(Reading time: 20 - 40 minutes)

ண்ணுமில்லை..நா செக் பண்ணிட்டு சொல்றேன் A.K..என்று கூறிவிட்டு மன குழப்பத்தோடே வெளியே வந்தான்..

மதிய நேரம் அமர்நாத் கூறியது போலவே யாரும் அவ்வளவாக வெளியே வருவதில்லை…மெதுவாக அதர்வாவின் அறை அருகில் சென்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தான்..அமர்நாத் கொடுத்த சாவிக் கொத்தில் அவனது அனைத்து அலமாரிகளின் சாவிகளும் இருந்தது..ஒவ்வொன்றாக திறந்து பார்த்துவிட்டு ஒன்றும் கிடைக்காமல் கடைசி அலமாரியை திறந்தான்..நான்கு ஐந்து பைல்கள் இருந்தன..அவனுக்கு தேவையான விவரங்களும் கிடைத்தது..அவர்கள் வெளிநாட்டோடு ஒப்புகொண்டுள்ள ஒப்பந்தம்,அதனை முடித்து கொடுத்தால் அவர்களுக்கு கிடைக்க போகிற மிகப் பெரிய தொகை,என அனைத்துமே..அனைத்தையும் தன் மொபைலில் ஸ்கேன் செய்து கொண்டவன்..அவற்றை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே வந்தான்..அறையை பூட்டி திரும்பும் நேரம் சாக்ட்சி அவன் பின்னால் நின்றிருந்தாள்..அவளை சற்றும் எதிர்பார்க்காதவன் தடுமாறித்தான் போனான்..

என்ன சாக்ட்சி இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற??

அத நா கேட்கனும் நா??அங்கிள் இல்லாத நேரத்துல அவரு ரூம்ல உங்களுக்கு என்ன வேலை??

அது வந்து…A.K தான் ஒரு பைல் இருக்காநு பாத்துட்டு வர சொன்னாரு..என எங்கோ பார்வையை வைத்தபடி பேசினான்..

ஓ..குடுங்க பைல்ல பாக்கலாம் என்று அவன் கைகளை நோட்டமிட்டாள்..

இல்லடா அது இங்க இல்ல..

அண்ணா நா உங்களை உண்மையாவே அண்ணணா நினைச்சுதான் பழகுறேன்,ஆனா நீங்க அப்படி நினைக்கவேயில்லை..நீங்க பொய் சொல்றீங்கநு உங்க முகமே காட்டி கொடுக்குது..அங்கிள் கூட சொன்னாரு அந்த ராம்ட்ட கேர்புல்லா இருமா..ஏனோ அப்பாகிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிறான் அது இதுநு..ஆனா நா உங்களை முழுசா நம்பினேன்..ஆனா இப்போ அந்த நம்பிக்கை பொய் ஆய்டுமோநு தோணுது..

ப்ளீஸ் ஸ்டாப் இட் சாக்ட்சி அவசரபட்டு வார்த்தைகளை விடாத..நானும் உன்னை என் தங்கையா நினைச்சுதான் பழகுறேன் ஆனா அதுக்காக என்னோட தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு இல்லை..இருந்தாலும் நீ இவ்ளோ பேசினதால சொல்றேன்,அதர்வாவ நம்பாத..அவரு பெரிய தப்பு பண்ணிட்டு இருக்காரு..அதுவும் உங்க ஹாஸ்பிட்டல வச்சு..உன் தாத்தாவ தவிர யாரையும் நம்பாத..அது உனக்கு நல்லதில்லை..

என்ன அண்ணா புதுசு புதுசா கதை விடுறீங்க..வந்து கொஞ்ச நாள் கூட ஆகல அதுகுள்ள அங்கிள் பத்தி இவ்ளோ தெரிஞ்சுகிட்டீங்களா??எனிவே இனி இதபத்தி பேச வேண்டாம் அதுதான் நமக்கு நல்லது ஒண்ணு மட்டும் புரிஞ்சுகோங்க தாத்தா உங்களை ரொம்ப நம்புறாரு அத உடைச்சுடாதீங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

டேய் ராம் இவனுங்க போட்டுருக்க அமௌண்ட்க்கு எத்தனை ஸீரோநு கண்டுபிடிக்கவே நாலு நாள் ஆகும் போலயே என ராம் கொண்டுவந்திருந்த பைலை பார்த்தவாரு பரணி கூற ஏதோ சிந்தனையில் இருந்தான் ராம்..

ஏன்டா இன்னுமா அந்த பொண்ணு பேசினதையே நினைச்சுட்டு இருக்க..உண்மை தெரியாம பேசுறா எல்லாம் தெரிய வந்தப்பறம் அவளே சாரி கேக்க போறா இதுக்கு ஏன்டா வருத்தப்படுற..

ம்ம்ம் நீ சொல்றது கரெக்ட் தான் பரணி பட் நிறைய பொய் சொல்றது கஷ்டமாயிருக்கு..எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அங்கயிருந்து வெளியே வந்துரனும்டா..

ம்ம் அதான் எவிடென்ஸ் கிடைச்சுருச்சே ACPட்ட குடுத்து முடிச்சுற வேண்டியதுதான..

டேய் பரணி அத ஒழுங்கா பாரு எல்லாத்துலையுமே அதர்வாவோட நேம் மட்டும் தான் இன்வால்வ் ஆயிருக்கு..விநாயக் ப்ளான் பண்ணி பண்ணிருக்கான்டா..உண்மையில் அவன்தான் எல்லாத்துக்கும் காரணம் அதர்வா வெறும் தலையாட்டி பொம்மைதான்..

ச்ச ஆமா ராம் கவனிக்கவேயில்லை..இப்போ என்னடா பண்றது..?

ம்ம்ம் விநாயக் தன் வாயால எல்லாத்தையும் ஒத்துகிட்டா மட்டும்தான் இந்த கேஸ் முடியும்டா..பட் அதுக்கு எவ்ளோ நாள் ஆகும்நு தெரில..பாப்போம் என்ன பண்ணலாம்நு..

றுநாள் வேலைக்குச் சென்றவனிடம் சாக்ட்சி ஒழுங்காக பேசவில்லை..அமர்நாத்திடம் முந்தைய நாள் தான் கண்டுபிடித்ததை அறைகுறையாக கூறிவிட்டு தன் அறையில் வந்தமர்ந்தான்..ஏதோ சிந்தனையிலிருந்தவன் சரி பாயலை பாத்து நாளாயிடுச்சு அவள பாத்துட்டு வருவோம்..எதாவது அப்டேட் கிடைக்க சான்ஸ் இருக்கு என கெஸ்ட் கவுஸை நோக்கிச் சென்றான்..

வழக்கமாய் சந்திக்கும் ஜன்னல் அருகில் நின்று அவளை அழைக்க அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை நோக்கி வந்தாள்..சார் உங்களை தான் எதிர்பார்த்துட்டே இருந்தேன்..டூ டேஸ் முன்னாடி இங்க வர ரெண்டு பேரும் பேசிகிட்டாங்க சார்..என்னோட லவர்நு சொல்லி யாரோ என்ன பத்தின டிடெல்ஸை வாங்கிட்டு போய்ருக்காங்க..அது எப்படியோ அதர்வா சார்க்கு தெரியவந்திடுச்சு..நல்ல வேளையா அங்க செக்யூரிடீ கேமரா அன்னைக்கு ஒர்க் ஆகலை போல..அதனால யாருநு தெரியலையாம்..யாரா இருக்கும் சார்..

வேற யாரு நாங்கதான் பாயல்..அத வச்சுதான் உங்க வீட்டை கண்டுபிடிச்சு உங்க டைரிய வச்சுதான் ஒரு ஐடியாவே கிடைச்சுது..

ஓ,நானே நினைச்சேன் நீங்களா இருக்குமோநு..சரி நீங்க எதுக்கும் கேர்புல்லாவே இருங்க சார்..

ம்ம் ஓ.கே பாயல்..யு டேக் கேர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.