(Reading time: 22 - 44 minutes)

14. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

ராமின் அணைப்பில் இருந்தவள் தூக்கம் கலைந்து விழிக்க முதலில் எங்கு இருக்கிறோம் என்று குழம்ப தன்னவனை கண்டு நினைவிற்கு வந்தாள்..டெல்லிக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது..பிடிவாதமாய் கிளம்பியவள் அவள்தான் எனினும் ஏர்போர்ட்டில் அனைவரையும் பிரியும் நேரம் அழுது தீர்த்துவிட்டாள்..ராஜியும் ராஜசேகரும் என்னென்னவோ கூறி சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்..ராமோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்..உன்ன என்ன தண்ணியில்லா காட்டுக்கா கடத்திட்டு போறேன் இதோ இருக்கு டெல்லி..இவ்ளோ பீல் பண்றவ எதுக்கு இப்போவே வரணும்நு அடம்பிடிச்ச என வாரிக் கொண்டிருந்தான்..சாக்ட்சியும் பரணியும் சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டு அவளை சமாதான படுத்திக் கொண்டிருந்தனர்..

சாக்ட்சி அவள் வீட்டிற்கு போக மாட்டேன் என்று கூற நீ அங்கு இருந்தா தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணமுடியும்..கொஞ்ச நாள் தான் அப்பறம் அமர்நாத்திடம் பேசி திருமண ஏற்பாடுகள் பண்ணிவிடலாம் என்று சமாதானபடுத்தி மற்ற மூவரும் அவளை அனுப்பி வைத்தனர்..ராமும் மகியும் எவ்வளவு கூறியும் பரணி அவர்களோடு தங்க மறுத்துவிட்டான்..எனவே அருகருகே இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து கொண்டனர்..ஆனால் பரணிக்கு மூன்று வேளை உணவும்  இங்குதான் என மகி திட்டவட்டமாக கூறிவிட்டாள்..

இவ்வாறாக இந்த இரு தினங்களில் நால்வருமே ஒருவாறு டெல்லி வாழ்க்கைக்கு பழகத் தொடங்கியிருந்தனர்..மணியை பார்த்தவள் சிந்தனைகளை ஓரம் கட்டிவிட்டு மெதுவாக ராமிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்..குளித்து முடித்து காபியோடு தன்னவனை எழுப்ப அவனோ வழக்கம்போல் அவளை இழுத்து மடியில் படுத்து கொண்டான்..

கணவனின் இந்த செயலுகக்காகவே சீக்கிரம் எழுந்து கொண்டாலும் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் ராம் இதே வேலையா போச்சு உங்களுக்கு..ஆல்ரெடி நா லேட் அண்ணா சாப்பிட வந்துருவாரு எழுந்திரிங்க நா போய் டிபன் பண்ணணும் என போலியாக அலுத்துக் கொண்டாள்..

ஏ போடி உனக்கும் வேலையில்ல உங்கொண்ணணுக்கும் வேலையில்ல இதுக்காகவே அவனை சீக்கிரம் சாக்ட்சிகிட்ட தள்ளி விடனும்..ஊர்ல அஞ்சாறு அண்ணண் இருக்குறவங்கலா அமைதியாயிருக்காங்க ஒரே ஒரு அண்ணணை வச்சுட்டு நீ படுத்துறபாடு தாங்கல..என கண்களை திறக்காமலே பரணிக்கு அர்ச்சனையை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்..

அய்யய்யோ அண்ணா எப்போ வந்தீங்க..இவரு பேசினதெல்லாம் காதுல வாங்கிக்காதீங்க என கூறிக் கொண்டே போக அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான் ராம்..அவனைவிட்டு தள்ளிச் சென்று வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவள்.,எங்களையா கிண்டல் பண்றீங்க இப்போ நல்லா ஏமாந்தீங்களா என்று கூறி மறுபடியும் சிரிக்க..

குட்டிமா இன்னைக்கு நீ மாட்ன என்று அவளை ராம் துரத்த காலையிலேயே வீடு அமர்களமான போர்களமாயிருந்தது..

இது போன்று புதுமண தம்பதிகளுக்கே உரிய தீண்டல்களும் சீண்டல்களுமாய் நாட்கள் நகர அவர்களின் மறக்க முடியாத நாட்களாக அமைந்தது..ACPயிடமிருந்து எந்த தகவலும் வராததால் எந்த வேலையையும் ஆரம்பிக்கவில்லை ராம்..மகியோடு தன் ஒவ்வொரு நிமிடங்களையும் ரசித்து கழித்தான்..அன்று மாலை இருவரும் கோவிலுக்குச் சென்று வருவதாய் முடிவெடுக்க,மகி அவளுக்குப் பிடித்த  வெண்நிற பட்டுகட்டி தலைநிறைய பூ வைத்து கண்ணில் வரைந்த மையோடு வெளியே வர ராமோ மாயலோகத்தில் கட்டுண்டதை போல் உணர்ந்தான்..போலாம்ப்பா நா ரெடி என்றவாறு தன்னருகில் வந்து நின்றவளை தன்னோடு இழுத்து அணைத்தான்..

ராம் கோவிலுக்கு போகும் போது என்ன இதெல்லாம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.