(Reading time: 22 - 44 minutes)

வன் காதில் எதுவும் விழுந்ததாகவே தெரியவில்லை..கை விரல்கள் அவளின் முகத்தில் கோலமிட அவன் பார்வை தொட்டு நின்றது அவளின் ஈர செவ்விதழ்களில்..இதழ் நோக்கி அவன் குனிய தடுப்பதற்க்கு கூட தோன்றாமல் விழி மூடி நின்றாள் பெண்ணவள்..இருவரின் மூச்சு காற்றும் உரசி கொள்ள சரியாக ஒலித்தது ராமின் கைப்பேசி..மகியின் பெண்ணுணர்வு விழித்துக் கொள்ள வேகமாக அவனைவிட்டு தள்ளி நின்றாள்..போனை சபித்துக் கொண்டே அட்டெண்ட் செய்ய மறுமுனையிலோ க்ரெடிட் கார்ட் வேணுமா என்று கேட்க நொந்து கொண்டான் தன் நிலையை..மகியோ நாணத்தோடு விழி தாழ்த்தி நிற்க பாவமாய் அவள் கைபிடித்து,கண்டிப்பா கோவில் போனுமா குட்டிமா??

அவளின் கார பார்வையில் வாயை மூடிக் கொண்டு வாசலை நோக்கிச் சென்றான்..பின் இருவரும் பைக்கில் கோவிலை நோக்கி புறப்பட கண்ணாடி வழியே அவ்வப்போது தன்னவளை ரசிப்பதை நிறுத்தாமல் இருந்தான்..கோவிலினூள் நுழைந்து மனமாற வேண்டிக் கொண்டு திரும்பும் வழியில் லேசாக மழைத்தூரல்கள் போட,அவர்கள் வீட்டை அடைவதற்குள் வலுவடைந்து இருவரும் தொப்பலாக நனைந்துவிட்டனர்.. வீட்டினுள் நுழையும்போதே ராமை பரணி மொபைலில் அழைக்க அழைப்பை ஏற்று பேசியவாறே காலணிகளை கழட்ட தன் தலைமுடியை காயவைத்த வாறே உள்அறைக்குச் சென்று இருவருக்கும் மகி துவட்ட துண்டு கொண்டு வந்தாள்..ராம் அப்படியே நின்று பேசுவதை கவனித்தவள் வேகமாய் அவனை நோக்கிச் செல்ல புடவையின் ஈரத்தின் காரணத்தால் கால்தடுக்கி விழப் போனவளை தாங்கிப்பிடித்தான் ராம்..முகத்தில் மழைநீர் துளிகளாய் மின்ன,சில்லிட்டிருந்தஉடலை தாங்கிப் பிடித்தவனுக்கோ உலகமே மறந்துவிட்டிருந்தது..தன்னவளை பூமாலையாய் கைகளில் அள்ளியெடுத்து தனதறை நோக்கிச் சென்றான்..தன் காதலை அணைப்பால் உணர்த்த எண்ணிணானோ அப்படி ஒரு இறுக்கம் அதில்..கைச் சிறைக்குள் இருந்தவள் லேசாக தன் மூடியிருந்த கண்களை சிமிட்ட அவனின் பிடி சற்று தளர்ந்தது..மிக சிறிய அளவே..எனினும் பெண்ணவளுக்கோ,என் முக பாவனை புரிகிறதென்றால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறானா,என்ற எண்ணம் தோன்ற அதற்காகவே காத்திருந்தது போல் கண்ணடித்து சிரித்தான் ராம்..வெட்கம் பிடுங்கித்திங்க தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்..

குட்டிமா இங்க பாரேன்..மறுப்பாய் தலையசைத்தாள்..

பாருடா..

மெதுவாய் விழி உயர்த்தி தன்னவனை பார்த்தாள்..

இதுக்குதான்டா சொன்னேன் டெல்லிக்கு சீக்கிரம் வர வேண்டாம்நு இப்போ பாரு என் குட்டிமா தான் கஷ்டபடுறா என வருத்தப்பட..

ரொம்ப மோசம் ராம் நீங்க என்று அவள் செல்லம் கொஞ்ச அவ்வளவுதான் நம்ம ஹீரோ சார்க்குள்ள ஒட்டிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச நல்லவனும் காணாமல் போக..தன்னவளோடு மெத்தையில் சரிந்தான்..டீவியின் ரிமோட் தவறுதலாக ஆன் ஆகிவிட அவர்கள் காதல் தேடலை மேலும் இனிமையாக்க திரையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

ஒளியில் மின்னொளியில் என் வளையலும் இடிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்

போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆள்வாசம்

சகாயமே உன் அருகினில் இளைப்பாறுவேனே
தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே

ராமின் அரவணைப்பில் இருப்பது ஏனோ இனம்புரியா நிம்மதியை அளித்தது மகிக்கு..தன்னவளின் கேசத்தை வருடி கொண்டிருந்தான் ராம்..மகி..

ஹம்ம்ம்ம்…

ஹாப்பியா இருக்கியாடா??

அவன் மார்பில் தாடையை வைத்து அவனை ஏறிட்டவள்..கல்யாணம் ஆகி இருபது நாள் தான் ஆகுது அதுகுள்ள என்னப்பா இப்படி ஒரு கேள்வி??

மகியின் முக்கு நுனியை தட்டியவன்,இல்ல குட்டிமா நா உன் லைவ்ல வந்தப்பறத்துல இருந்து சந்தோஷமாயிருக்கியாநு கேட்டேன்..

இதே கேள்விய நா கேட்டா??

ராட்சசிடீ நீ..நா கேட்டதை எனக்கே கேட்குற..

நீங்க பதில் சொல்லுங்க அப்பறம்தான் நா சொல்லுவேன்..

அவள் உச்சிதனை முகர்ந்தவன்..ம்ம் எனக்கு பிடிச்ச ஒரு கவிதையா சொல்லவா??ஆர்வமாய் அவள் கண்சிமிட்ட..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.