(Reading time: 22 - 44 minutes)

காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்

காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு

தூற்றினை யொத்த இதழ்களும்-நில

வூறித் ததும்பும் விழிகளும்-பத்து

மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்

விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக்                                     (காற்று வெளி)

 

நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த

நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்

போயின போயின துன்பங்கள்-நினைப்

பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்

வாயினி லேயமு தூறுதே-கண்ணம்

மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்

தீயினி லேவளர் சோதியே!-என்தன்

சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக்                              (காற்று வெளி)

 

கேட்டவளோ இன்னுமாய் நெருங்கி அணைத்தாள் தன்னவனை..பாரதியார் கவிதைகள்னா எனக்கு ரொம்ப இஷ்டம் குட்டிமா..இந்த கவிதையை படிக்கும் போதெல்லாம் நினைச்சுருக்கேன் காதல் ஒருத்தனை இந்த அளவு சிந்திக்க வைக்குமாநு..ஆனா என்னைக்கு நீ என் மனசுல வந்தியோ அதுக்கப்பறம் அதில் சொன்னமாதிரி உன்னைத் தாண்டி எதையுமே யோசிக்கமுடிலடா..எத்தனையோ தடவை உன்கிட்ட பேசுறத கம்மி பண்ணணும்னு நினைச்சுருக்கேன் ஆனா எல்லாமே உன்ன பாக்குற வரைதான்..அதுக்கப்பறம் நா என்ன பண்றேன் என்னனு ஒண்ணுமே தெரியாது..இவ்ளோ பெரிய கவிதையா நா சொன்னத சுருக்கமா சொல்லனும்னா,” you sweep me off my feet”..என்று கூறி பெண்ணவளை மேலும் நாணத்தில் தள்ளினான்..இப்போ சொல்லு நீ சந்தோஷமாயிருக்கியா??

ஷாட் அண்ட் ஸ்வீட்டா சொல்லனும்னா இப்போ இந்த நிமிஷம் என்னவிட சந்தோஷமானவவங்க இந்த உலகத்திலே யாரும் இருக்க முடியாதுப்பா..உங்களை முதன்முதலா பாத்தப்போவே ஏதோ ஒரு ஸ்பார்க் எனக்குள்ள..பட் அது காதலா இருக்கும்நு நெனைக்கல..ஆனா பரணி அண்ணா சொன்னப்பறம் தான் என் மனசே எனக்கு புரிய ஆரம்பிச்சது..நிஜமா நா ரொம்ப ரொம்ப லக்கிப்பா..நா ஏற்கனவே சொல்லிருக்கேன்ல என் லைவ்ல ஆண்களோட ரோல் ரொம்ப கம்மி ஆனா அப்பா,அண்ணா,தம்பி,ப்ரெண்டுனு நா மிஸ் பண்ண அத்தனை உறவுகளோட உயிர்வடிவம்தான் ராம் நீங்க..அதனால நா என் ஆயுள் முழுமைக்கும் சந்தோஷமா மட்டும் தான்ப்பா இருப்பேன்..அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று கண்சிமிட்டி சிரிக்க,அதை கேட்டவனின் மனநிறைவை அவளிடம் பறைசாற்றின அவனின் இதழ்கள் முத்தங்களின் வடிவில்..நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்க.,திடீரென மகி எழுந்து ராமை பாவமாய் பார்த்தாள்..

என்ன குட்டிமா என்னாச்சுடா??

பசிக்குதுப்பா..

அப்போதுதான் ராமிற்கு நினைவே வந்தது அவர்கள் இரவு உணவே உண்ணவில்லையென..அய்யோ சாரிடா உன்ன சாப்டகூட விடாம..ம்ம்ம் சரி வா மொதல்ல என வேகமாய் சமையலறை நோக்கிச் செல்ல,அவனை பின் தொடர்ந்தாள் மகி.. இரவு 2 மணி ஆகியிருந்தது..இரவுக்கென அவள் செய்து வைத்திருந்த சப்பாத்தியும் சப்ஜியும் ஊசிப் போவதற்கான அறிகுறியை காட்ட..மகி நீ உக்காரு நா நூடுல்ஸ் பண்ணித் தரேன் 5 நிமிஷம்டா..அதெல்லாம் வேண்டாம்ப்பா நா பண்றேன் நீங்க உக்காருங்க..

ஹலோ நாங்களும் சமைப்போம்..நூடுல்ஸ் என்ன பெரிய விஷயமா உக்காரு..டைனிங் டேபிளில் அமர்ந்து ராம் சமைப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்..சமையலை முடித்து டேபிளில் கொண்டு வந்து வைத்தவன்,தன்னவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்,மறுப்பேதும் கூறாமல் வாங்கி கொண்டாள்..இருவரும் சாப்பிட்டு முடித்து ராம் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வருவதற்குள் மகி டேபிள்லில் சாய்ந்தவாறு உறங்கி விட்டிருந்தாள்..எழுப்ப மனமின்றி அவளை மெதுவாய் கைகளில் ஏந்தியவன் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அருகில் சாய்ந்தவாறு அமர்ந்தான்..ஏனோ தன்னவளை பார்த்துக் கொண்டே இருக்க தோன்றியது..இரவின் நிசப்தமா,தூக்கமின்மையா ஏனென்று தெரியவில்லை ஏதோ தன்னுள் ஒரு பதட்டம் குடிகொள்வதாய் உணர்ந்தான்..ஏதோ நடக்கப் போவதை போன்று உணர்ந்தான்..ச்சச இவ்வளவு நேரம் நார்மலா தான இருந்தேன் தீடீர்நு என்னாச்சு..தேவையில்லாம மனசை குழப்பிக்கிறோமோ..கடவுளே எல்லாம் நல்லதா இருக்கனும் என்று வேண்டிக் கொண்டு மகியின் கை கோர்த்தபடி உறங்கினான்..

சூரியனின் கதிர்கள் அறையினுள் நுழைய தூக்கம் கலைந்தாள் மகி..முந்தைய நாளின் நினைவில் கன்னம் சிவந்தவள்,மெதுவாய் எழுந்து தன் பணிகளை ஆரம்பித்தாள்..ராமை எழுப்புவதற்காக அவவள் அறைக்கு வரவும் ராமின் கைப்பேசி ஒலிக்கவும் சரியாய் இருந்தது..அதனை எடுத்து பார்த்தவள் சாக்ட்சியின் பெயரை பார்த்ததும் அவளே அழைப்பை ஏற்றாள்..

ஹாய் சாக்ட்சி..

குட் மார்னிங் அண்ணி..சாரி மார்னிங்கே டிஸ்டபர்ப் பண்ணிட்டனா??

ஹே அதெல்லாம் ஒண்ணுமில்லைடா..அவரு தூங்கிட்டு இருக்காரு அதான் நா அட்பண்ணேன்..

ஓ..சரி அண்ணி இன்னைக்கு நீங்களும் அண்ணாவும் லஞ்ச்க்கு இங்க வந்துருங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.