(Reading time: 22 - 44 minutes)

ய்யோ அதெல்லாம் எதுக்கு…என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராம் எழுந்துவிட,ஒரு நிமிஷம்டா அவரு எழுந்துட்டாரு அவர்ட்ட குடுக்குறேன் என்று கூறி ராமிடம் கொடுத்தாள்..

அவனும் மகியை போல் முதலில் மறுத்தான் ஆனால் அமர்நாத்தே அழைத்ததாக கூறவும் அவனால் மறுக்க முடியவில்லை..வருவதாக கூறி போனை வைத்தவனை கேள்வியோடு பார்த்தாள்..

இல்ல குட்டிமா A.Kவே கூப்பிட்டிருக்கும் போது போகலைனா நல்லா இருக்காதுடா..

ம்ம் சரிப்பா…

மதியம் சாக்ட்சி கூறிய நேரத்திற்கு மகி பரணியோடு அமர்நாத் பவனை அடைந்தான் ராம்..(பின்ன சாக்ட்சி அவங்க ஆள பாக்க வேண்டாமாங்க)

டேய் பரணி மாமியார் வீடுடா வலது கால எடுத்துவச்சு வா..

ஏன்டா நீ வேற..அதப்பத்தி பேசதான் வர சொல்லிருப்பாளோநு நானே பீதில இருக்கேன்..மகிம்மா அப்படி எதாவது நடந்தா நீ தான்டா எனக்காக பொண்ணு கேக்கனும்..

அண்ணா கவலையே படாதீங்க நா பாத்துக்குறேன்..

சாக்ட்சி அவர்களுக்காகவே வாசலிலேயே காத்திருந்தாள்..மகியின் கையை பிடித்து கொண்டவள் கண்களாலேயே தன்னவனை வரவேற்றாள்..

நானும் இங்கதான்ம்மா இருக்கேன் தெரியுதா??-ராம்..

அண்ணா,…

அவர்களோடு பேசியபடியே டைனிங் ஹாலை நோக்கி அழைத்துச் சென்றாள் சாக்ட்சி..அமர்நாத் ஏற்கனவே அங்கே அமர்ந்திருக்க,தாத்தா அவங்கலா வந்துட்டாங்க என்றபடி அருகில் சென்றாள் சாக்ட்சி..அவரை முதன்முதலாக பார்க்கும் மகியும் பரணியும் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் நிற்க,ராம் தான் அவர் அருகில் சென்று கை குலுக்கினான்..

எப்படி இருக்கீங்க A.K??

ம்ம் நல்லாயிருக்கேன் ராம்..வாம்மா மகி..அண்ட் ஹலோ பரணி என சிநேகமாய் சிரிக்க..அதே நேரம் ராமின் கண்ஜாடை உணர்ந்து அவனோடு சேர்ந்து அவரின் பாதம் பணிந்தாள் மகி..

ஹாப்பி மேரீட் லைப் ராம் அண்ட் மகி..காட் ப்லெஸ் யூ போத்..

பரணி பார்மலாக கை குலுக்கிக் கொண்டான்..சாக்ட்சி அனைவருக்கும் உணவு பரிமாற அனைவருமே ஓரளவு சகஜ நிலைக்கு வந்திருந்தனர்..அமர்நாத் பேசும்விதம் மகிக்கும் பரணிக்கும் ஆச்சரியமாய் இருந்தது..எந்த ஒரு ஈகோவுமின்றி சாதாரண மனிதராய் இருந்தார்..

என்னம்மா மகி டெல்லிலா செட் ஆய்டுச்சா.??

ம்ம் ஏதோ பரவால்ல..இருந்தாலும் தமிழ்நாடு போல வருமா தாத்தா??என்று கூறிவிட அனைவரின் ஆச்சரிய பார்வையும் பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் அவரை எப்படி அழைத்திருக்கிறோம் என்று உரைத்தது..நாக்கை லேசாக கடித்தவள்..சாரி வாய்தவறி வந்துடுச்சு..பட் சாக்ட்சி எனக்கு ப்ரெண்ட் அப்போ நானும் உங்களை தாத்தாநு தானே கூப்பிடனும்..கரெக்ட் தான என்று அவரையே கேட்க..ராமிற்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை..

அமர்நாத்தோ வாய்விட்டே சிரித்தார் சாக்ட்சியே அவர் இப்படி சிரித்து பார்த்ததில்லை..ராம் கல்யாணம்நு சொன்ன..ஆனா சைல்ட் மேரேஜ்நு சொல்லவேயில்லையே என்று கூற அந்நேரம் நீர் அருந்திக் கொண்டிருந்த பரணிக்கு அதை கேட்டு புரையேற எக்கச்சக்க கோபத்தோடு அவனை முறைத்தாள் மகி..ராமும் லேசாக சிரித்துவிட யாரும் அறியாவண்ணம் அவன் கையை கிள்ளினாள்…

உனக்கு எப்படி கூப்பிடனுமோ கூப்பிடும்மா..நீயும் எனக்கு பேத்தி மாறிதான்..ரொம்ப வருஷமாச்சு நா இப்படி சிரிச்சு..ராம் உன் மனசுக்கேத்த மாதிரி நல்ல பொண்ணா அமைஞ்சுருக்கு ரொம்ப சந்தோஷம்..சாக்ட்சிக்கும் இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுத்துட்டா என் பொறுப்பு முடிஞ்சுரும்..ம்ம்ம் அவளுக்குநு பொறந்தவன் எங்க இருக்கானோ..

அதான் இவ்ளோ பெரிய உருவமா உங்க பக்கத்துல உக்காந்துருக்காரே தாத்தா என்று மகி பரணியை காட்டிவிட்டு அவள் போக்கில் சாப்பிட பரணி இடத்தைவிட்டு எழுந்தேவிட்டான்..அடிப்பாவி இப்படி கோர்த்துவிட்டாளே..ராம் காப்பாத்துடா என்ற ரீதியில் நண்பனை பார்க்க ராம் ஏதோ கூறுவதற்கு வாயை திறக்க..

என்ன சாக்ட்சி இன்னும் சொல்லலையா என்று கூறி மேட்சையே முடித்துவிட்டாள் மகி,

சாரிடா மச்சான் இனி கடவுள்தான் உன்ன காப்பாத்தனும்..-ராம்..

என்ன சாக்ட்சி மகி என்ன சொல்றா??-அமர்நாத்

தாத்தா அது வந்து…

நா சொல்றேன் அத..இப்போ நீங்க எப்படி எனக்கு தாத்தாவோ அதே மாறி கடந்த ஆறேழு மாசமா  பரணி எனக்கு அண்ணா..ரொம்ப நல்லவரு..உங்க பேத்திய கண்கலங்காம வச்சு காலம்பூரா காப்பாத்துவாரு..அக்மார்க் குத்தப்படாத கண்ணியவான்..இதெல்லாத்துக்கும் மேல சாக்ட்சிக்கும் அவரை பிடிச்சுருக்கு தாத்தா..இனி முடிவை நீங்கதான் சொல்லனும்..சாக்ட்சி எனக்கு அந்த ஸ்வீட் மட்டும் வைக்குறியா ப்ளீஸ்..

ஹாங்ங்ங்ங்ங்..-சாக்ட்சி..

ராம் மகி சொல்றதெல்லாம்..

அது…ஆமா A.K.. அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க..சாக்ட்சி எனக்கு தங்கை மாதிரி அவ லைவ் நல்லாயிருக்கனும்னு மனசார நினைக்குறேன்..அதே நேரம் பரணிய கல்யாணம் பண்ணிகிட்டா சந்தோஷமாகவும் இருக்கும்..

சாக்ட்சியை ஏறிட்டவருக்கு அவளின் கண்களின் தவிப்பே அவள் காதலைஉணர்த்த,என்ன பரணி எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்..?

சார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.