராமை கண்டும் காணாமல் தன் மொபைலை தேடினாள்..

குட்டிபொண்ணு இதையா தேடுற??என தன் கையிலிருந்த அவளது மொபைலை காட்டினான்..வேண்டா வெறுப்பாக அதை அவள் வாங்கச் செல்ல..அவள் இடையினை பிடித்து தன்னருகில் நிறுத்தினான்..கூச்சத்தால் நெளிந்தவள் நகர முயற்சி செய்ய பிடி இன்னும் இறுகியது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.